Header Ads



ஞானசாரருக்கென விசேட, சட்டங்கள் உள்ளதா..?

நல்லாட்சியை நிலைநாட்ட வந்த அரசாங்கத்தில் நீதிதுறையும் பொலிஸாரும் செயல்படும் விதம் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து ஞானசார தேரர் மூன்றாவது தடவையாகவும் நீதி மன்றத்துக்கு சமூகம் தருமாறு உத்தரவிடப்பட்டிருந்தும் நீதி மன்றத்துக்கு சமூகம் தரவில்லை. அவர் நீதி மன்றத்துக்கு சமூகமளிக்காததற்கு உடல் நலக் குறைவு மற்றும் உயிர் அச்சுறுத்தல் ஆகிய காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

அவர் உடல் நலக் குறைவின் காரணமாக நீதி மன்றத்துக்கு சமூகமளிக்காதிருந்தால் அவர் சிகிச்சை பெறும் வைத்தியசாலை உட்பட அனைத்தும் தெளிவாக குறிப்பிட்டிருந்தால் அவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.  அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதற்கு தேவையான பாதுகாப்பை கோரி வரலாம். இவர் இவ்வாறான நியாயங்களை கூறுவது நீதிமன்றத்துக்கு வராமல் தவிர்ப்பதற்கு என்பது யாவரும் அறிந்த உண்மை.

ஞானசார தேரர் நீதிமன்றத்தை தொடர்ந்து அவமதிக்கின்ற போதும் நீதி மன்றம் இவரை கைது செய்யுமாறு எந்தவிதமான பிடியானைகளையும் பிறப்பிக்கவில்லையென அறிய முடிகிறது. நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்காமல் பொலிசார் யாரையும் கைது செய்ய முடியாது. ஞானசார தேரரை கைது செய்ய எந்தவிதமான பிடியானைகளையும் நீதி மன்றம் பிறப்பிக்கவில்லை என்பதை பொது பல சேனா அமைப்பினர் தங்களுக்கு சாதகமான வாதமாகவும் கொண்டுள்ளனர்.

இவைகளை வைத்து நோக்கும் போது இலங்கை நாட்டில் ஞானசார தேரருக்கென்று விசேட சட்டங்கள் ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு நாட்டின் நீதித் துறையானது அந் நாட்டை சீரிய முறையில் இயக்குவதில்  மிகப் பெரும் பங்கு வகிக்கின்றது.  ஒரு நாட்டின் நீதித் துறையை அவமதிப்பதும் நீதித் துறையானது தனது நீதியை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறுகின்றமையும் அந் நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் என்பதில் எதுவித சிறு சந்தேகமுமில்லை. 

ஞானசார தேரர் விடயத்தில் இலங்கை நாட்டின் நீதித் துறை செயல்படும் விதமானது இலங்கை நாட்டை வீழ்ச்சிப்பாதை நோக்கி கொண்டு செல்வதையே எடுத்துக்காட்டுகிறது.

அ.அஹமட்

4 comments:

  1. இவ் உலகில் சட்டம் இயற்றவும் அதனை நடைமுறைப்படுத்தவும் பல நிறுவனங்களும் தரப்பினரும் உள்ளனர். ஆனால் யாஅல்லாஹ்! உனது ராஜ்யத்தில் அனைத்தையும் இயற்றுவதும் நடைமுறைப்படுத்துவதும் நீ ஒருவன் மட்டுமே.
    எனவே உனது ராஜ்யத்தில் அநீதியை எதிர்பாரக்கவுமில்லை, அது எமது கொள்கைக்கு முரணானதுமாகும். நிச்சயமாக உனது நீதி வெகு விரைவாக நிலைநிறுத்தப்படும். இன்ஷாஅல்லாஹ்!

    ReplyDelete
  2. Gang is main man operating this dirty government

    ReplyDelete
  3. நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் படைத்தோம்; அதில் கடும் அபாயமுமிருக்கிறது; எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
    (அல்குர்ஆன் : 57:25)
    www.tamililquran.com

    ReplyDelete
  4. This is kotabaya Rajapakse's way of style. There are many brokers who are ministers and Politicians only working behind this directly and indirectly with lawyers and judges to sort out this matter under the table. we don know anything about this because we Sri lankan poor peoples are blinds, deaf and fools.

    ReplyDelete

Powered by Blogger.