Header Ads



லண்டன் தீ விபத்தில், காணாமல் போனவர்கள்..!


பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் 27-மாடிகளைக் கொண்ட Grenfell Tower நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனால் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்கு போராடி வந்தனர். அதன் பின் கட்டிடம் முழுவதும் உள்ள தீயை அணைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் தற்போது வரை 12-பேர் பலியாகியிருப்பதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். அது தொடர்பாக அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சமூகவலைத்தளங்களில் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இந்த விபத்தின் போது காணாமல் போனவர்கள் பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அதில் மூன்று இளம் பெண்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களின் பெயர்கள் Mirna, Fatima மற்றும் Zainnb என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களை அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா என்று தேடி வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து 12-வயது மாணவன் Jessica Urbano, Nurhuda El-Wahabi மற்றும் Yasin(21) போன்றவர்களும் தீ விபத்தின் போது கட்டிடத்திற்கும் உள்ளே இருந்ததாகவும், அவர்களைப்பற்றி தகவல் தெரிவிக்கும் படியும் கூறியுள்ளனர்.

Khadija Saye இவர் அங்குள்ள கட்டிடத்தின் 20-வது மாடியில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Rania Ibrham(30), இவர் தன் தோழிக்கு இறுதியாக சம்பவ தினத்தன்று காலை 3 மணி அளவில் தகவல் அனுப்பியுள்ளார், அதன் பின் எந்த ஒரு தகவலும் தெரியவில்லை.

Nurhouda (16), Yassin (20), மற்றும் Mehdi(7) இந்த மூவரும் மற்றும் இவர்களது பெற்றோர் Aziz El Wahabi-Fouzia 21-வது மாடியில் வசித்து வந்துள்ளனர். இவர்களும் இந்த தீ விபத்தில் சிக்கியிருந்ததாகவும், இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தாலும், உடனடியாக தகவல் தெரிவிக்கும் படியும் அவர்களது உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதே போல் பலரும் கட்டிடத்தின் தீ விபத்தில் சிக்கியவர்கள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.