June 09, 2017

"சிங்களவர்ளுடன் சேர்ந்து வாழலாம், முஸ்லிம்களுடன் வாழமுடியாது"

-யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும், வலம்புரி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்-

மிகப்பெரியதொரு யுத்தத்தில் தமிழ் மக்கள் நொந்து கெட்டுப் போயுள்ளனர். சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்பதற்கு அப்பால், உயிரிழப்புக்கள், காணாமல் போனவர்களின் நிலை,தமிழ் அரசியல் கைதிகளின் அவலம் என எங்கு பார்த்தாலும் கண்ணீரும் செந்நீரும் என்பதாக தமிழ் மக்களின் வாழ்வு அமைந்துள்ளது.

வன்னிப் பெருநிலப்பரப்பில் கொடும் போர் நடந்த போது - தமிழின அழிப்பு இடம்பெற்ற போது தமிழ் மக்களைக் கொல்லாதீர்கள் என வாய் திறந்து சொல்லாத முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவரும் தமிழ் மக்கள் பற்றியோ தமிழ் அரசியல் தலைமை பற்றியோ கதைக்கத் தகுதியற்றவர்கள்.

இந்த நாட்டின் சிறுபான்மை மக்களாக இருக்கக்கூடிய முஸ்லிம் சகோதரர்கள் இன்னொரு சிறுபான்மை இனமாகிய தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.

மாறாக விடுதலைப் புலிகள் தங்களை வட பகுதியில் இருந்து வெளியேற்றினர் என்பதைக் குற்றச்சாட்டாக வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்தவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த போது புலிகளின் தலைமையுடன் உடன்பாட்டுக்கு வந்த பிற்பாடு; புலிகள் தோற்று விட்டனர் என்பதால் வட பகுதியில் இருந்து தங்களை வெளியேற்றியதற்கு வஞ்சம் தீர்க்க முஸ்லிம் அரசியல் தலைமை முற்படுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

விடுதலைப் புலிகள் இருந்த போது அவர்களுடன் இணங்கிப் போவதற்கு உடன்பட்டவர்கள், அவர்கள் இப்போது இல்லை என்றவுடன் தமிழ் மக்களை பல வழிகளிலும் நசுக்க முனைப்புக் காட்டுவது முஸ்லிம் தலைமைக்கு அவ்வளவு நல்லதல்ல.

பொதுவில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்; தமிழ் மக்களுக்கு - தமிழ் இனத்துக்கு எதிராகச் செய்யும் எந்தச் செயற்பாடு குறித்தும் தமிழ் அரசியல் தலைமை வாய்திறப்பதாக இல்லை.

ஏதோ! முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எது செய்தாலும் அது சரி அல்லது அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர்களாக இருக்கக்கூடிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்குப் பாதகமாக முன்னெடுக்கும் சதித்திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அவை பற்றி நாம் கண்டுகொள்ளக்கூடாது என்பது போல தமிழ் அரசியல் தலைமை கருதுகிறது.

ஆகையால், மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நடந்து கொள்வதால் அவர்கள் மீது தமிழ் மக்கள் கடும் ஆத்திரம் கொண்டுள்ளனர்.

நிலைமை இப்படியே நகருமாக இருந்தால், சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழலாம், ஆனால் இவர்களுடன் முடியாது என்பதாக தமிழ் மக்களின் முடிவு இருப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.

- Valampuri

31 கருத்துரைகள்:

True points.

அதன் பின்னர், மகிந்த அரசுக்கு காக்கா பிடிப்பதற்காக ஜெனிவா தீர்மானங்களை எதிர்த்தும், USA, UN தலையீடுகளை எதிர்த்தும் ஆர்ப்பாட்டங்கள் செய்தார்கள், முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் நாடுகளுக்கு சென்று மகிந்த அரசுக்கு ஆதரவு திரட்டினார்கள்.

இப்போது... தினம் தமக்கு நடக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு கர்தாள் கூட வைக்க பயம்.

அமெரிக்கர்களிடம் ஓடி முறையிடுகிறார்கள். ஜெனிவாவில் தமக்கும் ஆதரவாக தீர்மானங்கள் வரவேண்டுமென்று ஏங்குகிறார்கள்.

இத்தனைக்கும் முஸ்லிம்களும் சேர்ந்த கூட்டாட்சி தான் தற்போதய அரசு.

Muslims also think as you think

உண்மையே!
யாழ்ப்பாணத்தில்லீருத்து முஸ்லீம்கள் வெளியேற்றப்படதிலிந்து (1991)முழுமையாக 3ஆண்டுகள்கூட யாழ்ணபாம் புலீகள்கட்டுபாட்டீல் இருக்கவில்லை 1995 ல் விடுதலைபுலீகள் வன்னிக்குள் சென்றுவிட்டனர்.1995லலீருந்து யாழ்ப்பாணம் ஆலசகட்டு பாட்டீலேயே இருந்தது.சரியாக 22 ஆண்டுகள் ஆகியும் மீள்குடீயேற்றம் என்று நாடகமாடீ அரசியல் செய்யும் வியிபிரிகளின் இனவாததிற்கு தமிழர் அடிபணிய மாட்டார்கள்.
தமிழர் நெருங்கி நெருங்கீ வந்து நேசகரம் நீட்டும் போதெல்லாம் அற்ப சலுகைகளுக்காக களுத்தறுத்தனர்.
சிங்களவருக்காக தமிழரை உதாசீனம் செய்தனர். இன்று இரு சமூகங்களின் ஆதரவுமீன்றி நிற்கின்றனர்.

அப்ப காத்தான்குடி தொழுகையில் இருந்த முஸ்லிம்களை நாய சுடுற மாரி சுட்டது ராணுவமா??

வலம்புரி எப்போதும் புலி சார்பு அதோட அன்டனி குமரன் இரண்டும் எழுத்து புலிகள்.. இந்த லூசு கள கணக்கெடுக்காம விடுவதே சிறந்தது...

பைத்தியக் காரத்தனமான கருத்தை ஒரு பத்திரிகை எழுதியுள்ளது. தமிழ், முஸ்லிம் உறவை வளர்க்கும் தறுவாயில் பழசை மறந்து நல்ல க்உத்துக்பளை விதைப்போம். தமிழ் விடுதலை இயக்கம் ஒரு சமூகத்தையே வெளியேற்றியதை விட எதுவும் பெரிய தவறாகப் பட மாட்டாது. சிங்கள தீவிரவாதிகளால் தீங்கு வருவது முஸ்லீம் களுக்கு மட்டுமல்ல. சிறுபான்மை என்றவகையில் தமிழருக்குமே. நல்ல கருத்துக்களை எமக்குள் விதைப்போம்.பேசுவது தமிழ் என்று யோசிப்போம்.

Muslim politician ethukku eduththalum vatakkil North erunthu Muslimkal. Virttapattarkal ore pesikondu erukkirarkal. Kilakkil(est) Muslimkal. Athikamana thamilarkal kollapattu erukkirarkal veramunai. Malvaththai mallikaitivu thickening adddappallam. Pottuvil udumpankulam periyaneelavai kalmunai savalakkadai arumukaththankudieruuppu evade sollikondu popular evvalovo thamilarkal as konduerkkirarkal

அப்ப நீங்க இரணடு பேரும்தான் தமிழ் மக்களின் எக பிரதிநிதிகள் என்கிறீர்கள்.பிரபகரனுக்கு அடுத்து நீங்கள் இருவரும்தான்.

Did the editor of valumpuri raise his voice when muslims were chased out. Did prabakaran ever condoled to his dastardly act. Rauf hakeem went agreed for cohabitation for his owm benefit. Rauf hakeem is not the leader of muslim. He is the leader of muslim congress. It has to be accepted to some degree we failed to raise voice against the atrocities. It does not mean tamils cant live wth muslum. Tamil also to be blamed for towing line wth prabaharan and karuna for all crimes in muslim areas like murder. Extortion.
A responsible editor will never stoop so low

As a common Muslims we don't have any problems with tamils we know that thamil people suffer too much

தமிழ் மக்கள் தொடர்பாக சொல்லப்பட்டவை அத்தனையும் உண்மைதான். ஆனால் தமிழ் நில போராட்ட ஆரம்பத்தில் கிழக்கில் முஸ்லிம்கள் இயக்கங்களில் சாரை சாரையாக சேர்ந்ததும் பலஸ்தீன் போன்ற முஸ்லிம் நாடுகளில் பயிற்சி பெற்றமை, உயிரைப் பணயம் வைத்து போராளிகளுக்கான உணவு மற்றும் அடைக்கலம் வழங்கியமை, இதனால் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட மை,சுட்டுக்கொல்லப்பட்டமை என இன்னும் எத்தனையோ வழிகளில் உதவியதை வசதியாக மறந்துவிட்டீர்ரகள்.
இடைநடுவே போட்டிக்குழுக்களிடையேயான மோதல் என்ற அடிப்படையில் முஸ்லிம் போராளிகளை தேடித்தேடி கருவறுத்தமை, முஸ்லிம் கிராமங்கள் வயல்கள் என இரத்த ஆறு ஓடச்செய்தமை, பள்ளிகளைப் பிணக்காடாக மாற்றியமை, ஹஜ் பயணிகளை கடத்தி உயிரோடு புதைத்தமை, மின்கம்பத்தண்டனை, டயரில்போட்டு எரித்தமை, கடத்தல் கப்பம் என அத்தனையையும் அனுபவித்த போது முஸ்லிம்களின் ஓலத்தையும் ஒப்பாரியையும் கேட்காது வசதியாக கும்பகர்ண தூக்கம் போட்டுவிட்டு , இன்னும் ........
இத்தனைக்கும் மேலாக உடு துணியோடு வட மாகாண மக்களை வெளியேற்றி அகதிகளாக்கிவிட்டு குருடன் விழித்தெழுந்தது போன்று, வலம்புரி ஆசிரியர் தலையங்கம் அமைந்திருப்பது ஆச்சரியத்திலும் மகா பெரும் ஆச்சரியம் தான்.
நான் நினைக்கிறேன் வலம்புரி ஆசிரியர்
2000ஆண்டிற்குப் பின் பிறந்த சிறுவன் என

நீர் சொன்னவற்றை விட அதிகமாக ஜிகாத் கிழக்கில் தமிழருக்கு செய்தது.
ஆனால் அவற்றை தமிழர் காட்டீ அரசியல் செய்யவில்லை.
வீரமுனை படுகொலை கிழக்கு பல்கலை படுகொலை.அம்பறையில் தமிழ்கிராமங்கள் 8முற்றுமுழுதாக சுத்தீகரிப்பு செய்யப்பட்டது.இவை வெறும் சில வே சொல்லப்போனால் பட்டீயல் ரொம்ப நீளும்.பட்டியல் வெளியிட நான் தயார்.(திகதி இடம் படுகொலை செய்யப்பட்ட எண்ணிக்கை உட்பட.)வெளியிட ஜப்னாமுஸ்லீம் தயாரா.???

நீங்கள் வரலாறு தேறியத பச்சை குழந்தை. நல்லா வருது கேட்டு கொள்ளதே

எங்களோடு சேர்ந்த வாழ விருப்பமில்லையெண்டா எதுக்கு கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களை வடகிழக்கோடு இணைக்க நாக்கை தொங்கவிட்டு அலையிறீங்கள்? வெட்கமில்லாத பாசிச கூட்டம்

இந்த கட்டுரையை எழிதிவருக்கும் மேலும் அஜன்,குமரன், சகோதர்களுக்கும் உங்கள் மூதாதையர்களிடம் சென்று முஸ்லிம்களின் பண்புகளை கேட்டு நன்றாக தெரிந்துகொள்ளவும் ஏனெனில் பிரபாகரனின் அட்டகாசத்தின் பின்புதான் தற்போது வாழும் முஸ்லிம்கள் இந்துக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள்,மேலும் விடுதலை போராட்டத்திற்காக செல்லக்களி என்ற கெப்டனுடன் மொகமட்நியாஸ் என்ற சகோதரனும் இன்னும் இரண்டு முஸ்லிம் சகோதர்ர்களும் போரட்டதின் கண்ணிகாலத்தில் முதல்முதலாக உயிர்மாண்ட வரலாறுகள் உங்களுக்தெரியுமா?மேலும் 1915களில் சிங்களவர்கள் முஸ்ம்களுக்க அனியாயம் செய்தபோது ஒருதமிழர்கூட வாய்திரக்கவில்லை! மேலும் நாங்கள் வார்தைகளை நீங்கள் கொப்பி அடித்து சொல்கின்றீர் என்னவெனில் எங்களால் சிங்களவர்களுடன் வாழமுடியும் ஆனால் இந்துக்களாகிய உங்களுடன் வாழமுடியாது மேலும் உங்கள் மக்களிலிள்ள பிரமணர்கள் செட்டிகளையும், பாட்டாளிகளையும்,தலித்களையும்,இன்னும்பல பிரிவுகளையும் சேர்த்து அனைவரும் சம்மானவர்கள் என்று வாழ்ந்துகாட்டுங்கள் அதன்பின் முஸ்லிம்களை சேர்த்து உங்களால் சம உரிமை பேனி வாழமுடியுமா என்று சிந்திப்போம்.

Lafir அண்ணே, இப்போது தான் நீங்கள் சில தவறான விடங்கள் சொன்னாலும் தெளிவாக சொன்னீர்கள்.

Ltte செய்தவைகளுக்கு இப்போதைய தமிழர்களை பழிவாங்க முடியாது.

1980/90களில் கூட Ltte பிழை செய்வதால் அவர்களை தட்டி கேட்கும் நிலையிலா தமிழர்கள் இருந்தார்கள்?

இப்போதய உங்கள் நிலமையை போல தான், அப்போது தமிழர்கள் சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாயை திறந்தார்கள்.

அதே போல், நீங்கள் Ltte செய்ததாக குறிப்பிடும் அவ்வளவும் கிழக்கில் ஜீகாத் தீவிரவாதிகளும், முஸ்லிம் ஊர்க்காவல் படையினரும் தமிழர்களுக்கு செய்தனராம். அதற்கு தான் Ltte யும் பதில் அடி கொடுத்திருக்கக்கூடும்.

வடக்கில் முஸலிம்களிலும் பார்க்க தமிழர்கள் தான் அதிகளவில் அகதிகளானார்கள்.

1995 யில் இருந்து வடக்கு அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டதே. நீங்கள் தான் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களின் விசுவாசிகள் ஆகி விடுவார்களே. அப்போ 1995 யிலேயே அரசு தயவுடன் மீள குடியேறியிருக்கலாமே?

எவனோ ஒரு மடையன் வலம்புரி ஆசிரியர் என்று கூலிட்கு வேலை செய்கிறாப்போல் இப்படி இனவாத்த்தை தூண்டி ஒரு கட்டுரையை எழுதிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான், நாம் இங்கு முட்டாள்கள் போன்று சண்டை பிடிற்கிறோம். தயவு செய்து நிறுத்துங்கள்.

Why should we support terrorists? Who will support terrorist who blew up in the middle of innocent people? The editor may claim their struggle was for liberation of their people but what they did with the help of Tamil Nadu politicians is not less than terrorism. Recruiting innocent children, taking ransom from those lived overseas and threatening their families back home in Sri Lanka are not other than terrorism. As you think that you can't live with us we too think Muslims will not be able to live with certain Tamil groups in the Island. For your information, Muslims live in the country spread all over Island. They can easily get along with Sinhalese as we have been living with them for many years...

This comment has been removed by the author.

nazrey,

First thing first , Muslims have no leaders and only
money makers out of anything and everything ! Some
Muslims get into politics like everybody else using
Muslim community for their benefit and they have
millions of stories to hoodwink the community and at
the end ,the community face their nemesis and now is
such a time . If Muslims want to learn from
experience, this is the time and remember EXPERIENCES
ARE BITTER MOST OF THE TIME. AND REMEMBER THERE WERE
HANDFUL OF MUSLIMS WHO RAISED THEIR VOICES AGAINST THE
SUFFERINGS OF TAMILS BUT THEY WERE NOT LABLED LEADERS
OF MUSLIM COMMUNITY. TODAY TAMIL MAY NOT WANT TO FEEL
SAD ABOUT WHAT'S GOING ON AGAINST MUSLIMS BY A HANDFUL
OF CRIMINALS BUT TAMILS SHOULD NEVER BLAME MUSLIMS FOR
NOT TAKING SIDE WITH THEM IN THEIR WAR AGAINST THE
COUNTRY. IF TAMILS HAD HISTORIC REASONS TO WAGE A WAR
AGAINST THE COUNTRY , MUSLIMS HAD THEIR OWN REASONS NOT
TO SIDE WITH IT AND TAMILS HAVE TO RESPECT IT . WE
MUSLIMS DON'T EXPECT TAMILS TO COME FORWARD WITH THEIR
SOLIDARITY WITH SUDDEN AND STRANGE LOVE .BUT IF THEY
RECKON THIS IS THE TIME TO FORGET THE PAST AND START A
NEW BEGINNING , THEY ARE MOST WELCOME.PLEASE REMEMBER,
MUSLIMS HAVE NOT DECIDED TO TAKE THE LAW INTO THEIR
HANDS LIKE WHOEVER IS BEHIND WHAT'S GOING ON ! ALL WE
WANT IS UPHOLDING LAW AND ORDER AND THAT IS ENOUGH FOR
US .

"Dhemaloth ekai gooth ekai" it's correct

இவன் வலம்புரி அல்ல வம்பன்புரி

Politics is mixed up with all the attacks on minorities, today Muslims and then Tamils. Don't forget this Mr. Antonyraj and Kumaran.

From 1915 the riots were always against muslims, the tamil leadership of people never supported Muslims,Razik Fareed MP divided the Muslims from Tamils permanently be describint them as Moors in the birth certificate, and only when Selvanayagam raised voice against Sinhala only then the Tamil Sinhala honeymoon was over, violence started to erupt against tamils, the muslims initially supported the tamils, but eventually they withdrew, the tamils domination of muslims in tamil dominated areas is one reason, the tigers action and the government's political strategy to divide the two communities further also paid dividends.....the war was over, the attention towards harassing muslims started, and the tamils like this silently,because Muslims domination can be dangerous to buddhists and hindus as well, so the hindus are silent partners now.

@riyal, (1)இப்போது தான் Ltte இல்லையே - எனவே நொண்டிசாட்டுகள் சொல்லாதீர்கள்.
(2) இங்கு இந்தியா மாதிரி இல்லை. இங்கு சாதி பிரிவுகள் மிக குறைவு. அவையும் இந்துகளின் முழு கட்டடுப்பாட்டுக்குள் தான் உள்ளது. வீதிக்கு வந்தில்லை. உள் வீட்டு விடயங்களில் மூக்கை நுழைக்க உங்களுக்கோ, எங்களுக்கோ தேவையில்லை.
ஆனால் நேற்று ஒட்டமாவடியில் முஸலிம்கள் தான் ஷியா எனும் சாதி முஸ்லிம்களுடன் வீதியில் வன்னமுறையில் ஈடுபட்டார்கள். Any comments pls.
(3) இலங்கை மட்டுமெல்ல முஸ்லிம்கள் உலகில் எங்கு போனாலும் மற்றைய மதங்களுடன் இணைந்து வாழாமல் பிரச்சனைகள் கொடுத்துகொண்டுதான் இருப்பார்கள். அது ஏன் என நீங்கள் தான் யோசித்து தீர்த்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள பிரச்சனைகள் இல்லாத ஒரு நாடு சொல்லுங்கள் பார்ப்போம்?

Kumar Kumaran, Antonyraj and Sritharan இவர்கள் மூவரும் பெரிய இனவாதிகள். இவர்கலுடன் வாதிட்டு பெரும்பாலான நல்லுள்ளம் கொண்ட தமிழர்களைப் பகைத்துக்கொளத்தேவையில்லை. விதன்டாவாதமாக வரலாறு தெரியாமல் பேசுவர்கலுடன் விவாதிப்பது எமது மடமை.

Tamil & Muslims brothers pls stop talking nonsense no need the past forget it all i have more Tamil friends,we all suffer the lot both side have mistakes howlong we speak this? we think about the future of our country north & east, with out unity we cannot do anything get to gather be happy

நாம் இதைத்தான் 2009 ல் சொன்னோம்.நீங்க ரொம்ப லேட்டு.
We already told it in 2009.now its too late

அடி உரக்கும் போது தான் நல்லுள்ளம் கொண்ட தமிழர்களை தெரியவரும்..கட்ட்பிடித்துகொண்டு கிரி பத் சாப்பிடும்போது எங்கே போனது இந்த ஞானம் ...இப்படியே காத்தான்குடியையும் யாழ்ப்பாண வெளியேற்றத்தையும் பிடித்து தொங்கிகொண்டிருங்கள்
அதுதான் நல்லது ...அவன் ஒவ்வொன்றாக எரித்து முடித்தபின் எது இழப்பு அதிகமானது என்று பட்டிமன்றம் வைக்க வசதியாக இருக்கும்..அட அட இப்பதானா நானா தெரியுது ஒரே மொழி பேசுபவர்கள் என்று

Post a Comment