June 22, 2017

நான் புரிந்துவைத்திருக்கும் யூஸுப் அல்-கர்ழாவி

– அஷ்ஷெய்க் றிஷாட் நஜ்முதீன் – மீள்பார்வை-

கர்ழாவியுடனான எனது வாசிப்பு பற்றி சுருக்கமாக கூறவேண்டியிருக்கிறது. வாழ்க்கைக்கென்று இலக்கின்றி சடவாத ஒற்றைப்பார்வை கொண்டிருந்த கட்டத்தில்தான் கர்ழாவியின் புத்தகங்கள் கைக்கு எட்டின. நளீமியாவின் முதலாம் ஆண்டு விடுமுறைக்கு வந்தபோது உஸ்தாத் மன்ஸூர் ‘அத்-தீன் பீ அஸ்ரில் இல்ம்’ (الدين في عصر العلم) எனும் புத்தகத்தில் சில பந்திகளை அடையாளப்படுத்தி, அவற்றை மொழிபெயர்த்து பார்க்கும்படி வேண்டினார். காலப்போக்கில் அவரது ஏனைய புத்தகங்களையும் மெதுமெதுவாக வாசித்த போதுதான் ‘மனிதவாழ்வுக்கான அர்த்தம்’ என்னுள் தெளிவாக பதிந்தது. அவருடைய வாழ்வனுபவம் பற்றி எழுதியிருக்கும் மூன்று பாகங்கள் கொண்ட புத்தகம் -المذكرات- அழைப்புப்பணி பற்றியும் அதில் கடைபிடிக்க வேண்டிய பொறுமை, அர்ப்பணிப்பு பற்றியெல்லாம் வாசிக்கவைத்தது. ஆழ்ந்த தாக்கத்தை அவை ஏற்படுத்தின. கர்ழாவி சொகுசாக இருக்கிறார் என்று கூறுபவர்கள் நிச்சயமாக அப்புத்தகத்தை வாசிக்காதவர்கள் என்பதை அடித்துக்கூற முடியும். சிறையில் பட்ட கஷ்டங்களை வாசித்து அழுதிருக்கிறேன். பலரிடம் அக்காலத்தில் இது பற்றி கூறியிருக்கிறேன்.

பலதரப்பட்ட அறிஞர்களையும் வாசிக்கின்றபோது சில கட்டங்களில் தீவிர சிந்தனைகளின் பக்கம் அடித்துச் செல்லப்படாமல் மிக நடுநிலையாகவும் நிதானமாகவும் அணுகும் போக்கை கர்ழாவியிடமிருந்துதான் பெற்றுக்கொண்டேன் என்பது மிகையல்ல. விமர்சன பண்பாடுகளுக்கு கர்ழாவியுடைய ‘تاريخنا المفترى عليه’ யை வாசித்துப்பாருங்கள். அவர் தனது ஆசிரியர்களான முஹம்மத் அல்-கஸ்ஸாலி, மௌலானா மவ்தூதி, ஷஹீத் செய்யது குதுப் ஆகியோரது வரலாறு பற்றிய பார்வைகளில் உள்ள பிழைகளை அழகாகவும் பண்பாடாகவும் விமர்சிக்கும் முறைமை மிகவும் அழகானது. தனிமனித அளவீடு, விமர்சன பண்பாடு என்று பல விடயங்களையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். தனிமனிதர்களை விமர்சிக்கும் போது எவ்வகையான பண்பாடுகளை கடைபிடிக்கவேண்டும் என்பதை அப்புத்தகத்தில் அழகாக படித்துக் கொள்ளமுடியும்.

கர்ழாவி இஸ்லாமிய கலைகள் பற்றி பேசியிருக்கிறார். 150க்கும் மேற்பட்ட அவரது புத்தகங்கள் எனது வாசிகசாலையை அலங்கரிக்கின்றன. அகீதா, தப்ஸீர், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், தஹ்வா, இஸ்லாமிய ஆளுமைகள், சர்வதேச சிந்தனைகள், அரசியல், பொருளாதாரம் என்று பலதையும் அவர் பேசியிருக்கிறார். அவரது சிறப்புத் துறை பிக்ஹ் என்பதால் பிக்ஹ் இனூடாக அணுகும் போக்கு இயல்பாக இருந்தது. அதன் கருத்து எல்லா பகுதிகளையும் பிக்ஹ் என்ற வாயிலினூடாக மாத்திரமே அணுகினார் எனக் கூற முடியாது. الحل الإسلامي فريضة و ضرورة، الحلول المستوردة، أمتنا بين القرنين போன்ற புத்தகங்கள் அவருடைய றுழசடன எநைற ஐ அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. கொமியூனிஸம், முதலாளித்துவம் மீதான அவரது பார்வை அப்புத்தகங்களில் ஒரு விரிந்த தளத்தில் நகர்கிறது.

கர்ழாவி மனிதன் என்ற வகையில் பிழை விடுவது இயல்பானது. அவரது சிந்தனைகள் தொடர்ந்தும் நிலைக்கும் என்றும் கூறமுடியாது. காலமாற்றம் அவரது சிந்தனைகளில் சிலதையோ பலதையோ கேள்விக்குற்படுத்த முடியும். உதாரணமாக பிக்{ஹல் அகல்லிய்யாத் என்ற அவரது சிந்தனை எண்பது காலப்பிரிவுகளில் முன்வைக்கப்பட்ட ஒன்று என நினைக்கிறேன். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கடந்துவிட்டது. உலக ஒழுங்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. பல புதிய சிந்தனைகளும் சொல்லாடல்களும் அறிமுகமாகியிருக்கின்றன. யுனயிவயவழைn சுநகழசஅ இல் அகல்லிய்யாத் சிந்தனை அதிக கவனத்தை குவிக்க இன்று தாரிக் ரமழான் போன்றவர்களால் வுசயளெகழசஅயவழைn சுநகழசஅஉம் ஜாஸிர் அவ்தா போன்றவதர்களால் ஆயஙயளனை யுppசழயஉhஉம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் கர்ழாவியுடைய சிந்தனைகளை விட இவர்களது சிந்தனைகளையே மேலாகக் கருதுகிறேன். ஜாஸிர் அவ்தா கர்ழாவியின் மாணவர். தாரிக் ரமழான் தனது புத்தகங்களில் கர்ழாவியின் கருத்துக்களை அதிகம் கொண்டு வருபவர். தனது ஊஐடுநு நிறுவனத்தை ஆரம்பித்து வைக்க கர்ழாவியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். முரண்பாடுகளையும் தாண்டி இவ்வாறுதான் சிந்தனைகள் வளர்ச்சியடைகின்றன. முரண்பாடுகளோடு ஒருவர் அடுத்தவரை எவ்வாறு மதிக்கிறார், கண்ணியப்படுத்துகிறார் என்பதையும் பாருங்கள்.

மறுபக்கம் சில பிக்ஹ் இஜ்திஹாத்களிலும் அவரை விட வேறு சிலரது கருத்து பலமானதாக இருக்கின்றது. உதாரணமாக ஓவியம் பற்றிய கர்ழாவியுடைய கருத்தை விட தாஹா ஜாபிர் அல்வானியுடைய கருத்து மிகவும் ஏற்கத்தக்கது. இன்னொன்றையும் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். கர்ழாவியுடைய பிக்ஹ் சட்டங்கள் ஆரம்பத்தில் கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. காலப்போக்கில் அவரது கருத்து மெதுமெதுவாக செல்வாக்குபெற ஆரம்பிக்கிறது. பிக்ஹ் அஸ்-ஸகாத் புத்தகம் இதற்கு சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் அதன் கருத்துக்களில் பலர் சர்ச்சைப்பட்டனர். இன்று தவிர்க்கமுடியாமல் அவரது கருத்துக்கள் மிகவும் அதிகமாக நடைமுறைக்கு வந்திருக்கின்றன என்பதுதான் உண்மை. ஏன், இலங்கை போன்ற சிறிய நாடுகளில் இயங்கும் பைதுஸ் ஸகாத் நிறுவனங்களது மிகமுக்கிய புத்தகமாக அவரது புத்தகம் இடம்பிடித்திருக்கிறது. இசை பற்றிய அவரது புத்தகம் இன்னொரு உதாரணம்.

இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் முஜத்தித் இமாம் ஹஸனல் பன்னா. அவருக்குப் பின் இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தில் ஸையது குதுபுடைய ஹாகிமிய்ய சிந்தனை ஊடுருவியது. இரு வித்தியாசப்பட்ட சிந்தனைகளையும் கர்ழாவி கவனமாக பிரித்தறிகிறார். இமாம் பன்னாவின் சிந்தனையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பணியை அவர் தனது முதல்தர கடமையாக கருதியதன் விளைவாக பன்னாவுடைய இருபது அடிப்படைகளை விளக்கி எழுத ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு அடிப்படைகளுக்கு எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். 20 அடிப்படைகளில் காலமாற்றங்களை கருத்திற்கொண்டு சில மாற்றங்களை ஏற்படுத்தினார். நடுநிலை இஸ்லாமிய சிந்தனையின் 30 அடையாளங்கள் என அதற்கு பெயரிட்டார்.

இஹ்வான்களின் தலைவர் -முர்ஷிதுல் ஆம்- பதவியை ஏற்கும்படி கூறிய போது தான் அறிவுத்துறையில் தொடர்ந்திருக்கப் போவதாக கூறினாலும் இஹ்வான்களை நெறிப்படுத்துவதில் கர்ழாவியின் பங்கு அலாதியானது. குறிப்பிட்ட இயக்கத்துடன் மாத்திரம் தன்னை சுருக்கிக் கொள்ளாமல் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் இமாமாக இருக்கிறார் என்பதற்கு அல்-இத்திஹாத் அல்-ஆலமிய்யு லி உலமாஇல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவராக மீண்டும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டது நல்லதொரு ஆதாரம். அவ்வமைப்பு எல்லா நாடுகளையும் உள்ளடக்கியிருக்கிறது. பல்வேறுபட்ட சிந்தனை முகாம்களை அரவணைக்கிறது. சவூதி அறிஞர் சல்மான் அவ்தா போன்றவர்கள் அதில் முக்கிய அங்கத்தவர்கள். இவர்களெல்லாம் கர்ழாவியுடன் நெருங்கிப் பழகியவர்கள். கர்ழாவியுடைய மாணவர் அமைப்பு رابطة تلاميذ القرضاوي என்ற பெயரில் இயங்குவதையும் இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டும். கர்ழாவியின் சிந்தனைகள் அனைத்து தடைகளையும் தாண்டி அவரது மாணவர்களால் கொண்டுசெல்லப்படும் என்று நம்பலாம் இன்ஷா அல்லாஹ்.

4 கருத்துரைகள்:


நல்ல காமடி

May Allah forgive his mistakes and reward for his good deeds. Mayv Also protect muslims from any of his misguidance that deviates from the way of salaf us saliheens. Example Hand shaking with strange woman, muisic issues, suicidal attak and so on. May Allah forgive the mistakes of brother y karlavi.

ஒழிவு மறைவின்றி கருத்துக்களை முன் வைக்கும் இஸ்லாமிய அறிஞர்களை மேற்கத்தியவர்களைவிட அரபுத் தீபகத்தில் இருக்கும் அறிஞர்களே அதிகம் எதிர்க்கின்றார்கள் .அதன் விளைவே தற்கால யூசுப்ஜகர்ளாவி.முஹம்மது முஹைசினி போன்றோர்கள் இஸ்லாம் அனுமதிக்காத முத்திரை குத்தி ஓரங்கட்டும் பணிகள் நடைபெறுகின்றது,

முத்ஆ வை ஆதரிப்பவர. என்றும்,,
தான் அரபுகளுக்கும் ஷியாக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க நிணைத்தது எத்தனை மடமை என்றும் அவரே ஒரு கட்டத்தில் கூறியிருக்கிறாரே?
செய்த குதுப், பன்னா போன்றவர்களைப்போலவே இவரும் வஹிக்கு புறம்பான இஹ்வானிய கொள்கையுடையவரென்றும் கூறப்படுகின்றதே!?
அகார் முஹம்மது போன்றவர்களின் ஆன்மீக குருவும் இவரே!
அகார் முஹம்மது பாலியலும் பருவ்வயதும் என்ற ஷியா புத்தகத்திற்கு அணிந்துரை வளங்கியிருந்நமையையும் சுட்டிக் காட்டுகின்றேன்!
நளீமிக்களையும் சந்தேக்க் கண்கொண்டு பார்க்க வேண்டிய காலமாக இன்றைய காலம் விளங்குகிறது

Post a Comment