Header Ads



இலங்­கையில் பள்­ளி­வா­சல்­, முஸ்­லிம்­ வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை கண்­டிக்­கத்­தக்­கது

 -ARA.Fareel-

இலங்­கையில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நட­வ­டிக்­கைகள் கண்­டிக்­கத்­தக்­கது என்று தெரி­வித்த ஐரோப்­பிய யூனியன் உள்­ளிட்ட 7 நாடு­களின் தூது­வர்கள் சட்­டமும் ஒழுங்கும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யதை வலி­யு­றுத்­தினர். குற்­ற­வா­ளிகள் நீதியின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் எனவும் தெரி­வித்­தனர்.

நேற்று மாலை 7 நாடு­களின் தூது­வர்­களும் இரா­ஜ­தந்­தி­ரி­களும் கொழும்பு தெவட்­ட­கஹ பள்­ளி­வா­ச­லுக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

அத்­துடன், மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சாஹிர் மெள­லானா, தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத்­சாலி, ஆர்.ஆர்.ரி. அமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் உட்­பட சிவில் சமூக பிர­தி­நி­தி­களைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். அச்­சந்­தர்ப்­பத்­திலே அவர்கள் இவ்­வா­றான கருத்­தினை வெளி­யிட்­டனர்.

இந்தச் சந்­திப்பில் ஐரோப்­பிய யூனியன், அவுஸ்­தி­ரே­லியா, கனடா, நெதர்­லாந்து, நோர்வே, கிழக்­கா­சியா மற்றும் சுவிட்­சர்­லாந்து ஆகிய நாடு­களைச் சேர்ந்த தூது­வர்கள் கலந்து கொண்­டனர்.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வெறுப்­பு­ணர்வை தூண்டும் செயல்­களை கண்­டித்­துள்­ள­மையை தூது­வர்கள் வர­வேற்­றனர். தமது ஒரு­மைப்­பாட்­டி­னையும் தெரி­வித்­தனர்.

ஐரோப்­பிய யூனி­யனின் தூதுவர் மார்­குயு கருத்துத் தெரி­விக்­கையில், தேசிய நல்­லி­ணக்­கமும் ஒரு­மைப்­பாடும் பொறு­மையும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் சந்­தர்ப்­பத்தில் இச் செயல்கள் முரண்­பா­டு­களை பரவச் செய்­கின்­றன.

இந்­நி­லையில் அர­சாங்­கமும் பொலிஸும் வெறுப்பு செயல்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதை உறுதி செய்­வது முக்­கி­ய­மா­ன­தாகும். பல்­வேறு மதங்­களைச் சேர்ந்த சமூ­கங்கள் தங்­க­ளுக்குள் புரிந்­து­ணர்­வினை வளர்ப்­ப­துடன் பர­வி­வரும் வெறுப்­பு­ணர்­வு­க­ளுக்கு எதிர்ப்­பு­களைத் தெரி­விக்க வேண்டும். இது முக்­கி­ய­மா­ன­தாகும்.

சட்டம் ஒழுங்­கினை பக்­க­சார்­பாக நடத்த முற்­பட கூடாது. அது ஜன­நா­ய­கத்­திற்கு உரி­யது அல்ல. இலங்­கையில் இன முரண்­பா­டுகள் தொடர்பில் மூவின மக்­க­ளுக்கும் நன்கு அனு­பவம் உள்­ளது. எனவே இந்த விட­யத்தில் அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சந்­திப்­பின்­போது சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தொடரும் நட­வ­டிக்­கை­களைத் தெளி­வு­ப­டுத்­தினர். ஆர்.ஆர்.ரி.அமைப்பின் தலைவர் சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளிடம் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான மகஜர் ஒன்­றி­னையும் கைய­ளித்தார். அத்­துடன் இங்கு வந்த தூது­வர்கள் அனை­வரும் கூட்­டாக தமது கண்­ட­னத்தை தெரி­வித்­தனர். 

No comments

Powered by Blogger.