Header Ads



வடக்கு தமிழரின் பூர்­வீக நிலம் அல்ல - சிங்­கள, முஸ்லிம்களும் தைரி­ய­மாக வாழ முடியும் - சம்­பிக்க


வடக்கு மாகா­ண­மா­னது  தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல.  சிங்­கள, முஸ்லிம் மக்­களும்  வடக்கில் தைரி­ய­மாக வாழ முடியும்.  ஆகவே, வடக்கை தமி­ழர்கள் உரிமை கோர முடி­யாது என ஜாதிக ஹெல உறு­மய கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

சிங்­கள பெளத்த இன­வா­தத்தை கட்­டுப்­ப­டுத்த முன்னர் வடக்கில் தமி­ழர்­களின் இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  

ஜாதிக ஹெல உறு­மய அமைப்பின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,  

இலங்­கையின் வடக்கு மாகாணம் தனித்த மாகாணம் அல்ல. இலங்­கையின் ஏனைய பகு­தி­களை போலவே வடக்கும் அனைத்து தரப்­பி­னரும் வாழ்ந்த ஒரு  பூமி­யாகும். அவ்­வாறு இருக்­கையில் வட­மா­காணம் மாத்­திரம் தமி­ழர்­க­ளுக்கு சொந்­த­மான பூமி­யென கூற முடி­யாது. 

வடக்கில் யுத்­தத்தின்  போது  ஏற்­பட்ட நிலை­மை­களே அங்­கி­ருந்து சிங்­கள, முஸ்லிம் மக்­களை வெளி­யேற்ற கார­ண­மாக அமைந்­தன. வடக்கு தமிழ் மக்­களின் பூர்­வீக நிலம் அல்ல. தமி­ழர்­க­ளுக்கு என வடக்கை உரிமை கேரா முடி­யாது. 

அங்கு சகல மக்­களும் வாழ்ந்­துள்­ளனர். யுத்­தத்தின் பின்னர் காணி விடு­விப்பு விட­யத்தில் தமிழர் வாழ்ந்த இடங்­களில் அவர்­களை வாழ அனு­ம­திக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் சிங்கள முஸ்லிம் மக்­க­ளுக்கும் சம உரி­மைகள் வழங்­கப்­பட வேண்டும். அங்கு சிங்­கள மக்­களும் முஸ்லிம் மக்­களும் தைரி­ய­மாக செயற்­பட  உரிமை உள்­ளது. 

மேலும் சிங்­கள பெளத்த கருத்­துக்­களை இன­வாதக் கருத்­துக்­க­ளாக தெரி­வித்து ஊட­கங்­களும் தமிழ், முஸ்லிம் அர­சியல் வாதி­களும் கூறு­கின்­றனர். ஆனால் தமி­ழர்­களின், முஸ்­லிம்­களின் இன­வாத கருத்­துகள் வெளி­வ­ரு­வ­தில்லை. ஊட­கங்­களும் இன­வாத கருத்­துக்­களை தவிர்த்து  செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன. 

எமது கருத்­து­களை இன­வாத கருத்­தாக தெரி­விக்கும் நபர்கள் தமிழ் இன­வாத கருத்­துக்­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்டும். உண்­மை­களை சரி­யாக தெரி­விக்க வேண்டும். வடக்கில் பரப்­பப்­பட்டு வரும் இன­வாத கருத்­துக்­களை மறைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. சிங்­கள மக்­க­ளுக்கு உண்­மை­களை வெளிப்­ப­டுத்த வேண்டும். 

அமைச்­சர்­க­ளாக இருந்­தாலும் சரி அல்­லது அரச அதி­கா­ரி­க­ளாக இருந்­தாலும் சரி எவர் இன­வாதக் கருத்­துக்­களை பரப்­பி­னாலும் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். இனவாதிகளுக்கு சலுகைகள் இல்லை. நாட்டின் நல்லிணக்கம் என்பது சகல தரப்பினர்  மூலமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.   மாற்றாக ஒரு சாராரை மாத்திரம் குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்  என்றார். 

5 comments:

  1. மதிப்பிற்குரிய அமைச்சர் அவர்களே!
    நீங்கள் சொல்வதுசரீதான்.வடக்கில் தமிழர்கள் தனியான அரசை 900 ஆண்டுகள் ஆண்ட வரலாறு சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஒப்புகொண்டனர்.வடதமிழர் வரலாறு 2000ஆண்டு பழமை என பொம்பரிப்பு பூகரி நல்லுர் ஆய்வுகள் கூறுகிறது.அதற்கும் மேல் வடக்கில் 95%சனத்தொகை மற்றும் 98%நிலஆளூகை தமிழரீடம் உண்டு.இருந்தும் அது தமிழர்பிரதேசமில்லை என்றால்.இங்கு
    கிழக்கில் 37%சனத்தொகையும் வெறும் 12%நிலஆளூகையும் வைத்து கொண்டு கிழக்கு முஸ்லீம் நாடு என்றும் இங்கு தமே மேலானொர் என்றும் பிதற்றும் அரசஅதிகாரிகள்.அரசியல் வியாபாரிகளை நினைத்தால் சிரிப்பூ வருது��.?
    எவ்வாறாயினும் முஸ்லீம்களிடம் உங்கள் சாயம் வெளுத்ததால்.அவர்களை குளிரவைக்க நல்லா ரீலு விடுறீங்க அமைச்சரே.
    காலகாலமாக சிங்கள பேரினவாதிகள் செய்யும் வேலை இது தானே.

    ReplyDelete
    Replies
    1. குமாரு இந்த சம்பிக்க ஒரு கடுமையான சிங்களவாதி இவன் பேச்சை முஸ்லிம்கள் நாங்கள் கூட ஏற்றுக்கொள்ளமாட்டோம். அப்படியும் தமிழ் தீவிரவாதிகளுக்கே உரித்தான முஸ்லிம்களை சம்பந்தமில்லாமல் இழுக்கும் புத்தியை நீர் காட்டியது நீங்கள் எப்போதும் அப்படிதான் என்பதை தெளிவுபடுத்துகின்றது. இன்று ஒரு அணுஅளவு அதிகாரம் கூடையில்லாமலே முஸ்லிம்கள் மீதுவன்மத்தை வீசியடிக்கும் நீங்களா அதிகாரம் கிடைத்தால் முஸ்லிம்களை அரவணைப்பீர்கள். எந்த முகத்தை வைத்துக்கொண்டு வடகிழக்கு இணைப்பை கூறுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் வெட்கம் இல்லையா?

      Delete
  2. Chambika is mental, even he doesn't know what he is talking. He proposed that 1800 building have to destructes in Wellawatte area. I am challenging him if he can take off single brick from the buildings as you are an infrastructure minister.
    He is useless minister who doesn't do or talk any thing useful to ppl in Sri Lanka.
    If he is Highway minister why he worry about the homeland of Tamils.
    Don't try to impose you dirt politics into nothern ppl again.If you do again the consequences will be more than you faed before 2009.
    Bloody waste minister.
    First you release Gnanasara thero from your home arrest.
    You dirty radical for the entire sinhala ppl.

    ReplyDelete
  3. குமார் உன்னையுடைய பிரதேசம் பிரச்சினைகள் பற்றி இன்னொரு இனவாதி பேசினால் சும்மா இருக்கும் முஸ்லிம்கள் பற்றி ஏன் முடிச்சு போடுகின்றாய்,நாய்க்கு எங்கு அடித்தாலும் காலீல்தான் காயம் அதனால்தான் காலை தூக்கிக் கொண்டு கத்துகிறது அதேபோல் எவன் உனது இனத் துவசத்தைப் பற்றி பேசினாலும் முஸ்லீம்களை குறைகூறும் பழக்கம் உன்னில் ஊறிப்போய்விட்டது.குமரா கறுப்புக் கண்ணாடியை போட்டுப் பார்தால் எல்லாம் கறுப்பாகத்தான் தெரியும்.முதலில் உன் இனவாத கறுப்புக் கண்ணாடியை கழட்டிவிட்டு சுயமாக சிந்துத்து பேசு

    ReplyDelete
    Replies
    1. ஜௌபர்! இந்தக் கயவர் கூட்டத்தின் இத்தகைய இழிவான இனவாத கருத்துக்களால் எமது சமூகம் பிழையாக வழிநடத்தப்படக்கூடாது என்றால், இத்தகைய கருத்துக்களை பிரசுரிக்க வேண்டாம் என ஜப்னா முஸ்லிமை நாம்தான் வலியுறுத்த வேண்டும்.

      Delete

Powered by Blogger.