Header Ads



'ஹக்­கீமை கைது­செய்ய அர­சாங்கம் தயங்­காது'

கிறிஸ்­தவ மதத்­த­லங்­களும் தாக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளி­யிட்­டுள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் நிலையில் அவ­ருக்கு எதி­ராக எவ­ரா­வது முறைப்­பாடு தெரி­விக்கும் பட்­சத்தில் அவரை கைது செய்­யவும் அர­சாங்கம் தயங்­காது எனவும் நீர்ப்­பா­சன இரா­ஜாங்க அமைச்சர் பாலித்­த­ரங்கே பண்­டார தெரி­வித்தார். 

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்­சியில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி சக­ல­ரையும் ஒன்­றி­ணைத்து நாட்டை அபி­வி­ருத்­தியை நோக்கி இட்டுச் சென்று கொண்­டி­ருக்­கையில் அதனை சீர்­கு­லைக்கும் வகையில் சில இன­வா­திகள் செயற்­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அண்மைக்­கா­ல­மாக நாட்டில் இன­வாதம் தலைதூக்க ஆரம்­பித்­துள்­ளது.

இன­வாதம் நாட்டில் எவ்­வா­றான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை எமது நாட்டின் வர­லாற்றை நோக்கும்போது தெளி­வாகப் புரியும். 1970களில் முஸ்லிம் மக்­க­ளுக்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. இது பின்னர் கல­வ­ர­மாக வெடிக்க புத்­தளம் மாவட்­டத்தில் வாழ்ந்த முஸ்­லிம்கள் பெரும்­பா­லான பாதிப்­புக்­களை எதிர்­நோக்­கி­ய­துடன் பலர் இதன்­போது உயி­ரி­ழந்­தனர். அங்கு வசித்த ஏனை­யோ­ரி­னது பாது­காப்­புக்கும் பங்கம் ஏற்­பட்­டது.

நடை­மு­றையில் இருக்கும் அர­சி­ய­ல­மைப்பில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்­ப­தையே சக­லரும் விரும்­பி­னார்கள். தற்­போது அதனை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிகள் மேற்­கொள்ளும் வேளையில் அதனை சிலர் இன­வா­தத்தை விதைத்து தடை செய்ய முயற்­சிக்­கின்­றனர். ஆகவே இன­வா­தி­களே நாட்டை பிள­வு ­படுத்த முயற்­சிக்­கின்­றனர்.

கடந்த காலத்தில் ஆளும் கட்­சியில் இருந்து அரச சொத்­துக்­களை முறை­கே­டாக பயன்­ப­டுத்­தி­யது மாத்­தி­ர­மல்­லாமல் தற்­போது எதிர்க்­கட்­சியில் இருந்து தாம் செய்த தவ­று­க­ளுக்­கான  வழங்கப்பட்ட நீதியை எதிர்த்தும் அதனை விமர்சிப்பதும் சட்ட விரோத செயலாகும். 

அமைச்சர்  ரவூப் ஹக்கீம் 160 கிறிஸ்தவ மதத்தலங்கள் தாக்கப் பட்டுள்ளதாக அன்மையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன.

இது குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

விடிவெள்ளி

3 comments:

  1. மிச்ச சந்தோசம்... முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்காமல் " பரந்த மனசு உள்ளவர் என்பதால்" கிறிஸ்தவர்களுக்கு குரல்கொடுத்ததற்காக சிறை சென்றார்.. என்று பெயரெடுத்து... அடுத்தமுறை அவர்களின் வாக்குகளிலாவது நாடாளுமன்ற கதிரையை அடையலாமே.. அவருக்கு "கோழி முடமாக இருந்தா என்ன குருடாக இருந்தா என்ன, குழம்பு ருசியாக இருந்தா சரிதானே"!

    ReplyDelete
  2. You can arrest all Muslim MPs and Ministers. We do not care.

    ReplyDelete
  3. Wow good news , Ramadan gift for Muslims .. first arrest him and put inside ..no use for Muslim community

    ReplyDelete

Powered by Blogger.