Header Ads



இலங்கையில் பாலியல் தொந்தரவு, வீதிவிபத்து, வெள்ளம், கடனட்டை மோசடி குறித்து கவனமாக இருங்கள் - பிரிட்டன்

இலங்கைக்குள் பயங்கரவாத அச்சுறுத்தலை புறம் தள்ள முடியாது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கும் ஆலோசனை அறிக்கையில் உயர்ஸ்தானிகராலயம் இதனை கூறியுள்ளது. இந்த ஆலோசனை அறிக்கை நேற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், பாதுகாப்பு தேசிய சட்டம், நாட்டுக்குள் பிரவேசிக்கும் சட்டம், சுகாதாரம், இயற்கை அனர்த்தம், நிதி மற்றும் சுற்றுலா ஆலோசனையின் கீழ் இந்த புதுப்பிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் முடிவுக்கு வந்த போதிலும் சில பிரதேசங்களில் இன்னும் அதிகளவான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான இடங்களுக்கும், அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் அமைந்துள்ள பகுதிகளும் செல்ல வேண்டாம் என உயர்ஸ்தானிகராலயம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இங்கிலாந்து பிரஜைகள் இலங்கைக்குள் எந்த பிரச்சினையும் இன்றி பயணிக்க முடியும்.

எனினும் பாலியல் தொந்தரவுகள், வீதி விபத்துக்கள், வெள்ளம் மற்றும் கடன் அட்டை மோசடிகள் குறித்து கவனமாக இருக்குமாறும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

மேலும், இலங்கையில் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதுடன் பருவமழை பெய்யக் கூடும் எனவும் அது தொடர்பாக அவதானிப்புடன் இருக்குமாறும் உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.

இதனை தவிர பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுகிறது எனவும் இது தொடர்பான அவதானத்துடன் இருக்குமாறும் தூதரகம் கேட்டுள்ளது.

No comments

Powered by Blogger.