Header Ads



ரமலான் விடுமுறையை மேலும், ஒருவாரம் நீட்டித்து சவுதி அரசு உத்தரவு


இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையான ரமலான் மாத நோன்பு காலத்தையொட்டி சவுதி அரேபியா நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பத்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த விடுமுறைக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவடையவுள்ள நிலையில் ரம்ஜான் கால விடுமுறையை மேலும் ஒருவாரம் நீட்டித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுதி நாட்டுக்கான புதிய பட்டத்து இளவரசரை அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் விடுமுறை நீட்டிப்பு தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. நோன்பு மிகப்புனிதமான கடமை ... ஆனால் அது இஸ்லாத்தில் நான்காவது கடமையே. அதற்கு முந்தியது "சகாத்" எனும் மிகப்பாரிய கடமையாகும். சரியாக புரிந்து கொள்வோம்!


    இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது . அதனை நபி صلى الله عليه و اله و سلم‎ அவர்கள் கூறுவதாவது:இஸ்லாம் ஐந்து தூண்களால் நிர் மாணிக்கப்பட்டுள்ளது.
    1- வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதுடன் முஹம்மது صلى الله عليه و اله و سلم‎ அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனின் தூராகவும் இருக்கிறார் என்று சாட்சியம் கூறுவது.
    2- தொழுகையை நிலைநாட்டுவது (3) ஜக்காத் கொடுப்பது (4) ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது (5) ஹஜ் செய்வது (முஸ்லிம்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு)

    ReplyDelete
  2. Good.....more bonus for sluggish Saudis......

    ReplyDelete

Powered by Blogger.