June 14, 2017

முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான தேயிலைத், தொழிற்சாலை உரிமையாளர்களின் கோரிக்கை

-ARA.Fareel-

நாவ­லப்­பிட்­டியில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான தேயிலைத் தொழிற்­சாலை தீயினால் முற்­றாக எரிந்­தமை ஒரு நாச­கார செய­லல்ல. தொழிற்­சா­லையில் ஏற்­பட்ட மின் ஒழுக்கு கார­ண­மா­கவே தீ பர­வி­யுள்­ளது.

எனவே இதனை நாச­கார செயல், பெரு­ம்பான்மை இனத்­த­வர்­களால் எரிக்­கப்­பட்­டது என வதந்­தி­களைப் பரப்ப வேண்டாம் என தொழிற்­சா­லையின் உரி­மை­யா­ளர்களான இரு சகோ­த­ரர்­களும் முஸ்லிம் சமூ­கத்­திடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர். 

தீயினால் முற்று முழு­தாக எரிந்­துள்ள தேயிலை தொழிற்­சா­லையின் உரி­மை­யா­ளர்­க­ளான ராசிக் உடையார், தாஹா உடையார் ஆகிய இரு­வரும் இவ் வேண்­டு­கோளை விடுத்­துள்­ளனர். அவர்கள் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது, நாவ­லப்­பிட்­டியில் முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரும் பல தசாப்­தங்­க­ளாக நல்­லு­ற­வு­டனே வாழ்ந்து வரு­கி­றார்கள். தொழிற்­சா­லை­யிலும் கட­மை­யாற்­றி­ய­வர்­களில் அநேகர் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள். 

சம்­ப­வங்கள் தொடர்பில் நாம் பொலி­ஸா­ருக்கு அளித்த வாக்­கு­மூ­லத்­திலும் இச்­சம்­பவம் தொழிற்­சா­லையின் மின்னடுப்பு ஒன்றில் ஏற்­பட்ட மின் ஒழுக்கு கார­ண­மா­கவே தீ பர­வி­யி­ருக்­கலாம் என்று வாக்கு மூலம் அளித்­தி­ருக்­கிறோம். தொழிற்­சா­லையில் கட­மை­யி­லி­ருந்த பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்­தரும் அவ்­வி­டத்­தி­லி­ருந்து புகை­கி­ளம்­பி­ய­தையே முதலில் கண்­டி­ருக்­கிறார். 

இந்­நி­லையில் தொழிற்­சா­லையில் ஏற்­பட்ட தீ விபத்­துக்கும் இன­வா­தி­க­ளுக்கும் எவ்­வித சம்­பந்­த­மு­மில்லை. இவ்வாறான கருத்துகளைப் பரப்பி நாட்டில் இன்று உருவாகியுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உரமூட்ட வேண்டாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 

6 கருத்துரைகள்:

உண்மையில் விபத்து தானோ?

அல்லது, விபத்து என்று சொன்னால் தான் insurance கிடைக்குமோ?

அல்லது, insurance காசு க்காக விபத்து உருவாக்கபட்டதோ?

இஸ்லாமிய நடைமுறைகளை நியமமாக பின்பற்றும் எந்தவொரு முஸ்லிமும் காப்புறுதி மற்றும் வட்டியினை நாடுவதில்லை.
மாறாக அந்தோணி உன்போன்ற இறைநம்பிக்கை மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கையற்ற நாதாரிப்பயல்கள்தான் இதன் பக்கம் செல்வர்.
அந்தோணி மற்றவனின் பல்லைக்குத்தி மோந்து பார்க்க முன் உனது பல்லின் துர்நாற்றம் பற்றி உனது மனைவியிடம் கேட்டுப்பாரும். செடிநாத்தப்பயலே.

அந்தோணி உம் கருத்தை பார்த்ததும் உலகின் அனுதாபத்தை பெற பிரபாகரனே தமிழர்களை கொன்று இராணுவத்தின் மீது பழி போட்டானே அது தான் எனக்கு திடீரெண்டு நியாபகத்துல வந்தது

Yes, let's say it's an accident.But, Mahindananda MP raised his voice against the Muslim Congress Leader. Has MP Mahindananda ever spoken against the hate speeches makes by the Balu Sena's Gandassaara..?

இது சிங்களவர்களால் எரிக்கபட்டது என தான் JM யிலும் வேறு சில செய்திகளிலும் இருந்தன. இப்போது owner என்கிறார். அதனால் இன்றைய வியாபார உலகில் நிகழ்கின்ற எல்லாவற்றையும் தான் குறிப்பிட்டேன்.

Lafir, and IK MS, நீங்கள் இருவருமே மு.இனவாதிகளாதலால் எல்லாவற்றையும் அதே சிந்தனையில் தான் பார்பீர்கள். who cares?

Lafir அண்ணே, அதை விடுங்கள் சப்பை matter. உங்கள் மொழி நடை சுப்பர். எந்த பாடசாலையில் படித்தீர்கள்?


முஸ்லீம்கள் யாரும் இன்ஷீரன் செய்வதில்லையா??

Post a Comment