June 15, 2017

எனக்கு, கட்சி முக்கியம் அல்ல - விக்னேஸ்வரன்

சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

வெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் என்னிடம் இருப்பதால் எல்லோரையும் நம்பியிருந்தேன். இந்த எண்ணத்தில் தொடர்ந்தும் இருக்கிறேன்.

வடமாகாண சபையின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானதாக காணப்படுகின்றது. அதனால் அரசியில் கட்சிகளுடன் கூடிய தொடர்புகளை நான் பேணுவதில்லை. சிந்தனையில் நாம் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள்.

இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமானது. ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என இரா.சம்பந்தன் என்னிடம் வினவினார்.

ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்க சாட்சியாளர் விரும்புவதாகவும் அதேபோல் அவர்களுக்கு எதிராக மேலும் பல புதிய எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நான் சம்பந்தனிடம் கூறினேன்.

எனவே அந்த இருவரும் தொடர்ந்தும் அமைச்சு பதிவிகளில் இருக்கலாம் எனவும் ஆனால் அவர்கள் அமைச்சின் அலுவலகங்களுக்கு செல்ல கூடாது எனவும் சம்பந்தனிடம் எடுத்து கூறியிருக்கிறேன்.

ஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவறு என்று எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதில் தவறில்லை. அது சரியானது தான் என்று நான் அவருக்கு தெரிவித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அதாவது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் எனக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

7 கருத்துரைகள்:

வளர்த்த கடாய் மார்பில் பாயும்

இவன் பதவி பறந்துவிட போகின்றது என்றவுடன் நடவடிக்கையில்லையாம். இதுதான் அரசியல்

பாலுட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி இரா.சம்பந்தன் வளர்த்த பச்சை கிளி நாளை வரும் கச்சேரிக்கு.சொல்லட மாவை சொல்லட.


"சிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள்"
அற்புதமான வார்த்தைகள்

எல்லா அரசியல்வாதிகளுக்கும் நல்ல முன் உதாரணம் விக்கி. மற்றைய மாகாணங்களிலும் மத்திய அரசிலும் ஊழள்கள் தான்.

இது தவிர, விக்கி வடக்கில் சட்ட விரோத குடியேற்றங்கள், காடழிப்புகள் எல்லாம் நன்றாக குறைத்துவிட்டார்.

ஞானசேர பிக்குகள் (BBS) ஆரம்பத்தில் வடக்கில் தான் புத்தர் சிலைகள் வைத்தார். இப்போது கிழக்கில் சிலைகளை வைத்து காணி பிடிக்கிறார்கள், கிழக்கு CM யால் தடுக்க முடியவில்லை. ஏனெனில் கிழக்கு CM பலகீனமாவராக இருக்கவேண்டும் அல்லது ஊழள் போர்வளியாக இருக்கவேண்டும்.

If you do the right thing, you don't need scare to anyone.

We may not agree him with Muslim Issues, but he is not a currupted politician.

@ajan antony
100%சரி
வடமாகணத்தில் நிலஆக்கிரமிப்புகளை குறைத்தவர் Cv.
மேலும் அரசிற்கு தொடடர் அழுத்தங்களை கொடுத்து நிலங்களை மீட்டார்.
Cv இ.ருப்பதால் வடக்கை ஆக்கிரமிக்க பேரினவாதிகளால் முடியவில்லை.
இவர் வந்த பிறகு வடக்கில் மத்திய அமைச்சர்கள் கூட இஸ்டம் போல் ஊழல் செய்ய முடியவில்லை.இதனால் இவரை இனவாதியாக சித்தரிதக்க பல அரயல் வாதிகள் முயன்றனர்.
பல காலமாக கரையோர மாவட்டம் என்றும் ததென்கிழக்கு என்றும் பீலா விட்ட முஸ்லீம் அரசியல் வாதிகளுக்கு விக்கி தீர்வுதிட்ட முன்மொழிவீல் தனி அதிகர அலகு என்று கூறியதும் தமது அரசியல் வியாபாரம் பாதிக்கப்படும் என்று பயந்த முஸ்லீம் அரசியல் வியாபாரிகள் விக்கியை முஸ்லீம்களின் எதிரரி போன்று காட்ட முற்பட்டனர்.அதில் வெற்றீயும் பெற்றனர்.
எனினும் இலங்கையில் முஸ்லீம் அதிகர அலகை அங்கிகரித்த ஒரே முதல்வர் விக்கி..முஸ்லீம் அதிகார அலகு வழங்க கேரிய ஒரே மாகண சபை வடமாக ண சபை(வடமாகணதில் முஸ்லீம் சனதோகை 5%இலூம் குறைவு).

Post a Comment