Header Ads



அரசுக்கும், முஸ்லிம்களுக்கு பிளவை ஏற்படுத்த சதி - இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி


இஸ்லாமியர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

இஸ்லாமிய சமய தலைவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தேசிய நல்லிணக்கத்துக்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளை பாராட்டியதுடன், தேசிய நல்லிணக்கத்துக்காக ஆசீர்வாதம் செய்தார்கள்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், 

அனைத்து இனங்களுக்குமிடையில் சமாதானம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பி நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பரந்த செயற்திட்டத்தை முன்னெடுப்பதாக தெரிவித்தார். முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள், அரசாங்கத்துக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் பேதங்களை ஏற்படுத்தவதற்கு அரசியல் சதியில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சுதந்திரமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காகவே 2015 ஜனவரி 08 திகதிய ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் சிறுபான்மை மக்கள் தனக்கு வாக்களித்ததாகவும் அந்த பொறுப்புக்களை உரியவாறு நிறைவேற்ற பாடுபடுவதாகவும் தெரிவித்தார். எனவே அரசியல் சதிகளில் சிக்காது எதிரிகளையும் நண்பர்களையும் இனங்கண்டு செயற்படுமாறு தான் அனைத்து முஸ்லிம்களிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவி கருணாநாயக்கா, ரிஷாட் பதியுதீன், ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். 



4 comments:

  1. நம்பிவிட்டோம் நீங்கள் பொய் சொலலமாடிங்கள் செரி என்பவர்கள் கையை உயர்த்த சொன்னால் நம்மவர்கள் இரண்டு கைகளையும் உயர்த்துவார்கள்

    ReplyDelete
  2. Myself, யாரப்பா எதிரி? யாரப்பா நண்பன்? யாரையார் நம்புவது?யாரை வெறுப்பது ? ஏன் இந்த அரசியல் சாணாக்கியர்கள் தனது மக்களை இவ்வளவு மட்டகரமாக நடாத்த முயற்சிக்கிறார்கள்?
    யாஅல்லாஹ்! உனது புறத்திலிருந்து அனைத்து முஸ்லிம்களையும் பாதுகாப்பாயாக!

    ReplyDelete
  3. வேலைக்கள்ளிக்கு பிள்ளைச்சாட்டு என்பது போல காரணம் சொல்கிறார் எமது ஜனாதிபதி... முஸ்லிம் விரோத போக்கு மற்றும் ஜானசார கைது நாடகமும் மிகவும் வெற்றிகரமாக ஓடுகிறது... மிகவும் சிறப்பாக கிளைமக்ஸில் மகாசங்கம் அறிக்கை விட்டுள்ளது.. இதன் முடிவு சகல குற்றச்சாட்டுகளில் இருந்து ஜானசாரைக்கு விடுதலை... இந்த நிகழ்ச்சியில் சானக்கியம் கலந்துகொள்ளவில்லையா? பசீர் மாமா வந்ததால் வரவில்லை போல...

    ReplyDelete
  4. முஸ்லிம் தலைவர்களும் வந்திருக்கிறார்களே?

    ReplyDelete

Powered by Blogger.