Header Ads



பதவி துறக்கத் தயார் என்பது, நடைமுறைச் சாத்தியமா..?

(J.M.Hafeez)

அரசியலில் நிரந்தர நற்பும் கிடையாது. அதேநேரம் நிரந்தர பகைமையும் கிடையாது என்பார்கள். அதாவது அரசியல் நீரோட்டத்தில் எந்தநேரமும் எவரும் எவருடனும் சேரலாம், ஆட்சி அமைக்கலாம், ஆட்சியைக் கவிழ்க்கலாம் போன்ற பல விடயங்ளை முன்னெடுக்கலாம். 

அதற்காக சிலர் அமைச்சுப் பதவிகளை தூக்கி வீசிய சந்தர்பங்கள் பல கண்டுள்ளோம். உதாரணங்கள் தேவையில்லை. அவ்வாறு அதிகாரத்தில் உள்ளவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை தூக்கி எறிந்து அதன் பின் மேற்கொண்ட மாற்றம் வெற்றி அளித்தபோது அவர்கள் மேலும் மேலும் உயர்வடைந்தனர். அதேநேரம் தாம்மேற் கொண்ட பலப்பரீட்சை தோல்வி அடைந்த போது மிகவும் பாதிக்கப்பட்ட சந்தர்பங்கள் பல உண்டு. 

கடந்த தேர்தல் காலத்தில் திஸ்ஸ அத்தநாயக்கா குறுக்கே பாய்ந்ததால் ஒரு பின்னடைவை அது அவருக்கு ஏற்படுத்தியது. அதேபோல் மகிந்தவும் காலத்திற்கு முன் தேர்தலை நடத்த எடுத்த முடிவும் நிலைமையை மோசமாக்கியது நாம் அறிந்ததே.

தற்போது இலங்கை அரசியலில் முஸ்லிம் சமூகம் சார்ந்த பிரச்சியில் பதவியைத் துறக்கவும் தயார் என்று சவால் விடும் அமைச்சர்களும் எம்.பி களும் இல்லாமலில்லை, அவை வாய்ச் சவாலாக மட்டுமே இருக்கும் என்றே பலர் கருது கின்றனர்.  அது பரவாயில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவியைத் துறந்து சாதிப்பதற்கு எதுவும் இருக்காது. ஏனெனில் பதவி துறந்த மறுகமே தற்போதைய ஆட்சியை கவிழ்க்க முடியுமாயின் அந்தப் பலப்பரீட்சை வெற்றி அளிக்கும். ஆனால் புதிய அரசியல் சீர்திருத்தத்தின்படி 4 வருடங்கள் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. அதாவது 2019 வரை நீடிக்கும். அதே நேரம் எமது 21 முஸ்லிம் எம்.பி. களால் ஏற்படும் வெற்றிடத்தை நிறப்ப இன்னும் 21 இனவாதிகள் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

எவே பதவிகளைத் துறந்து சாதிக்க ஒன்றும் இல்லை. ஆனால் இன வாதிகள் எதை எதிர்பார்கிறார்களோ அதற்கு நாம் வழி விடும் ஒன்று மட்டுமே நடக்கும். 
தற்போது ஒன்றுமே செய்யாது இருப்பதும் ஒன்றுதான், பதவியைத் துறப்பதும் ஒன்றுதான் என சிலர் வாதிடலாம். பதவியைத் துறப்பதாகக் கூறி எமக்கு காட்டும் பூச்சாண்டிகளைக் கூட பதவி துறந்தபின் காட்ட முடியாது இருக்கும். எனவே இன்னும் அத்தகைய முடிவுக்கு வர அவசரம் எதுவும் இல்லை. ஆனால் அரச எதிர் தரப்பு ஆதரவாளர்கள் அல்லது கூட்டு எதிரணி ஆதரவாளர்கள் அதனை வரவேற்கலாம். ஆனால் பொதுவாக தற்போதைய நிலையில் அப்படி ஒன்றை செய்து எதனையும் சாதிக்க முடியாது என்றே பொதுவான கருத்து நிலவுகிறது.  எனவே அப்படியாக பதவியைத் துறப்பதாகக் கூறுபவர்கள் தம்மை வீர்ர்களாகக் காட்டுவதைத் தவிற சமூகத்திற்கு எதனையும் செய்யமுடியாத நிலை ஏற்படும். 

அதே நேரம் அல்லாஹ் கொடுத்த அமானிதத்தை சரியாக நிறைவேற்றாதவர்களுக்கு அல்லாவிடத்திலும் தண்டணை உண்டு. அடுத்த தேர்தலில் பொது மக்களும் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்ற கருத்தும் உண்டு. ஏனெனில் அல்லாஹ் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கு கிறான். அவன் நாடாதவர்களிடத்தில் அதனை பறித்து விடுகிறான். எம்மிடம் பூச்சாண்டி காட்டலாம். ஆனால் இறைவன் பிடி கடுமையானது.

எனவே பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள்  நடைமுறைச் சாத்தியம் கொண்ட விடயங்ளை விட்டு விட்டு வீரவசனம் பேசுவது வாக்காளர்களை ஏமாற்றுவதாக உள்ளதாக பலர் கவலைப் படுகின்றனர். 

1 comment:

  1. A collective action of all Muslim MPs is what needed ...why do you support these inneptitute Muslim MPs?
    They do not deserve to be representing Muslimy community

    ReplyDelete

Powered by Blogger.