Header Ads



கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்த, பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு போட்டவர் கைது

அண்டை நாடான கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்ததற்கு பஹ்ரைன் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த அந்நாட்டு முன்னணி மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டார் நாட்டவர் தங்கியிருக்க தடை விதித்தது மற்றும் ஏனைய பொருளாதார கட்டுப்பாடுகள் உட்பட பஹ்ரைனின் தடைகளுக்கு எதிராக செயற்பட்டதற்காகவே இஸ்ஸா பராஜ் அர்ஹாமா அல் புர்ஷைத் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பஹ்ரைன் அமைச்சரவை, உள்துறை அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சுக்கு எதிராகவே மனாமாவில் உள்ள உச்ச நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

தனது நாடு கட்டார் மீது முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் எதேச்சதிகாரமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கட்டார் மீதான பஹ்ரைனின் நடவடிக்கைகளை நிராகரித்து கட்டாருக்கு அனுதாபம் மற்றும் சாதகமான நிலைப்பாட்டை வெளிக்காட்டுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் அறிவிப்பை பஹ்ரைன் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. 

No comments

Powered by Blogger.