June 08, 2017

முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் : பொலி­ஸா­ருக்கு முடி­யா­விடின் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கலாம்

-SNM.Suhail-

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக பொலி­ஸா­ரினால் நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­விடின் இவ்­வி­வ­கா­ரத்தை இரா­ணு­வத்­தி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கலாம் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

  ஆளும் கட்சி குழு கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற ஆளும்­கட்சி குழு அறையில் இடம்­பெற்­றது. இதன்­போது, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தற்­போது நாட்டில் இடம்­பெறும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்­டினார். இதன்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

ஆளும் கட்சி குழுக்­கூட்டம் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதன்­போது, இன்­றைய தினம் பாரா­ளு­மன்றில் இடம்­பெ­ற­வி­ருக்கும் அனர்த்­தங்கள் குறித்த விவாதம் குறித்து ஆரா­யப்­பட்­டது. இந்த கூட்­டத்தின் முடிவில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் எழுந்து, "இங்கு இடம்­பெறும் கூட்­டத்­திற்கும் நான் முன்­வைக்கும் கருத்­துக்கும் வித்­தி­யாசம் இருக்­கலாம். ஆனால், இயற்கை அனர்த்­தத்­தைப்­போன்று இன்று நாட்டில் இன­வா­தத்தால் ஏற்­படும் பாதிப்­புகள் அதி­க­மாக அமையக் கூடும். எனவே இவ்­வி­டயம் குறித்து ஜனா­தி­பதி கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். 

குறிப்­பாக நாளுக்கு நாள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்தே செல்­கின்­றன. கடந்த ஐந்து நாட்­களில் நான்கு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. மஹ­ர­கம பகு­தியில் மூன்று கடைகள் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­தோடு திரு­கோ­ண­ம­லையில் பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு பெற்றோல் குண்டு வீசப்­பட்­டுள்­ளது.

இது அர­சாங்­கத்தை கவிழ்க்க எடுக்­கப்­பட்­டி­ருக்கும் முயற்­சியின் ஒரு வடி­வ­மாகும். இது குறித்து ஜனா­தி­பதி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. மேலும் தெரி­வித்தார்.

இதன்­போது, அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் மற்றும் ஏ.ஆர்.இஷாக் எம்.பி ஆகியோர் இவ்­வி­வ­காரம் குறித்­த­தான சீ.சீ.ரி.வி. ஆதாரம் இருப்­ப­தா­கவும் பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­கா­திப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட ஜனா­தி­பதி, இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நாம் பொலி­ஸா­ருக்கு பணிப்­புரை விடுத்­தி­ருக்­கிறோம்.

இவர்கள் இனவாதத்திற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவேண்டும் என எதிர்பார்க்கிறோம். பொலிஸாரால் இவ்விடயத்தை கையாள முடியவில்லை எனில் இராணுவத்திற்கு இதனை கையாளுமாறு ஒப்படைக்கலாம் என்றார்.

President Maithripala Sirisena warned that he will hand over the task of arresting the trend of religious and communal violence to the army if the police are unable to apprehend those who perpetrate these crimes. 

The President said this when he met Government Ministers and MPs at the Parliamentary complex last afternoon. 

“These violent acts are being carried out by a group that is backed by the opposition. Why don’t you tell the people who is behind these incidents,” he had challenged the MPs present. 

Presidents had said this in reply to a complaint made to him by UNP MP Mujubur Rahaman that the government had failed to arrest those who promote religious and communal hatred.

9 கருத்துரைகள்:

துரோகியை விட எதிரி மேல். இவர்களுக்கு சிங்களவர்களிடம் இருக்கும் ஆதரவை விட மஹிந்தவிற்கு அதிகம். முஸ்லிம் அமைச்சர்கள் மஹிந்தவுடன் பேசுங்கள். இந்த துரோகிகளுக்கு நல்ல பாடம் காட்டுவோம். குறைந்தது வடகிழக்கு இணைப்பு என்கிற நிலையாவது மறைந்துவிடும்

IK MS; YOU ARE ABSOLUTELY CORRECT. MAITHRI AND RANIL MAKING DRAMA. YAHAPALAYAN NO ANY BENEFIT FOR MUSLIMS. THERE ARE CHEATING US.

MPs act fast..........

Not a North east problem.entire muslims problem

"THE MUSLIM VOICE" STATES THAT IF THEIS FELLOW (MP MUJEEBU RAHUMAN) HAS THE REAL FEELING TO HELP THE MUSLIMS FROM THE ATTACKS OF THE BBS, GANASAARA THERO AND THE YAHAPALANA NATIONALIST BUDDHIST MINISTERS LIKE CHAMPIKA RANAWAKA AND WIJEYDASA RAJAPAKSA, MUJEEBU RAHUMAN SHOULD RESIGN IMMEDIATELY WITHOUT CONTINUING TO GIVE PRESS STATEMENT TO DUPE THE MUSLIM COMMUNITY. MUSLIM MP’s SHOULD RESIGN THEIR MINISTER, DEPUTY MINISTER AND OTHER OFFICIAL POSITIONS IN THE GOVERNMENT AND SIT IN THE OPPOSITION. ALL MUSLIM MP’s SHOULD RESIGN AND SIT AS A SEPARATE GROUP OF 21 MUSLIM MP's IN PARLIAMENT, INSHA ALLAH. Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for your personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".
Noor Nizam - Convener "The Muslim Voice".

மஹிந்தயோடு கடுமையான ஒப்பந்தம் ஒன்றை போட்டுக் கொண்டு சேர்ந்து அரசாங்கத்தை அமைக்க வேண்டியதுதான்

Mahinda said they will get busy this year to topple
the government and GMOA and a few more unions have
already carried out strikes. They brought crowd to
the May day rally. The govt keeps postponing local
elections . In this background,BBS has intensified
its anti-Muslim campaign once again and the govt
is buying time watching these developments. One
thing I remember is , CBK is expert to let the time
pass without worrying too much about anything !
My3 seems to have borrowed the shoes from her !!
The shop burning is NOT ONLY AN ATTACK AGAINST OUR
BUSINESSES . IT IS AN ATTACK ON OUR DIGNITY AND THE
INACTION OF POLICE IS ALSO A SILENT ATTACK ON OUR
DIGNITY . THE IMPACT IS MORE SERIOUS . WE WON'T BE
ABLE TO WALK SAFE ON THE STREETS TOMORROW IF THE
SITUATION IS NOT ARRESTED IMMEDIATELY.

எழுதுங்கள் இவர் கல்லறையில் இரக்கமற்றவரென. பாடுங்கள் இவர் கல்லறையில் பைத்தியக்காரெணன

இவன் ஒரு PSYCHO, இந்த நாட்டைக் காப்பாற்றவாவது JVP யை ஆதரிக்க வேண்டியுள்ளது.

Post a Comment