Header Ads



பாகிஸ்தானில் வந்து, கிரிக்கெட் விளையாடுங்கள் - கேப்டன் சர்ப்ராஸ் அழைப்பு


சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ், பாகிஸ்தானுக்கு வந்து மற்ற அணிகள் விளையாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நீண்ட வருடங்களுக்கு பின்னர் ஐ.சி.சி தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால் அந்நாட்டு ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ்,”இந்த வெற்றி இன்று மற்றும் நாளை நினைவு கூரத்தக்கது அல்ல. பல வருடங்கள் கொண்டாடத்தக்கது. பாகிஸ்தானில் கிரிக்கெட் இருக்கும் வரை இந்த சாதனை இருக்கும் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.

மேலும், ”நீண்ட நாட்களாக நாங்கள் துபாயை தான் ஹோம் கிரவுண்டாக கொண்டு விளையாடி வருகிறோம். மற்ற அணிகளை போல் சொந்த மண்ணில் விளையாடும் சிறப்பு எங்களுக்கு இல்லை. இந்த வெற்றி மூலம் மற்ற அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.” எனவும் கூறினார்.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதிலிருந்து, அங்கு சர்வதேச போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. Well done Pak team.

    உயிர் பயத்தில் தானே ஒருவரும் அங்கு போக மறுக்கிறார்கள்.

    அமேரிக்காவின் உதவி பெற்றாவது பாக்கிஸதான் அங்குள்ள பயங்கரவாதிகள் யாவரையும் அழிக்கவேண்டும்.

    பின்லேடன் இறுதியில் எங்கு பதுங்கியிருந்தான்?

    தலிபான்கள், காஷ்மீர் தீவிரவாதிகள் போன்ற பல பயங்கரவாதிகளின் அடைகலமாக பாக்கிஸ்தான் உள்ளது.
    பின்னர் எப்படி வரும்படி அழைப்பீர்கள்?




    ReplyDelete
    Replies
    1. அந்தோணி !
      உம்மை நினைத்தால் நீரும் ஒரு மானிடன்தானே என்றவகையில் ரொம்ப கவலையா இருக்கப்பா!
      ஏனென்று கேட்கிறீரா?
      உன்போன்ற புலியை மட்டுமன்றி டெலோ, ஈபிஆர்எல்எப், ஈரோஸ், ஈபிடிபி என அத்தனை பயங்கரவாதிகளுக்கும் அடைக்கலமும் ஆயுதம் உட்பட அத்தனை வசதிகளையும் செய்துகொடுத்த இந்தியாவுக்கு உமது பாசிச புலி செய்த கொடுமைகளை நீர் இலகுவாக மறந்துவிட்டீர்.
      : ராஜீவ் காந்தியை கொலைசெய்தமை
      : உள்ளூர் இந்தியர்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கி ஆயுத கலாசாரத்தை தோற்றுவித்தமை
      : பத்மநாபா போன்ற சகோதர இயக்கத் தலைவர்களை கொன்றமை
      : அப்பாவி இந்திய மக்களை பிழையான அரசியல் கலாச்சாரத்துக்கு இட்டுச்சென்றமை
      : தமிழ் அகதிகளை இந்தியாவில் பிழையாக வழிநடத்தியமை
      : உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்தமை(இதனால் மண் கவ்வியது வேறுகதை)
      இவ்வாறான எத்தனையோ விடயங்களை துரோகத்தனத்தால் செய்துவிட்டு , பயங்கரவாத அச்சுறுத்தல்பற்றி சுட்டுவிரல் நீட்டுகிறீர், மற்றய 4 விரல்களும் உம்மைச்சுட்டுவதை அவதானிக்கவும் மறந்துவிட்டீர்.
      ஒரு இஸ்லாமிய வெற்றி வீரன் மைதானத்தில் எவ்விதம் நடந்து கொண்டான். இதே வெற்றியை கோலி பெற்றிருந்தால் ?
      ஒரு சகோதர வீரனை தனது நாட்டுக்கு விளையாட அழைத்ததை பயங்கரவாத்த்துடன் முடிச்சுப் போடும் உமது மறதியையும் மானிடமற்ற தன்மையையும் நினைத்தே கவலைப்பட்டேன்.
      அந்தோணி !
      மானிடத்தன்மைக்கு இப்போதைக்கு வைத்தியம் செய்வது கடினம். ஆனால் மறதிக்கு உடன் சிறந்த வைத்தியரை நாடவும்.

      Delete
    2. @Lafir, நீங்கள் என்ன வயது போனவர்கள் போல எப்பவும் உப்பு-சப்பு இல்லாத, டச்சு காலத்து கதைகளையே எப்பவும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

      எனக்கு அப்போது சிறுவயது. Anyway.. Past is past. Yesterday is history, but today is gift.

      இந்த வியாக்கினங்களை விடுங்கள். ஏலுமென்றால் இதற்கு பதில் சொல்லுங்கள்.

      ஏன் இலங்கை அணி கடந்த 8 வருடங்களாக பாக்கிஸதானுக்கு போவதில்லை?

      Delete
    3. உமக்கான விடை எனது கடைசிப் பந்தியிலுள்ளது. மீண்டும் மறதி.....மறதி

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. @Lafir, ஏன் இலங்கை அணி கடந்த 8 வருடங்களாக போவதில்லை ?

      (உங்களுடைய பந்திகளில் ஒன்றுமில்லை. சும்மா அலம்பாமல் கேள்விக்கு மட்டும் விடை சொல்லுங்கள்)

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Heartiest congrats Pakistan. U played well. U deserved the title....ICC cricket champions!!

    ReplyDelete

Powered by Blogger.