Header Ads



"முஸ்­லிம்­ அடிப்­ப­டை­வா­திகள் என்ற, எனது கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது"

-SNM.Suhail-

அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் ஏற்­பாட்டில் மஹர சிறைச்­சா­லையில் இடம்­பெற்ற நோன்புப் பெருநாள் நிகழ்­வின்­போது தான் பேசிய கருத்­துக்கள் திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அர­சியல் சுய­லா­பத்­துக்­காக தவ­றான கருத்­துக்­களை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் பரப்­பு­வ­தா­கவும்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் செய­லா­ளரும் அரச தொழில் முயற்­சிகள் அபி­வி­ருத்தி அமைச்­ச­ரு­மான கபீர் ஹாசிம் தெரி­வித்தார்.

கருத்­த­ரங்­கொன்றின் நிமித்தம் சீனா­வுக்கு சென்­றுள்ள அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றின்­போது கூறிய கருத்தை மறுத்து விடி­வெள்­ளிக்கு தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்

மஹர சிறைச்­சா­லையில் உள்ள முஸ்லிம் கைதி­க­ளு­ட­னான நோன்புப்  பெரு­நாள்­தின பகற்­போ­சன நிகழ்ச்­சி­யொன்றை அகில இலங்கை முஸ்லிம் லீக் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. முஸ்லிம் லீக்கின் தலைவர் என்ற ரீதியில் அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கபீர்,
இன்று இஸ்­லாத்தின் பெயரால் உலக நாடு­களில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் பயங்­க­ர­வாதக் குழு­வி­னரின் நட­வ­டிக்­கை­களால் உலகம் முழு­வ­தி­லு­முள்ள முஸ்­லிம்கள் மீதே எதிர்ப்புக் கணைகள் வீசப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த சவாலை சமா­ளிக்க வேண்­டிய நிலை­யிலே நாம் இருந்து கொண்­டி­ருக்­கிறோம்.

இதன் பின்­ன­ணி­யி­லேயே இலங்­கையில் பல பகு­தி­க­ளிலும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் திட்­ட­மிட்டு இடம் பெறு­கின்­றன. இதனால் எமது மக்கள் பெரும் அச்­சத்­து­ட­னேயே வாழ்­கின்­றனர். இந்­நி­லையில் இருந்து நாம் விடு­பட அர­சியல் ரீதி­யி­லா­ன­தொரு தீர்வு அவ­சி­யப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, சிறைச்­சா­லையில் உள்­ள­வர்கள் இன்று தண்­டனை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கி­றீர்கள். சிறைக்­கூடம் உங்­க­ளுக்கு நிரந்­தர உரி­மை­யி­ட­மல்ல, அதா­வது வறு­மை­யோடு பிறந்­த­வர்கள் என்றும் வறு­மை­யு­டனே உழன்று கொண்­டி­ருக்க வேண்­டு­மென்­ப­தல்ல, அவர்கள் வாழ்வில் முன்­னேறி நல்ல நிலையை அடை­யலாம். அதே­போன்று இன்று சிறை­வாசம் அனு­ப­விப்­ப­வர்கள் புனர்­வாழ்வு பெற்று நாளை நாட்டின் நற்­பி­ர­ஜை­க­ளா­கலாம். அவ்­வாறு ஆக­வேண்டும் என்­பதே எமது ஆசைக்­கூட.

சிறை­யி­லி­ருந்து விடு­தலை பெற்று நாம் அனை­வரும் நாட்டின் நல­னுக்­காக உழைக்க முன்­வ­ர­வேண்டும். எமது முன்­னோ­டி­க­ளான ரீ.பி.ஜாயா போன்­ற­வர்கள் சிங்­கள மகா சங்கம் மற்றும் தமிழ் காங்­கிரஸ் அமைப்­பு­க­ளுடன் கைகோர்த்து எத்­த­கைய நிபந்­த­னை­க­ளுக்கும் அடி­மைப்­ப­டாது நாட்­டுக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­ததை இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்­பு­கின்றேன்.

நீண்­ட­கா­ல­மாக சிறைத் தண்­டனை அனு­ப­வித்துக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பின் பேரில் நிரந்­த­ர­மாக விடு­தலைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வாய்ப்­பொன்றை வழங்­கக்­கூ­டிய விதத்தில் அர­சுக்கு அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்று வெகு­வி­ரைவில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது என்ற தக­வலைத் அமைச்சர் இதன்­போது வெளி­யிட்டார். 

அமைச்சர் கபீர் ஹாசிமின் கருத்து கண்­ட­னத்­துக்­குரி­யது என குறிப்­பிட்­டு நேற்­று­முன்­தினம் கூட்டு எதிர்க்­கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து தெரி­வித்த முன்னாள் முஸ்லிம் விவ­கார அமைச்­சரும் முஸ்லிம் முற்­போக்கு முன்­ன­ணியின் செய­ல­தி­ப­ரு­மான  ஏ.எச்.எம். அஸ்­வர். 

முஸ்­லிம்­க­ளுக்குள் அடிப்­ப­டை­வா­திகள் இருப்­ப­தாகக் கூறு­வது பொது­ப­ல­சேனா போன்ற இன­வி­ரோத சக்­தி­களின் வாய்­களில் அவல் போட்­டது போன்று இருக்கும்.

ஆயிரம் பொய் சொல்லி அர­சாங்­கத்தைக் கைப்­பற்­றிய இந்த நல்­ல­ரசு என்று சொல்­லப்­ப­டு­கின்ற பொல்­ல­ர­சுக்கு முஸ்­லிம்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. முஸ்லிம் அமைச்­சர்­களும் கையா­லா­த­வர்­க­ளாக இப்­போது ஆகி­விட்­டனர். ஆகவே அதற்குப் பரி­காரம் தேடாமல், முஸ்­லிம்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைத் தீர்க்­காமல் இவர்கள் முஸ்­லிம்­க­ளுக்குள் அடிப்­படைத் தீவி­ர­வா­திகள் இருப்­ப­தாக கூறு­வது மிகவும் அபத்­த­மான கூற்­றாகும். 

முஸ்­லிம்கள் பின்­பற்­று­வது அடிப்­ப­டை­யான இஸ்­லா­மிய கொள்­கை­ளைத்தான். எனினும், தனிப்­பட்ட நபர்கள் செய்­கின்ற குற்­றங்­க­ளுக்கு  எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கலாம், தண்­டனை விதிக்­கலாம். அதை விடுத்து முஸ்­லிம்­க­ளுக்குள் தீவி­ர­வா­திகள் இருப்­ப­தாகச் சொல்­லு­வது, இது­போன்று கூறி வரு­கின்ற பொது­பல சேனா போன்ற இன­வி­ரோத சக்­தி­க­ளுக்கு வாய்­களில் அவல் போட்ட விஷ­ய­மா­கத்தான் நாம் இதனைப் பார்க்க முடி­கின்­றது.

எனவே, இதனை அவர் வாபஸ் பெற வேண்டும். இப்­ப­டி­யாக செய்­வதன் மூலம் முஸ்லிம் சமு­தா­யத்­தையே இழிவு படுத்­து­வ­தாக அமையும் என நாங்கள் கரு­து­கிறோம் என்றும் தெரி­வித்தார்.

முன்னாள் அமைச்சர் அஸ்வர் இவ்­வாறு குற்­றச்­சாட்­டுகள் முன்­வைத்­ததை மறுத்து அமைச்சர் கபீர் ஹாசிம் சீனா­வி­லி­ருந்து விடிவெள்ளிக்கு கருத்து தெரி­விக்­கையில்,
மஹிந்த அணியின் பக்கம் முஸ்­லிம்­களை ஈர்ப்­ப­தற்கு எம்­மீது வீண் பழி­களை முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் அஸ்வர் தெரி­வித்து வரு­கிறார். அக்­க­ருத்து கண்­ட­னத்­துக்­கு­ரிய­தாகும்.

தமது சுய நலத்­துக்­காக அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் பாரதூரமானதாகும். குறிப்பாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்திருக்கின்ற சூழலில் அதனை மேலும் அதிகரிக்கச் செய்யும் செயற்பாட்டை முன்னாள் அமைச்சர் அஸ்வர் மேற்கொள்கிறார்.

அத்துடன் அவர் முஸ்லிம்களை தூண்டிவிடும் நோக்கிலேயே இவ்வாறான கருத்துக்களை பரப்புகிறார். இதுபோன்ற சுயநல நோக்கான கருத்துக்கள் சமூகத்தை ஆபத்தான கட்டத்திற்கே இழுத்துச் செல்லும். மூத்த அரசியல்வாதியான அஸ்வர் மிகவும் பொறுப்பனர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.