Header Ads



அமெரிக்காவை நேரடியாக எதிர்த்த, ஒரே சவுதி அரபிய மன்னர்

-Mohamed Safeer-

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க 1973ல் அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த போரில் இஸ்ரேலை ஆதரித்த மேற்குலக நாடுகளுக்கு கச்சா எண்ணையை நிறுத்தபோவதாக அறிவித்தார் அன்றைய சவுதி அரபிய மன்னர் ஃபைசல்.

அதற்கு பதிலடியாக அமெரிக்கா சவுதி அரபியாவின் எண்ணை வயல்களில் குண்டு வீசி அழிப்போம் என்றவுடன்

அதற்கு பதில் கொடுத்த மன்னர் ஃபைசல்,

அமெரிக்காவால் எண்ணை இல்லாமல் வாழ முடியாது, ஆனால் நாங்கள் பாலைவனத்தில் வாழ்பவர்கள் எங்கள் பேரிச்சை பழங்களும் ஒட்டக பாலும் குடித்தே வாழ்ந்தவர்கள்,

அரபியர்களால் பிற்காலத்துக்கு போக அமெரிக்காவால் என்று அமெரிக்காவை நேரடியாக எதிர்த்த சவுதி அரபிய மன்னர் ஃபைசல் மட்டுமே,

அமெரிக்காவின் நிறவெறியை எதிர்த்த புரட்சியாளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு அளித்தால் அமெரிக்கா அன்று சவுதி அரபிய மன்னர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தது குறிப்பிடதக்கது.

ஆனால் இன்றைய சவுதி அரபிய ஆட்சியாளர்களுக்கு ஆடம்பரமும் அமெரிக்காவின் ஆதரவு நிலை மட்டுமே அமெரிக்காவால் யார் பாதிக்கபட்டாலும் அதை கண்டும் காணாமலும் இருப்பவர்கள் இன்றைய சவுதி ஆட்சியாளர்கள் என்பதே உண்மை

4 comments:

  1. "நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும், பாலைக் குடித்தும் வாழ்ந்தவர்கள். மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பழத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"

    மன்னர் பைசல் (ரஹீமஹுல்லாஹ் ) அவர்கள் "இஸ்ரேலுக்கு" எதிரான ஒக்டோபர் யுத்தத்தின் போது, மேற்கு நாடுகளுக்கு "பெட்ரோல்" விநியோகிப்பதை "நிறுத்திய" போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.

    இந்த வார்த்தையை மன்னர் சொல்லியது மட்டுமல்லாமல் நிகழ்த்தியும் காட்டினார்.

    இதை கேள்விப்பட்ட அமெரிக்க அரசாங்கம் அன்றைய வெளிவிவகார செயலாளரான கேஸ்பர் வேயன்பேர்கரை உடனே சவூதிக்கு விளக்கம் கேட்க அனுப்பியது. அப்போது மன்னர் இருந்தது கொதிக்கும் பாலைவனத்தில்...., எந்தவித வசதிகளுமற்ற பந்தலில் (Tent).

    மன்னரை சந்திக்க சென்ற வேயன்பேர்கேர் தனது குளிரூட்டப்பட்ட வாகனத்தில், காலை வெளியே வைத்த மறுகணமே உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டார்.அவ்வளவு கொதிக்கும் வெப்பம். மன்னரை காருக்குள் வரச் சொல்லியும் மறுத்து விட்டார்.

    மன்னர் பைசலுக்கு தேவைப்பட்டதெல்லாம் எந்த சொகுசுமில்லாமல் எங்களால் எவர் தயவுமின்றி வாழ முடியும் என்று அமெரிக்கர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே..... ஆனால் நடந்தது வேறு!

    வேயன்பேர்கேர் அமெரிக்கா திரும்பும் முன்னர் ஒரு வார்த்தையை மன்னரிடம் சொல்லி விட்டு சென்றான். அந்த மந்திர வார்த்தை YOU WILL HAVE TO PAY FOR THIS என்பதுதான்.

    மன்னர் கொடுத்த விலை....... அவரது உயிர்!

    அமெரிக்க சதியினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    ReplyDelete
    Replies
    1. Yaa Allah! King faizal udaya mannarayai suwarkathin poonjolayaakkuwayaaga.

      Delete
    2. சுப்ஹானல்லாஹ்...
      இப்படியொரு சம்பவத்தை இன்றுதான் அறிந்தேன்.

      இஸ்லாமியனுக்கு உயிர்ப்பயம், வாழும்ஆசை அதிகரித்ததின் விளைவே இன்றய நிலை...

      Delete
  2. InshaAllah Islamic world to say repeat to zeonist YOU WILL HAVE TO PAY FOR THIS and to midleast kings criminals as KSA,UAE,EGYPT and BAHRAIN. My dear sisters and brothers ask DUA to ALLAH save peure Islamic ummath and good Islamic leaders.

    ReplyDelete

Powered by Blogger.