Header Ads



இலங்கையும், சீனாவின் இராணுவத்தளமாக மாறக்கூடும் - அமெரிக்க

உலகம் முழுவதும் சீனா இராணுவத் தளங்களை ஸ்தாபித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சீனாவின் இராணுவத் தளத்திற்கு சாத்தியமான இடமாக பாகிஸ்தான் அமையக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் இராணுவத் தளமொன்றை அமைத்த பின்னர், உலகம் முழுவதும் இராணுவத் தளங்களை சீனா விரிவுபடுத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பங்களாதேஷ், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவின் இராணுவத்தளமாக மாறக்கூடும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.