Header Ads



பதக்கங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை

விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்கங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என சுசந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

2000ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு பதக்கத்தை வென்று கொடுத்த சுசந்திக்கா,வறுமை காரணமாக தான் பதக்கத்தை விற்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இருப்பினும், பதக்கத்தை விற்பதற்கு சுசந்திக்காவுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்ற பதக்கங்களை விற்க முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டு வரவுள்ளதாகவும் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், விளையாட்டு வீரர்கள் பதக்கத்தை விற்பதை தடை செய்ய அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை என என சுசந்திக்கா ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பதக்கத்தை விற்பனை செய்வதாக அறிவித்ததும் ஜப்பான், இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து பலர் தொடர்பு கொண்டதாகவும் அவர்களில் ஒருவர் 25 கோடி ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளதாகவும் சுசந்திக்கா குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதிக விலைக்கு விற்க முடியாது என தான் நம்புவதாகவும் விளையாட்டு அமைச்சின் சில அதிகாரிகள் அமைச்சரை தவறாக வழிநடத்தி செல்வதே அமைச்சரின் இக் கருத்துக்கு காரணம் எனவும் சுசந்திக்கா குற்றம்சாட்டியுள்ளார்.

1 comment:

  1. சுசந்திக்காவின் வாய் சரியில்லை. எப்பொழுதுமே முரண்பட்டுக் கொள்வதும், பிரச்சனைகளை உருவாக்குவதும் அவரது வாடிக்கை.

    ஊடகங்கள் இவரை கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.