Header Ads



சுதந்­திரக் கட்சி பசு மாடு, ஐ.தே.க. எருமை மாடு - பிர­சன்ன ரண­துங்க

நாட்டில் அர­சி­யலை சுதந்­திரக் கட்சி என்ற பசு நிலத்­திற்கு இழுத்துச் செல்ல முற்­படும் போது ஐக்­கிய தேசியக் கட்சி என்ற எருமை மாடு சேற்றில் தள்ளி விடு­கின்­றது என கூட்டு எதி­ர­ணியின் ஒருங்­கி­ணைப்­பாளர் பிர­சன்ன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

மைத்­திரி – மஹிந்த சந்­திப்பு மீண்டும் மஹிந்த தரப்­புக்கு ஏமாற்­றத்­தையே தரும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மினு­வாங்­கொ­டையில் இடம்­பெற்ற கூட்டு எதி­ர­ணியின் தொகுதி அமைப்­பா­ளர்­களை தெரிவு செய்யும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

மைத்­திரி – மஹிந்த சந்­திப்பு தொடர்பில் தற்­போது வரையில் எந்த ஒரு பேச்­சு­வார்த்­தைக்கும் கூட்டு எதி­ரணி செல்­ல­வில்லை. தற்­போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் அமர்ந்­தி­ருக்­கின்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­களில் எவ­ரேனும் ஒருவர் வந்து இது பற்றி பேசு­வா­ராயின் அதன் பிறகு மேற்­படி விடயம் குறித்து சிந்­திக்க முடியும்.

இருப்­பினும் மைத்­திரி – மஹிந்த சந்­திப்பு இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தியம் உள்­ளது என்­பதை கூறு­கின்ற போதே உண்­மை­யாக சுதந்­திரக் கட்­சி உறுப்­பி­னர்கள் அதி­ருப்­தியை வெளி­யி­டு­கின்­றனர்.  2015 ஆம் ஆண்டில் ஏமாற்றம் அடைந்­தது போலவே மீண்டும் ஒரு­முறை ஏமாற்றும் செயற்­பா­டா­கவே மைத்­திரி – மஹிந்த சந்­திப்பு அமைந்­தி­ருக்கும்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கட்­சியின் தலை­மை­த்து­வத்தை காட்­டிக் ­கொ­டுத்­து­விட்டு ஜனா­தி­பதி பத­வியை பறித்­துக்­கொண்­ட­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதை உண்­மை­யான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டார்கள். அதனால் தான் உண்­மை­யான ஆத­ர­வா­ளர்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் பக்கம் உள்­ளார்கள்.

எவ்­வா­றா­யினும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி போன்ற ஒரு மிகப்­பெ­ரிய கட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சியின் கட்­டுப்­பாட்டின் கீழ் வைத்­தி­ருப்­ப­தற்கே நாங்கள் எதிர்ப்பை வெளி­யி­டு­கின்றோம். அதனால் எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து பேசு­வதை தவிர்த்து எதிர்­காலம் குறித்து உரிய தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும்.

தேசிய அர­சாங்கம் அமைத்­ததால் சாதித்து  ஒன்றும் இல்லை என்­கின்ற போது தற்­போ­தைய அர­சாங்­கத்தின் இய­லா­மையும் தற்­போது உலக நாடு­க­ளுக்கு தெரிந்­துள்­ளது. அண்­மையில் ஏற்­பட்ட பெரும் அனர்த்தத்தின் போதுதான் அது உல­க­றிந்த விட­ய­மா­னது. காரணம் வெள்­ளத்தில் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஓடிச் சென்று உயிரை காப்­பாற்­றிக்­கொள்­ளுங்கள் என்­பதை மாத்­தி­ரமே அர­சாங்கம் செய்­தது.

அதனால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு  அர­சாங்கம் செய்ய வேண்­டிய பணி­களை தற்­போ­தைய அர­சாங்கம் இன்­று­வ­ரையில் செய்­ய­வில்லை என்­பதே உண்­மை­யாகும். இதற்கு பொறுப்­பேற்­ப­தற்கும் அமைச்சர் ஒருவர் இல்லை அவர் வெள்ளம் வழிந்­தோ­டிய பின்னர் நாட்­டிற்கு   வந்து போலி­யான  பெருங்­க­தை­களை கூறிக்­கொண்­டி­ருக்­கின்றார்.

யுத்தக் குற்றம் இழைத்­தார்கள் என்று கூறு­கின்ற இரா­ணுவ வீரர்கள் இல்­லா­விடின் இத­னை­விட பாரிய உயிர் ­தொ­கை­யினை இழக்க நேரிட்­டி­ருக்கும் அதே­நேரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் காலத்தில் அனர்த்தம் ஒன்­றுக்கு முகம்­கொ­டுக்க அர­சாங்கம் தயார் நிலையில் வாய்க்­கால்­களை தூய்­மைப்­ப­டுத்தி வைத்­தி­ருந்­ததால் விபத்­துக்கள் குறை­வ­டைந்­தன.

எவ்­வா­றா­யினும் இன்று நாட்டின் அர­சியல் சூழல் எருமை மாட்டையும் பசுமாட்டையும் ஒரே கயிற்றில் கட்டி வைத்தது போன்று இருப்பதால் சுதந்திர கட்சி என்ற பசு மாடு நிலத்திற்கு செல்ல முற்படுகின்ற போது  ஐக்கிய தேசியக் கட்சி என்ற எருமை மாடு  சேற்றினுள் இழுத்துச் சென்று விடுகின்றது. அதனால் தான் அரசியல் நிலையில்லாத் தன்மை நீடிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.