Header Ads



முஸ்லிம் பெண்களை முத்தலாக், வெகுவாக பாதிக்கின்றது - யோகி ஆதித்யநாத்

முத்தலாக் விஷயம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த சூழலில், 'முத்தலாக் விஷயத்தைப் பற்றி தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஏன் பேசாமல் அமைதியாகவே இருக்கின்றனர்.'  என்று கேள்வி எழுப்பியுள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆதித்யநாத், 'நிதிஷ் குமார், முஸ்லிம் பெண்களை வெகுவாக பாதிக்கின்றது என்று அறிந்தும் இதுவரை முத்தலாக் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. மதச்சார்பற்றவர்கள் ஏன் இந்த விஷயத்தில் அமைதி காக்கின்றனர்? மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பொதுத் தளத்தில் ஒன்றைக் கூறிவிட்டு, நிஜ வாழ்க்கையில் வேறொன்றைச் செய்கின்றனர்.' என்று விமர்சனம் செய்தார்.

ராமர் கோயில் விவகாரத்தைப் பற்றி ஆதித்யநாத், 'அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது பொது மக்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி நடக்கும்' என்று சூசகமாக பதில் கூறினார். 

4 comments:

  1. இரால் தன் தலையில் அழுக்கை வைத்து கொண்டு நாறுது நாறுதென சொல்லுமாம்.

    ReplyDelete
  2. பொதுமக்கள் விருப்பம்படி இல்லாத இராமனுக்கு முஸ்லிம்களின் இடத்தில கட்டிடம் கட்டினால் ஹிந்து தீவிரவாதிகளை முஸ்லிம்கள் பூண்டோடு அழிப்பர்

    ReplyDelete
  3. ஹீஹீ ... ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது!

    ReplyDelete
  4. ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை.

    ReplyDelete

Powered by Blogger.