June 21, 2017

இப்தாருக்கு வாருங்கள், ஜானசாரர் கைதாவார் (முஸ்லீம் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டது)


-ஏ.எச்.எம். பூமுதீன்-

பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் ஜானசார தேரருக்கும் அரசுக்கும் இடையில் இன்று காலை பூனை--எலி விளையாட்டொன்று இடம்பெற்றது.

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்து , நாளை 22 ஆம் திகதி சரணடைவார் என்று கூறப்பட்ட ஜானசாரர் இன்று 21 ஆம் திகதி திடீர் என சரணடைந்தார். பின்னர் 10 நிமிடங்களில் விடுதலையான அவர்- அடுத்த 15 நிமிடங்களில் புலனாய்வுப் பிரிவினரால் கைதாகி மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நகைச்சுவை சம்பவத்தை நாம் அனைவரும் அறிவோம்.

இதன் பின்னணியில் பாரிய கபட நாடகம் ஒன்று நிபந்தனை என்ற போர்வையில் அரசுக்கும் -- எமது மதிப்புக்குரிய முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தற்போது அறிய வருகின்றது.

இரெண்டு முக்கிய நோக்கம் அல்லது எதிர்பார்ப்பின் அடிப்படையில் அந்த நிபந்தனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அரசுடன்தான் - முஸ்லிம்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் அரசின் அவசியம் ஒன்று. அடுத்து, தமக்கு வாக்களித்த முஸ்லீம் சமூகத்திடம் இருந்து தம்மை பாதுகாக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கபடம்.

இந்தரீதியில் , அரசுக்கும்- முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை புறக்கணிப்போம் என்ற எழுச்சி வேண்டுகோள் முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் பெரும் தாக்கத்தை செலுத்தி இருந்துள்ளது.

மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் என்றுமில்லாதளவு முஸ்லிம்கள் பங்கு கொண்டிருந்த நிலையில் , ஜனாதிபதியின் இப்தாரை முஸ்லிம்கள் புறக்கணித்தால் அது அரசுக்கு அபகீர்த்தியை நிச்சயம் ஏட்படுத்தும்.

எனவே, ஜனாதிபதியின் இஃப்தாருக்கு முஸ்லிம்கள் வரவேண்டுமென்றால் - அதட்குள்ள ஒரே வழி ஜனாசாரரை கைது செய்வதே என்பதை உணர்ந்ததன் பேரில் அரசும்- எமது முஸ்லீம் அரசியல்வாதிகளும் இணைந்து எடுத்த முடிவுதான் இன்று காலை நாம் வியப்புடன் பார்த்த ஜானசாராவின் சரண்-பிணை- கைது- பிணை எனும் பூனை- எலி நாடகம்.

ஆக, 5 நிமிட இஃப்தாருக்கு ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது என்கின்றனர் இத் தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்ட நேர்மை, நியாயம், உண்மைக்கு பெயர்போன சிரேஷ்ட  அரசியல், ஊடக கனவான்கள்.

ஜனாதிபதியின் இன்றைய இஃப்தாருக்கு முஸ்லிம்களை வரவையுங்கள் , நாளை ஜானசாரர் நீதிமன்று சமூகமளிப்பார். இன்றேல், அவர் இருப்பது போன்று இருக்கட்டும் உங்கள் சமூகத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்ற தோரணையில் பேச்சு இடம்பெற்றுள்ளது. இதட்கு எமது அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இருந்த போதிலும் முஸ்லிம்களை எவ்வாறு இதட்கு இணங்க வைப்பது என்ற தலை சொறிச்சலுக்குள்ளான எமது அரசியல்வாதிகளுக்கு ஒருவிடயம் கணீரென பட்டுள்ளது.

அந்தரீதியில்-ஜனாதிபதியின் இஃப்தாருக்கு சென்றவர்களில் 90 வீதமானோர் எமது அரசியல் வாதிகளின் காரியாலயங்களில் பணிபுரிவோரே ஆகும்.வெளி முஸ்லீம் சகோதரர்கள் என்று கூறுமளவுக்கு அங்கு யாரையும் காணவேயில்லையாம் ..

எப்பிடியோ, முஸ்லிம்கள்- ஜனாதிபதியின் இஃப்தாருக்கு போனால் சரிதானே என்ற அடிப்படையில் காரியாலய ஊழியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஆக- இங்கு அரசு, தன்னை காப்பாத்திக்கொண்டுள்ள அதேநேரம்- முஸ்லீம் அரசியல் வாதிகளும் முஸ்லிம்களும் பகடைக்காயாக பாவிக்கப்பட்டுள்ளனர் என்பதையே இன்றைய ஜானசாராவின் சரணும் பிணையும்- கைதும் பிணையும் எமக்கு துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது.

இங்கு நாம் ஒன்றை விளங்கிக்கொள்தல் வேண்டும். அரசாங்கத்தின் மேல் முஸ்லிம்கள் ஆத்திரம் அடைவது மகா முட்டாள்தனம் என்பதாகும்.

6 கருத்துரைகள்:

We told to boycott because of this, but some our pandid said no need to boycott thier M3 will do the best for them.

THE DECEPTIVE MUSLIM POLITICIANS ALWAYS ACT LIKE THIS FOR THEIR PERSONAL INTERESTS. Mr. HILMY AHAMED, Mr. AZAD SALLY, Mr. N.M.AMEEN, MR. RIZVI MOULAVI and Mr. TARIQ MAHUMUD, DID THE SAME. WHERE ARE YOU ALL NOW?
SEE WHAT THE "HANSAYA" AND THE "YAHAPALANA GOVERNMENT" WHOM YOU BROUGHT TO POWER IN 2015 HOODWINKING THE MUSLIM VOTERS, WHO PROMISED TO CAGE THE SINHALA LION DOING?
Muslim politicians, Muslim Civil Society groups, MCSL, Shroora Council, ACJU, Muslim Media Forum who supported the "Hansaya" and the "Yahapalana group" for your personal gains and benefits and not the community should take full responsibility of this situation. You all are now answerable (Insha Allah) to God AllMighty Allah and the Muslim voters/community at large for putting us in this plight. YOU WERE PART OF THEM. You cannot run away from this anymore. Islamic religious scholars say: "Betrayal is the worst form of hypocrisy", "Betrayal is the worst sin," and "Betrayal is an indication on the lack of piety and religiousness".

THE MUSLIM PAMARAMAKKAL WILL STONE YOU ALL AT THE NEXT ELECTIONS, Insha Allah.
Noor Nizam - Convener "The Muslim Voice".

தேரர் முஸ்லிம்கள் விடயத்தில் தான் தேடப்டாரா?

I would like to invite our muslim MPs to participate bana reading programme will be held in Akkaraipattu for the next poya day. It'll create good relations between the religion in future.

இந்த 21 பேரும் அரசுடன் இருந்தால் அதன் அர்த்தம் கலிமா சொன்ன முஸ்லிம்கள் அனைவரும் இந்த இனவாத அரசுடன் உள்ளார்கள் என்று அர்த்தமில்லை... இந்த நாட்டின் நீதித்துறை அரசியல் வாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது நாம் எதையுமே எதிர்பார்க்க முடியாது...

நம் முஸ்லிம் அரசியல் வாதிகள் என்ன மார்க்க அறிஞர்களா நீங்கள் நினைப்பது போன்று நீதமாக நடக்க...??? அப்படி ஒரு மார்க்க அறிஞரை பாராளு மன்றதமன்றத்துக்கு அணுப்பினாலும் கடைசியில் அவரும் இவர்கள் போன்றே ஆகிவிடுவார், ஏனெனில் நம் நாட்டில் உள்ள அரசியல் நிலவரம் அப்படி இருக்கின்றது. அது அவர்களைச்சொல்லி குற்றமில்லை...
ஒரு நல்ல,படித்த,குணமுள்ள, சமூகத்தில் நல்ல பேரும் உள்ள மனிதரை நீங்கள் தேர்வுசெய்து அவர் எழியவராயின் பணம் சேகரித்து உதவுங்கள், நிச்சயமாக நன்றி உள்ளவராக இருப்பார்... இவ்வாறு நீங்கள் இடும் அந்த பண வித்துக்கள் நாளை ஒரு சமுதாயத்தை கட்டியெலுப்ப பேருதவியாக இருக்கும். எதற்கெல்லாமோ செலவழித்து விட்டோம், இப்படியாயினும் முயற்சித்து பார்போமே....!!!

பா.உ. பாலித்த தேவப்பெரும போன்றவர்களை ஓர் நல்ல உதாரணப்புஷராக எடுக்கலாம்....(ரிஷாத் பதியுர்தீன்...😓😓😓)...

Post a Comment