Header Ads



நீங்கள் கத்தார் பக்கமா..? சவுதி பக்கமா..?? பாகிஸ்தானுக்கு சல்மான் அழுத்தம்


ஜ.எஸ்.தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து, ஏமன், அமீரகம், லிபியா அரபு நாடுகள் துண்டித்தன.

இதனால் மேற்கண்ட நாடுகளுக்கிடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூதர்கள் திரும்ப பெறப்பட்டனர். மேலும் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நிலவுகிறது. கத்தார் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் கத்தாருக்கு ஆதரவாக சில நாடுகளும், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆதரவாக சில நாடுகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், நீங்கள் எங்கள் பக்கமா அல்லது கத்தார் பக்கம் உள்ளீர்களா என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் சவுதி அரேபியா அரசர் கேட்டுள்ளார். 

நவாஸ் ஷெரீப் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது சவுதி மன்னர் சல்மானை ஷெரீப் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கத்தார் விவகாரத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என்று நவாஸ் ஷெரீப்பிடம் சவுதி மன்னர் கேள்வி எழுப்பினார். 

இது தொடர்பாக பாகிஸ்தானில் வெளியாகும் ’த எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அதில் சவுதி தங்களுக்கு சாதகமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டுள்ள போது, வர்த்தகத்தை பாதிக்காத வகையில் பாகிஸ்தான் கத்தார் மற்றும் மற்ற நாடுகளுடன் உறவை தக்க வைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. 'நீங்கள் இறைவனின் பக்கமா?
    அல்லது சாத்தானின் பக்கமா?'

    ReplyDelete
  2. Is திவிரவாயிகளுக்கென குறிப்பிட்டுள்ளீன்கள்.அது தவறு.இஃவான்களுக்கும் ஹமாஸுக்கும் என்பதற்காகத்தாளே.isக்கெனில் சவுதியின் முடிவு சரி.isயும் ஹமாஸும் இஃவான்களும் ஒன்றல்ல.

    ReplyDelete

Powered by Blogger.