Header Ads



இஹ்வான்களை ஏன் எதிர்கின்றனர்..?

கட்டாரின் மீது முழு வளைகுடா நாடுகளும் தடைபோட்டுள்ளது. இதற்கு மிகப் பிரதான காரணம் கட்டார் அரசு இஹ்வான்களை, அதாவது உலகின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த இஸ்லாமிய இயக்கமாகிய முஸ்லிம் சகோதர்த்துவ அமைப்பை ஆதரிப்பது தான்.

இஹ்வான்களின் மொத்த தலைமைத்துவமும் எகிப்திய சிறையில் உள்ள போது இவர்கள் ஏன் அந்த இயக்கத்திற்கு பயப்படுகின்றனர். டொடனல்ட் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தனது முதல் எதிரி இஹ்வான்களே என ஏன் குறிப்பிட்டான்? உலகில் எத்தனையோ அமைப்புகள் இருக்கும் போது இந்த அமைப்பை மட்டும் மிகப்பெரிய எதிரியாக ஏன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன? இஹ்வான்களின் ஸ்தாபக தலைவர் இமாம் ஹஸனுல் பன்னா 1949 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாலும் இந்த இயக்கம் எவ்வாறு இஸ்லாத்தின் எதிரிகளை அச்சுறுத்தும் பேரியக்கமாக வாழ்ந்தது?

அல்லாஹ்வின் அருளும் அவனது கண்கானிப்புமே இதற்கு பிரதான காரனமாகும். அல்லாஹ்வே எமது இலக்கு, தூதரே எமது தலைவர், அல் குர்ஆனே எமது சட்ட யாப்பு, அல்லாஹ்வின் பாதையில் போராடுவதே எமது வழிமுறை, அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பதே எமது உயர் வேட்கை என இமாம் பண்னாஹ் தமது அங்கத்தவர்களை பயிற்றுவித்தார்கள்.

இந்த இயக்கம் உலக அரங்கில் எற்படுத்திய தாக்கங்களை விளக்குவதற்கு இரண்டு உதாரணங்கள் போதுமானது.

01. பொஸ்னியாவின் முன்னால் ஜனாதிபதி அலி இஸ்ஸத் பேகோவிச் இப்படிக் கூறினார் "இஹ்வான்கள் இல்லை என்றால் பொஸ்னியா என்ற நாட்டை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." எனவே ஐரோப்பாவின் இதயத்தில் ஒரு முஸ்லிம் நாட்டை உருவாக்கிய இயக்கம்.

02. ஹமாஸ் (இஹ்வான்களின் பலஸ்தீன பிரிவு) - உலகின் எல்லா சக்திகளையும் இணைத்து மூன்று முறை தாக்குதல் நடத்தியும் அசைக்க முடியாது போன இஸல்லாமிய இயக்கம். எனவே தான் இஹ்வான்கள் இருக்கும் வரை அகன்ற இஸ்ரேல் என்பது ஒரு கனவு மட்டுமே என இஸ்ரேலின் பிரதமர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் ஆடம்பர ஆசைகளுக்குள் வாழும் வளை குடா அறபுத்தலைவர்களுக்கு தமது மன்னர் ஆட்சியை பாதுகாப்பதற்கு இஹ்வான்களை எதிர்த்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அறபு தலைவர்கள் ட்ரம்பிற்கு பயந்து கட்டாரை நிர்பந்திக்கலாம். ஆனால் அல்லாஹ்வை பயந்த இஹ்வான்களை அவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. இதற்கு இஹ்வான்களின் வரலாறே ஒரு சான்றாகும்.

இமாம் ஹஸனுல் பன்னா கூறும் இந்த வார்த்தக்களை கவனியுங்கள் "நீங்கள் கொலை செய்யப்படுவீர்கள், சிறையில் அடைக்கப்படுவீர்கள், நாடு கடத்தப்படுவீர்கள். இந்த உலகில் உள்ள எல்லா சக்திகளும் உங்களுக்கு எதிராக ஒன்று சேரும். ஆனால் நீங்கள் அல்லாஹ்வை சார்ந்து இருக்கும் வரையில் உங்களை யாராலும் அசைக்க முடியாது.

மேலும் இமாம் பன்னா கூறுகின்றார்: உலகம் அமேரிக்காவினதும், ரஷ்யாவினதும் கால்களுக்கு இடையில் பந்தாடிக்கொண்டு இருக்கின்றது. உலகமோ இவை இரண்டிற்கும் இடையில் குழம்பி நிற்கின்றது. உங்களிடம் தான் இறை வழிகாட்டல் என்ற மருந்துக்குவளை உள்ளது. நம்மிடம் ஆட்சியோ அதிகாரமோ இல்லை என்பதற்காக எந்த தீங்கும் நடக்காது.

இறுதியாக இந்த் வார்த்தைகளை கவனியுங்கள் "காலம் பாரிய பல நிகழ்வுகளை பிரசவிக்கும்; மகத்தான செயற்பாடுகளுக்கான சந்தர்பங்களும் கிட்டும். உங்களது அழைப்பை நேர்வழி, வெற்றி, சமாதனத்திற்கான அழைப்பாகவே உலகம் பார்க்கும். இந்த சமூகத்தின் வேதனைகளில் இருந்து இந்த அழைப்பு விடுவிக்கும் என சமூகம் எதிர்பார்கின்றது. சமூகங்களை வழிநடாத்துவதற்கும், தலைமை தாங்குவதற்குமான உங்கள் சுற்று வந்து விட்டது. வெறுமனே உட்கார்ந்து இருப்பவனை எழுந்து உழைக்குமாறு நான் அழைக்கின்றேன். ஏனெனில் போராட்த்தின் போது ஓய்விற்கு இடமில்லை."

"எமக்காக போராடுபவர்களுக்கு நமது வழிகளை நாம் திறந்து கொடுப்போம்."
(அல் அன்கபூத் 69)

இப்போது புரியும் என நினைக்கின்றேன்; டொனல ட்றம்பட் ஏன் இஹ்வான்களிற்கு அஞ்சுகிறான் என்று.

1 comment:

  1. இமாம் ஹஸனுல் பன்னாவின் இஸ்லாமியக் கல்வி எனும் நூல் ஒவ்வொரு முஸ்லிமும் படிக்க வேண்டியது. அதன் முதல் அத்தியாயத்திலேயே இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக கொண்டு வாழவேண்டிய முஸ்லிம் முதலில் உலகாசையிலிருந்து தனது உள்ளத்தை விடுவிக்க வேண்டும் ,எல்லா பலவீனங்களுக்கும் அதுதான் முதற்காரணம் என்று ஆரம்பிக்கின்றார். முஸ்லிம்கள் இதன் யதார்த்தம் புரியாத வரை தன்னிலும் உலகிலும் இஸ்லாத்தை வாழவைப்பது கடினம்.

    ReplyDelete

Powered by Blogger.