June 09, 2017

"ஞானத்தை வைத்து அன்றும், இன்றும்"

தீவின் வாராந்த மந்திரி சபைக் கூட்டம் .மந்திரிமார் மன்னனின் மாளிகையை நோக்கி படை எடுக்கின்றனர்.நாடெங்கும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தொடரும் அடாவடித்தனங்களுக்கு ஒரு முடிவு காண வேண்டும் .ஞானத்தை கைது செய்யாவிடின் அரசுடனான சகல உறவுகளையும் முறிப்பதே ஒரே வழி என்ற முடிவில் so called முஸ்லிம் மந்திரிமார் விரைகின்றனர்.எல்லோரும் சமூகமளித்த பின்னர் மன்னன்  சேன வருகின்றான்.எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்திய பின்னர் கூட்டம் ஆரம்பம் ஆகின்றது.மந்திரிமார் ஒவ்வொருவராக தங்களது பிரச்சனைகளை எடுத்து உரைக்க கலந்துரையாடப்படுகின்றது.அடுத்து மந்திரி ஷாட் தீன் பேச எழ எல்லோரும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

"மன்னா எங்களுடைய மக்களுக்கு எதிராக நாடு முழுக்க அந்த ஞானத்தின் கூட்டத்தினர் தாக்குதல் நடத்துகின்றனர்.ஒவ்வொரு இரவும் எங்களுக்கு சொந்தமான கடை அல்லது மஸ்ஜித் தாக்கப்படுகின்றது.அந்த ஞானத்துக்கு எதிராக"பிடிவிறாந்து இருந்தும் காவல்துறை கைது செய்யாமல் இருப்பது.அவனை கைது செய்யாவிடின் நாம் இந்த அரசில்........." பேச்சை இடை நடுவில் மன்னன் தடுக்கிறான்.
"ஞானத்தை"உரிய இடத்துல தான் நாங்க பாதுகாப்பாய் வச்சு இருக்கோம்.அதுக்குப் பொறுப்பா நீதி மந்திரி இருக்கார்.அவரு வெளிய வராம கவனிப்பார்.நீங்க யோசிச்சுப் பாருங்க அந்த ஞானம் இல்லாட்டா நீங்களும் நானும் இந்த இடத்துல இருப்போமா? நான் மண்ணுக்கு கீழ தான் இருந்திருப்பன்.ஆ.........ம்.........."மன்னன் பேச்சு வராமல் தேம்பித் தேம்பி அழுகிறான்.

பிரதான மந்திரி விக்கிரன் எழுகிறான். "ஞானத்தை வைத்து அன்றும் இன்றும் அடிப்பது எங்கட நன்மைக்கே.அன்று உங்கட மக்களுக்கு அடிக்காட்டி முந்திய மன்னன் ஆட்சி மாறி இருக்காது.இன்று அடிக்காட்டி வெள்ளக்காரன் ஆதரிக்க மாட்டான்.எல்லாம் திட்டமிட்ட படிதான் நடக்குது.அவங்க கொஞ்சம் கொஞ்சமாதான் அடிப்பாங்க.பயப்பட வேண்டாம்"

மீண்டும் மன்னன் பேசுகிறான்."என்னோட பெயரின் ஒரு பகுதி ஞானத்திட படையில இருப்பத நீங்க கவனிக்க இல்லயா.இனிமே யாரும் ஞானத்த பற்றி இங்கு பேசக் கூடாது.நீங்க வெளியில போய் எத வேண்டுமானாலும் சொல்லுங்க.உங்களுக்கு மக்கள் பெரிசா மந்திரி பதவி பெரிசா?"
முஸ்லிம் மந்திரிமார் எல்லோரும் ஒருமித்த குரலில் "மந்திரி பதவிதான் மன்னா.ஆனா அடுத்த தேர்தல்ல ஓட்டு கேக்குறதுதான்பிரச்சினை"மந்திரி வூல்fப் கீம்  கூறுகிறார்.
"உங்கட 
ஆட்களுக்கு திண்ண குடிச்ச கொடுத்தா வேறு ஒன்றும் தேவையில்ல.அதனாலதான் ஷாட் தீனுக்கு தீனையும் வூல்fப் கீமுக்கு தண்ணியையும் பொறுப்பா தந்து உள்ளேன்.முஸ்லிம் மந்திரிமார் உங்கட மந்திரி பொறுப்புகள்ள பிரச்சினை இருக்கா?

ஷாட்தீன்;எங்களுக்கு பொருத்தமான"பொறுப்புக்கள ஆழமாக சிந்தித்து தந்ததற்கு மன்னனுக்கு நன்றிகள்.நான் ஒழுங்கா திண்ண கொடுத்துக் கொண்டு நானும் நல்லா சாப்பிடுகிறேன்.சூழல்மாசடைதல குறைக்க இப்போ நாட்டு மக்களுக்கு ப்ளாஸ்டிக் அரிசியும் வழங்குகிறோம்.

வூல்fப் கீம்;நானும் தண்ணீர மழை வெயில்னு பாக்காம ஒழுங்கா அனுப்பி மக்களுக்கு தண்ணி காடடுறேன்.

மந்திரி லீம்; நானும் தண்ணி விஷயத்துல நல்ல அநுபவம் உள்ளவன்.எனக்கு ஈச்ச பழத்தயும் ஹஜ்ஜுக்கடைகளையும் பொறுப்பா தந்து தண்ணி விஷயத்துல கூட கவனமெடுக்க சந்தர்ப்பம் தந்ததற்கு நன்றி மன்னா.

சைபர் பாஸ்;நீங்க எது சொன்னாலும் அது nசரி.நான் எப்பவும் உஙகளோட.பெயர்தான் "மு "னா உள்ளம் "சி" nனா.

அடுத்த நாள் பத்திரிகை தலைப்புக்கள் 
"ஞானம் விடயத்தில் மன்னன் கூடுதல் அக்கறை" மந்திரி ஷாட் தீன்
"முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை மன்னன் நன்கு புரிந்துள்ளான்"மந்திரி வூல்fப் கீம்

8 கருத்துரைகள்:

அத்தனையும் தாங்கிவிட்டேன் சக்திதனை கூட்டி ஆண்டவனும் சேர்ந்து கொண்டான் சங்கடத்தில் மாட்டி.

Rizad Badiuddeen has been very outspken n outlandish fervently of BBS onslaught from the very outset .Main factor of regime change.

No one can keep us safe or disturb us without the will of god. Let us protect our fasting the way how the prophet teaches us. Let us seek pardon from Allah. Innallah ma"a saabireen

அடா பாவிகள இப்டியாடா நடக்குது அங்க. இது தெரியம்தானடா நாங்க உங்கட பின்னால

இந்த ரணகளத்திலும் கிளு கிளுப்பா!!கட்டுரையாளருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Post a Comment