Header Ads



ஞானசாரரின் சரணடைவும், கைதும் போலியானவை - பின்னணியில் பல சதிகள்

நாட்டில் அண்மைக்காலமாக சர்ச்சைக்குரிய நபராக வலம் வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நேற்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சரணடைவும், கைதும் போலியாக சித்தரிக்கப்பட்டவை எனவும் இவற்றிக்கு பின்னணியில் பல சதிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஞானசார தேரருக்கு இரண்டு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் நேற்று நீதிமன்றில் சரணடைந்த அவர் சென்ற வேகத்திலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதுவரை, அவருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது. கைது செய்து அவரை கொலை செய்து விடவும் திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதனாலேயே அவர் தலைமறைவாகி விட்டார் என பொதுபல சேனா தெரிவித்து வந்தது.

அவர் நீதியைக்கண்டு ஒளியவில்லை தனது பாதுகாப்பிற்காகவே மறைந்துள்ளார் எனவும் தேரர் தரப்பு தெரிவித்தது.

மேலும், முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் தம்பி மூலமாக தேரர் கொலை செய்யப்பட உள்ளதாகவும் பொலிசார் கைது செய்ய வந்ததும் அதற்காகவே எனவும் பொதுபலசேனா குற்றச்சாட்டினை முன்வைத்தது.

எனினும் நேற்று அந்த குற்றச்சாட்டுகளோ, உயிர் அச்சுறுத்தல் விடயமோ பேசப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

அதேபோல ஞானசாரரைக் கைது செய்ய 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவரை கூடிய விரைவில் கைது செய்யபோவதாகவும், அதற்கு பொதுமக்களின் உதவியையும் கூட பொலிசார் கோரியிருந்தனர்.

அரசு தரப்பும் இது விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை. அசமந்த போக்கினையே கடைபிடித்து வந்தது. உதாரணமாக ஒளிந்துள்ளவரை கைது செய்வது கடினம் என அண்மையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளிப்படையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஞானசாரரைக் கைது செய்ய முடியாமல் போனதில் தனது இயலாமையை தெரிவித்துக் கொள்வதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இந்த இடத்தில் பொலிசாரினதும், அரசினதும் இழுத்தடிப்புகள் தெளிவு படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும், ஞானசாரருக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசு தரப்பும், தமது செயற்பாடுகளுக்கும் எவருக்கும் எதுவித தொடர்பும் இல்லை என ஞானசாரரும், பொதுபல சேனாவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஞானசாரர் நேற்று சரணடைந்து, அதே வேகத்தில் பிணையில் வந்தும் விட்டார்.

குறிப்பாக தேரர் நேற்று சரணடைந்தது தனக்கு எதிரான இரு வழக்குகளில் ஆஜராகாத காரணத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளில் இருந்து தப்பிக்கொள்ளும் முகமாகவே.

ஆனால் அவரை கைது செய்ய 5 விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டது, ஞானசாரர் வழக்குகளில் ஆஜராகாத குற்றச்சாட்டுகளுக்காக அல்ல.

அவர் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகம் விளைவித்தார், முஸ்லிம் மதத்தினையும் அல்லாவையும் அவதூறாக பேசியக் குற்றச்சாட்டுக்காகவே.

இந்தக் குற்றச்சாட்டுகளே ஞானசாரதேரர் மீது சுமத்தப்பட்டுள்ளன. தேரர் அல்லாவை அவதூறாக பேசவில்லை அது சுத்தமான சிங்களச் சொல் எனவே அது போலியான குற்றச்சாட்டு எனவும் பொதுபலசேனா ஊடகங்களுக்கு தெரிவித்தது.

என்றாலும் நேற்றைய தினம் அந்த குற்றச்சாட்டுகள் நிமித்தம் ஞானசாரர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன எனவும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தது, வழக்குகளில் ஆஜராகாத காரணத்தினால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை தவிர்த்துக் கொள்வதற்காகவே என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் படி ஞானசார தேரர் விவகாரத்தில் ஆரம்பத்தில் அவருக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்று கூறியதும், பொலிஸார் அவரை சிறையில் வைத்து கொலை செய்ய உள்ளதாக கூறியதும் போலியானவை என்று கூறப்படுகின்றது.

அதேபோல் 5 விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடப்பட்டு வருவதாக சித்தரிக்கப்பட்ட ஞானசாரர் நேற்று சர்வ சாதாரணமாக நீதிமன்றத்திற்கு வந்து சென்றதன் மூலம்.,

அவரை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.

காரணம் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், பொலிஸாரின் தேடுதல் வேட்டையும் உண்மையாக இருந்தால் நேற்று அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

எனவே இந்த தேரர் விடயத்தில் பின்னணியில் முக்கிய நபர்கள் இருக்கின்றனர் என்பதே வெளிப்படை. இதேவேளை கொழும்பு ஊடகம் ஒன்றும் அமைச்சர் ஒருவர் இதன் பின்னணியில் இருக்கின்றார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

ஆக மொத்தத்தில் ஞானசாரர் இனவாதம் பரப்பியது, தலைறைவாக இருந்தமை, உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக கூறியமை, 5 பொலிஸ் குழுக்கள் அவரைத் தேடுவதாக கூறியமை.,

உட்பட அனைத்துமே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகங்கள் என்பதும் இன்றைய நிலையில் அம்பலப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

1 comment:

  1. Dear jaffnamuslim idu ponra small lettersla publish pannum our articllum nam parpwdillei. Pls normel fontil publish pannawum.

    ReplyDelete

Powered by Blogger.