Header Ads



ஞானசாரா விவகாரத்தில், பொலிஸாருக்கு நீதிபதியின் நெத்தியடி..!

கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதிராக பொலிஸார் முதலில் ஒரு ‘பீ’ அறிக்­கையை தாக்கல் செய்­தனர். அந்த அறிக்­கையை பார்த்­த­போது நான் அதிர்ந்து போனேன்.

நாடே பற்றி எரியும் அள­வுக்கு அச்­சு­றுத்தும் வண்ணம் அதில் குற்­றச்­சாட்­டுக்கள் இருந்­தன. எனினும் இன்று இடை­யீட்டு மனு ஊடாக புதிய விட­யங்கள் கூறப்­பட்­டுள்­ளன.

அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்ட ஒரு விட­ய­மேனும் இதில் கூறப்­ப­ட­வில்லை. இது ஏன் என்று கொழும்பு மேல­திக நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல நேற்று திறந்த நீதி­மன்றில் கேள்வி எழுப்­பினார்.

நாட்டில் இடம்­பெறும் விட­யங்­க­ளையோ தற்­போது நிலவும் நிலை­மை­யையோ கருத்தில் கொண்டு என்னால் தீர்­மானம் எடுக்க முடி­யாது.

நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­படும் கருத்­துக்­க­ளுக்கு அமை­யவே நான் தீர்­மா­னிக்க முடியும். நாட்டில் இடம்­பெறும் எந்­த­வொரு விடயம் தொடர்­பிலும் பொலி­ஸாரின் அறிக்­கையைக் கொண்டே நீதி­மன்றம் தீர்­மா­னங்­களை எடுக்கும்.

எனவே பொலிஸார் அது தொடர்பில் மிக தெளி­வாக இருக்க வேண்டும். இவ்­வா­றான ஒரு­வ­ருக்கு ஏன் பிணை அளித்­தீர்கள் என பொது மக்கள் நீதி­மன்றை தூற்­று­வார்கள். பொலி­ஸாரின் நட­வ­டிக்­கையால் நீதி­மன்­றமே தலை­கு­னிவை சந்­திக்கும். பொலி­ஸாரின் நட­வ­டிக்கை குறித்து மிகவும் கவ­லை­ய­டை­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கல­கொட அத்தே ஞான­சார தேரர் தொடர்­பி­லான 73854 எனும் இலக்­கத்தைக் கொண்ட வழக்கு விசா­ர­ணையின் போதே பொலிஸார் சார்பில் ஆஜ­ரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்­வா­விடம் கேள்விக் கணை­களை தொடுத்­த­வாறு நீதிவான் இவ்­வாறு தனது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார்.
ஞான­சார தேரர் மீது 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அர­சியல் தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழ் முன்­ன­தாக நீதி­வா­னுக்கு பொலிஸார் அறிக்கை சமர்­பித்­தி­ருந்­தனர். அந்த அறிக்கை நேற்று பொலி­ஸாரால் இடை­யீட்டு மனு­வொன்­றி­னூ­டாக வலு­வி­ழக்கச் செய்­யப்­பட்டு புதிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் நேற்று புது அறிக்கை சமர்­பிக்­கப்­பட்­டது.
முன்­ன­தாக சமர்­பிக்­கப்­பட்ட அறிக்­கை­யா­னது பாது­காப்­பாக எவரும் பார்­வை­யிட முடி­யா­த­வாறு அப்­போ­தி­லி­ருந்து நீதவானால் பாது­காக்­கப்­பட்டு வந்த நிலை­யி­லேயே நேற்­றைய வழக்கு விசா­ர­ணையின் இடை­ந­டுவே நீதிவான் தனது அதி­ருப்­தியை இவ்­வாறு வெளிப்­ப­டுத்­தினார்.
ஞான­சார தேர­ருக்கு பிணை வழங்க எதிர்ப்பு இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா குறிப்­பிட்ட நிலையில் நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல பின்­வ­ரு­மாறு கேள்விக் கணை­களை தொடுத்தார்.
‘இதற்கு முன்னர் ஒரு ‘பீ’ அறிக்­கையை என்­னிடம் தககல் செய்­தீர்கள். இர­க­சிய அறிக்கை என கூறி­னீர்கள். அதனால் அதனை பெட்­ட­கத்தில் வைத்து நான் பாது­காத்தேன். ஐ.சீ.சீ.பி.ஆர். சட்­டத்தின் கீழ் அதில் குற்­றச்­சாட்­டுக்கள் இருந்­தன. அதனை வாசித்­த­போது அதன் பார­தூ­ரத்தை என்னால் புரிந்­து­கொள்ள முடிந்­தது. நாடே பற்றி எரியும் வகையில் அதன் தன்­மையை நான் உணர்ந்தேன்.
எனினும் இன்று (நேற்று) புதிய ‘பீ’ அறிக்­கையை சமர்­பித்­தீர்கள். அதில் முதல் ‘பீ’ அறிக்­கையில் குறிப்­பிட்ட ஒரு விடயம் ஏனும் இல்லை. ஏன் இந்த இரண்டு வேஷங்கள் என கேள்வி எழுப்­பினார்.
இதன்­போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,
கனம் நீதிவான் அவர்­களே, உண்­மையில் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பொலிஸ் சட்டப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ரு­டனும் கலந்­து­ரை­யா­டிய பின்­ன­ரேயே நாம் இந்த புதிய அறிக்­கையை சமர்­பித்தோம் என்றார்.
இதன்­போது தொடர்ந்து கருத்துத் தெரி­வித்த நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல,
ஞான­சார தேர­ருக்கு பிணை வழங்க நீங்கள் எதிர்ப்பு எத­னையும் தெரி­விக்­க­வில்லை. சாதா­ரண ஒருவர் தொடர்பில் நீங்கள் இவ்­வாறு நடந்­து­கொள்­வீர்­களா? குற்றம் இடம்­பெற்ற இடத்தை பார்வை இடச் சென்­ற­வரைக் கூட நீங்கள் கைது­செய்து பிணை சட்­டத்தின் 14 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் பிணை வழங்க எதிர்ப்பு வெளி­யிட்டே ஆஜர் செய்­வீர்கள்.
இந்த வழக்கில் முதலில் நீங்கள் தாக்கல் செய்த ‘பீ’ அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்கள் அனைத்தும் பிணை வழங்க முடி­யாத மிகப் பார­தூ­ர­மான குற்­றங்கள் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன. ஏன் அதில் உள்ள ஒன்­று­கூட இந்த அறிக்­கையில் இல்லை. அவற்­றுக்கு சாட்­சிகள் இல்­லையா. இல்லை எனில் ஏன் அப்­படி ஒரு ‘பீ’ அறிக்­கையை சமர்­பித்­தீர்கள்.
நள்­ளி­ரவு 12 மணிக்கு என்னை எழுப்பி நீங்கள் அவ­சர விடயம், அபா­ய­க­ர­மான விடயம் எனக் கூறித்­தானே அந்த பீ அறிக்­கையை சமர்­பித்­தீர்கள்.
உங்­களில் ஒரு­வரின் தொப்­பியை கழற்­றி­ய­தா­கவும் சீரு­டையைப் பிடித்து இழுத்­த­தா­கவும் தள்­ளி­விட்­ட­தா­கவும் நீங்­களே தானே கூறி­னீர்கள். ஏன் அது ஒன்றும் இந்த புதிய பீ அறிக்­கையில் இல்லை.
அந்த பீ அறிக்­கையில் உள்ள வார்த்தைப் பிர­யோ­கங்­களை பார்த்­த­போது நாடே கொளுந்­து­விட்டு எரியும் அபாயம் காணப்­பட்­டது என கூறினார்.
இதன்­போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,
நீதிவான் அவர்­களே, இந்த விசா­ரணை ஆரம்­பத்தில் நான் அதற்கு பொறுப்­பான கட­மையில் இல்லை. நான் குற்­றங்கள் தொடர்­பி­லான பிரதி பொலிஸ் மா அதி­ப­ராக கட­மையைப் பொறுப்­பேற்ற பிறகு விசா­ர­ணைகள் மிக ஆழ­மாக என் ஆலோ­சனைப் படி முன்­னெ­டுக்­கப்­பட்­டன என்றார்.
இந் நிலையில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் குற்­றச்­சாட்­டுக்­களை கமல் சில்வா மன்றில் பிரஸ்­தா­பித்த நிலையில், நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல மீளவும் திறந்த மன்றில் கருத்­துக்­களை தெரி­வித்தார்.
நீங்கள் முதல் பீ அறிக்­கையில் தெரி­வித்த விட­யங்­களால் அதனை பாது­காப்­பாக வைக்க வேண்டும் என கூறினீர்கள். அதனால் இது­வரை அது என் கைக­ளி­லேயே இருந்­தது. வீட்டில் கூட யாரும் பார்த்­து­விடக் கூடாது என்­பதில் நான் அவ­தா­ன­மாக இருந்தேன். அப்­ப­டி­யாயின் நீங்கள் அதில் கூறி­யுள்ள குற்­றங்கள் எத­னையும் சந்­தே­க­நபர் புரி­ய­வில்­லையா? ஏன் அதில் அவ்­வாறு குறிப்­பிட்­டீர்கள் ? என நீதிவான் மீள கேள்வி எழுப்­பினார்.
இதன்­போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா,
இல்லை. சந்­தேக நபர் அதில் கூறப்­பட்­டுள்ள விட­யங்­களை புரிந்தார் தான் என்றார்.
அப்­ப­டி­யானால் ஏன் அவற்றை வாபஸ் பெற்­றீர்கள் என நீதிவான் மீள கேட்டார்.
அவ­ச­ர­மாக இந்த பிரச்­சி­னையை தீர்த்து சந்­தே­க­ந­ப­ருக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிகை ஒன்­றினை தாக்கல் செய்­யவே இந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­தாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா பதி­ல­ளித்தார்.
பொலி­ஸா­ரா­கிய உங்­க­ளது நட­வ­டிக்­கைகள் கவ­லை­ய­ளிக்­கின்­றன. சந்­தேக நப­ருக்கு பிணை மறுக்க எந்த கார­ணமும் உங்­களால் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. பிணை வழங்க முடி­யாத குற்­றச்­சாட்­டுக்கள் மீளப் பெறப்­பட்­டுள்­ளன என கூறி நீதிவான் பிணை அனு­மதி வழங்­கினார்.
அத்­துடன் பொலி­ஸாரின் சீரு­டையை கழற்­று­வ­தா­கவும் முஸ்லிம் குடும்­பங்­களை கொலை செய்­வ­தா­கவும் பொலிஸ் வாக­னத்தை தீயிட்டு கொழுத்­து­வ­தா­கவும் கூறிய எந்த விட­யமும் புதிய அறிக்­கையில் இல்லை என சுட்­டிக்­காட்­டிய நீதிவான், நாட்டில் என்ன நடந்த போதும் நீதி­மன்றில் முன்­வைக்­கப்­படும் கருத்­துக்­களை மட்டும் மையப்­டுத்­தியே தன்னால் தீர்­மா­னிக்க முடியும் என்­பதை சுட்­டுக்­காட்­டினார்.
பொலி­ஸா­ரா­கிய உங்கள் நட­வ­டிக்கை கார­ண­மாக நீதி­மன்­றையே பொது மக்கள் குறை கூறுவர். இவர் போன்ற ஒருவருக்கு ஏன் பிணை வழங்கினீர்கள் என பொது மக்கள் கேட்பார்கள் என சுட்டிக்காட்டிய நீதிவான், வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
இதன் போது ஞானசார தேரர் பொலிஸ் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிவானைக் கோரினர்.
இதன்போது, அவர் தானாக விசாரணைக்கு வந்து ஆஜராகியுள்ளார் என நீங்கள் தானே கூறினீர்கள். அப்படியானால் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் அப்படியான உத்தரவு தேவையற்றது என அறிவித்து அதனை நீதிவான் நிராகரித்தார்.
-எம்.எப்.எம்.பஸீர்-

8 comments:

  1. பொம்மல்லாட்டம் நடக்குது ரெம்ப புதுமையாக இருக்குது.

    ReplyDelete
  2. நீநீநீதிதிதிதி ஹஹ ஹஹஹ,ஹஹஹஹஹஹ நிதி,வென்றது காவிகளின்.காலை நக்கும்,காலிவல்கள்,..ஹஹ ஹஹஹ ஹ நிச்சயம் பதில் இறைவன் காட்டுவான்

    ReplyDelete
  3. Wijedasa Rajapakse might have done the whole drama with the help of police. I must say the judge is a great person.

    ReplyDelete
  4. இலங்கை பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும்,இனி அவர் அந்த தொழிலுக்கு நம்பிக்கையற்றவர்.

    ReplyDelete
  5. இலங்கையின் நீதித்துறை சுயமாக இயங்குமாயின் நீதிபதி புத்திக போன்ற அதிகமானவர்களை பெற்றிருக்கலாம். ஆனால் கேவலமான அரசியலும் தூரநோக்கற்ற அரசியல்வாதிகளும் இருக்கும் வரை மக்களின் தலையெழுத்து இவ்வாறே தொடர்ந்து கொண்டிருக்கும்.

    ReplyDelete
  6. The judge is great but Wljedasa should be accused of playing the whole drama

    ReplyDelete
  7. Judge protect the justice system. Police fail in there job.

    ReplyDelete
  8. எப்போது நீதி துறையையும் புத்த சாசன அமைச்சையும் ஒருவருக்கும் வழங்கப்பட்டது அப்போதே நாட்டின் சிறுபான்மையினருக்கான அநீதி மைத்திரி அவர்களால் தூதுபமிடப்பட்டுவிட்டது !

    ReplyDelete

Powered by Blogger.