Header Ads



புலி உறுப்பினருக்கு, மரண தண்டனை

முன்னாள் புலி உறுப்பினர் ஒருவருக்கு மொனராகலை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

மட்டக்களப்பு வெல்லாவெலி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய முன்னாள் விடுதலை புலி உறுப்பினர் ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் ஆயுதங்களை கொள்ளையிட்டமை இவர் மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும்.

2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி தனமல்வில பொலிஸ் பிரிவில் பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் நீண்ட காலம் விசாரிக்கப்பட்ட வழக்கிற்கு நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னாள் விடுதலை புலி உறுப்பினருக்கு மரண விதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதுமான சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

6 comments:

  1. மரண தண்டனை தீர்ப்பு மட்டும் போதாது. தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க தீவிரவாதிகளை தூக்கிலிட வேண்டும்

    ReplyDelete
  2. தயவுசெய்து முன் புன் யோசித்து பாறாது காமென்டுகள் பன்னுவதை தவிர்க்கவும், ஆரம்பகட்டத்தில் இறுந்தே முஸ்லிம்களும் தமிழர்களும் நல்ல ஐக்கியத்தோடும் ஒற்றுமையோடுமே வாழ்ந்து வருகின்றோம், எமது ஒற்றுமையை குளைக்க அரசியல்வாதிகள் நம்மை கறிவேப்பிலைகளாக பயன்படுத்திக்கொள்கின்றார்கள், இதற்கு நாங்கள் பழிமாடுகளாகிவிடக்கூடாது.

    ReplyDelete
  3. Every one should die either they like it or not.

    ReplyDelete
  4. operator நீங்கள் குறிப்பிடுவது சாதாரண தமிழ் மக்களைப்பொறுத்தவரை உண்மை. ஆனால் சகோதர பௌத்த பிக்குகளை அரந்தலாவையிலும் ஹஜ்ஜாஜிகளை களுதாவளையிலும் அறுத்த புலி உறுப்பினருக்கு விளங்குவதற்கு இன்னும் கால அவகாசம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. அப்ப, உங்களை போன்ற ISIS உறுப்பினர்களுக்கு மட்டும் உடன விளங்கிரும் போல

      Delete

Powered by Blogger.