Header Ads



இறப்பர் பாஸ்மதி அரிசி, திட்டமிட்ட சதியா..?


லங்கா சதொசவில் இறப்பர் அரிசி விற்கப்படுவதாக கூறப்பட்டுவரும் கதையை ஏற்க முடியாது என    சதொச தலைவர் டி.எம்.பி.தென்னகோன். இன்று 2017.06.05 வொக்ஷல் வீதி இல் உள்ள சதொச நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசியை பூரண பரிசோதனைகளின் பின்னரே எடுக்கப்பட்டதாகும.; என்றும் குறித்த அரிசி 2019.03.17 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தபடக்கூடிய நிலையில் உள்ளது. 

நேற்றைய  தினம் 05.06.2017; முதல் சமூக வலைத்தளங்களில் சதொச ஊடாக இறப்பர் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வதந்திகள் பரப்பப்படத் தொடங்கியதன் பின்னர் உடனடியாக நான் புறக்கோட்டையிலுள்ள சதொச நிறுவனத்துக்குச் சென்று குறித்த பாஸ்மதி அரிசியை வாங்கி உணவுக்காக பயன்படுத்தினேன். எந்தவிதமான இறப்பரும் அதில் இல்லை  இது திட்டமிடப்பட்ட ஒரு சதியாக இருக்கலாம் என நம்புகின்றேன் என்றார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் சதொச தலைவர் டி.எம்.கே.தென்னகோணன் அவர்களினால் குறிதத்த பாஸ்மதி அரிசியும் குறி;த்த பாஸ்மதி அரிசியில் சமைத்த உணவும் கொண்டுவரப்பட்டடு காட்டப்பட்டது. குறித்த உணவை ஊடகவியலாளர் சமூகவலைத்தளங்களில் பரப்பபட்ட போன்று பிசைந்தும், உருட்டியும் பார்த்த போது அது இறப்பர் போன்றோ அல்லது துள்ளும் பந்துகள் போன்றோ    இருக்கவில்லை  என்பதையும் நிரூபித்தார்.

சதொச தொடர்பில்; திட்டமிட்ட சதிகள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார. 

வெள்ள அனர்த்த காலங்களில் 70 மில்லியனுக்கு அதிகமான பொருட்களை சதொச நிறுவனம் மக்களுக்கு அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக பகிர்ந்தளித்து மக்களுக்கு உதவி வருகின்றது. இந்நிறுவனம் எப்பொழுதும் மக்கள் நலனை அடிப்படையாக வைத்தே வியாபாரத்தில் ஈடுபடுகின்றது.  

சந்தையில் உள்ள சில சுப்பர் மார்கட்களைவிட சதொசவில் விலை குறைவாக இருப்பதும் தற்போது 375 ஆக இருக்கும் சதொச 500 ஆக அதிகரிக்கப்படவுள்ளமையானது சதொச நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும். இதுவும் இப்பிரச்சினைக்கு காரணமாக அமையலாம் என்றும் குறிப்பிட்டார். 

குறித்த பாஸ்மதி அரிசியியை பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி அதனை பாவனைக்குகந்ததா? என பரீட்சித்ததன் பின்னர் இது தொடர்பில்   குறித்த நாடகத்தை அரகேற்றியவர்களுக்கு  கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். என்றும் தெரிவித்தார்.
குறித்த பாஸ்மதி அரிசியை  தற்காலிகமாக விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.