Header Ads



ரோஜா பூக்களை கொடுத்து, பயங்கரவாதத்தை கண்டித்த லண்டன் முஸ்லிம்கள்


பிரித்தானிய தலைநகர் லண்டனின் மையப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22-பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

லண்டனில் நடந்த தாக்குதலுக்கு ஏராளமானோர் அங்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் அடங்கிய குழு ஒன்று லண்டன் பிரிட்ஜ் கீழே விழாமல் பாதுகாப்போம் என்று உறுதியேற்று ரோஜா பூக்களை கொடுத்து மரியாதையை செலுத்தியாக கூறியுள்ளனர்.

அங்கு வந்து செல்லும் மக்கள் மற்றும் பாதசாரிகளிடம் சுமார் 3000 ரோஜா பூக்களை வழங்கி தங்களது ஆதரவையும், மரியாதையையும் செலுத்தினர். பூக்களை வாங்கிக்கொண்ட லண்டன் மக்கள் உணர்ச்சிவயப்பட்டனர்.

மேலும் இது குறித்து அங்கிருக்கும் மக்கள் கூறுகையில், இந்த நிகழ்வின் மூலம் லண்டன் நகரம் ஒற்றுமையுடன் இருப்பது புரிவதாக கூறியுள்ளனர்.

இதற்கு பொதுமக்கள் அனைவரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்கள் சேர்ந்து இவ்வாறு அஞ்சலி செலுத்தியது மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காட்டுவதாகவும் பிரித்தானியா மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே போல் இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இஸ்லாமியர்களின் இந்த செயல்பாடு எல்லோரும் பயங்கரவாதிகள் இல்லை என்பதை காட்டுவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.

2 comments:

  1. Great work! Thank you UK Muslims!

    ReplyDelete
  2. துலுக்கங்கிடட கவனமுடன் தான் இருக்கணும்

    ReplyDelete

Powered by Blogger.