Header Ads



ஞானசாரருக்கு அடைக்கலம் கொடுப்பது நல்லாட்சியே - ஒரு அமைச்சர் அல்ல

ஞானசார தேரரின் பின்னால் ஒரு அமைச்சர் இருப்பதாக கூறுவது வெறும் பூச்சாண்டி, நல்லாட்சியே இருக்கிறதுஎன்பதை அரசு ஒத்துல்க்கொள்ள வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான்குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது..

பொதுபல சேனாவை உறுவாக்கியவர்கள் மஹிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறியவர்களே அவர்களைஉறுவாக்கி  முஸ்லிம்கள் மீது ஏவி விட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளமை இப்போது முஸ்லிம் மக்களுக்கு தெளிவாகியுள்ளது.

இன்று ஞானசார தேரர் விடயத்தில் பொலிஸாரும் அரசும் நடந்துகொள்ளும் விதங்களைப் பார்க்கும் போது ஒருஅமைச்சர் பின்னணியில் இருப்பதாக கூறுவதை வெறும் பூச்சாண்டியாகவே மக்கள்  கருதுகின்றனர். 

கடந்த ஓரிரு வாரங்களுக்குள் பல தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன பொதுபல சேனாவை பொலிஸார்விசாரணை செய்யவில்லை மூன்று தடவைகள் நீதிமன்றுக்கு வராத ஒருவருக்கு  நீதிமன்றம்  பிடியாணை பிறப்பிக்கவில்லை. இவற்றை எல்லாம் ஒரு அமைச்சரால் செய்யமுடியாது ஒரு அரசாங்கத்தாலே செய்யமுடியும் என்றே நாம் கருதவேண்டியுள்ளது.

ஞானசார தேரரை அரசாங்கம் பாதுகாக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாமல் ஒரு அமைச்சர் எனபழிபோட்டு இந்த விடயத்தை திசை திருப்ப முயற்சித்தபோதும் நல்லாட்சி அரசே அவரை பாதுகாப்பது தொடர்பில்முஸ்லிம் மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்  என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Brother bodubala sena was created by GHOTHA .WE AGREED FOR THIS.

    ReplyDelete
  2. Where is the Law of the land? Why doesn't the that law isn't enforced? Where are the law enforcement authorities? Does the so called 'Yahapalanaya exist?

    ReplyDelete
  3. உண்மை உண்மை உண்மை

    ReplyDelete
  4. An ex pradeshya sabha chairman has a separate media unit also..umm.. exciting..

    There is no doubt on the former and current government inactivity with regard to BBS and other extremists.

    Hope your media unit has issued press notices during pre Jan 8'15 era also.

    ReplyDelete

Powered by Blogger.