Header Ads



ஞானசாரர் தொடர்பாக, அரசாங்கத்திலும் முரண்பாடு - முஜிபுர் ரஹ்மான்

-தமிழில்:எம்.ஐ.அப்துல் நஸார் + விடிவெள்ளி-

பௌத்த அமைப்­பான பொது­பல சேனா வெளி­நாட்டு சக்­தி­களால் வழி­ந­டாத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது என ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்­துள்ளார்.

இந்தத் தீவி­ர­வாத அமைப்பு வெறுப்­பு­ணர்வு, குற்றச் செயல்கள் மற்றும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வ­தற்கு நிதி­யு­த­வி­ய­ளிப்­பதும் தூண்­டு­கோ­லாக இருப்­பதும் யாரென கண்­ட­றி­வ­தற்கு இலங்­கையின் புல­னாய்­வுத்­துறை விசா­ரணை செய்ய வேண்டும் எனவும் சிலோன் டுடேக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்­துள்ளார். சிங்­கள சமூ­கத்தின் ஒரு வீதத்­திற்கும் குறை­வா­ன­வர்­க­ளையே இவ்­வி­யக்கம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

கே: தீவி­ர­வாதம் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளது. இது தொடர்பில் நீங்கள் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருக்­கி­றீர்கள். இப்­போது நாம் அதனை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்கும் இப்­பி­ரச்­சினை புதி­தா­ன­தொன்­றல்ல. தற்­போ­தைய சூழ்­நிலை தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

 கடந்த சில வரு­டங்­க­ளாக உச்ச அள­வி­லான தீவி­ர­வாத செயற்­பா­டு­களைப் பார்க்­கிறோம். எனவே, இதனைச் சகித்­துக்­கொள்ள முடி­யாது எனவும் இது உட­ன­டி­யாக நிறுத்­தப்­பட வேண்டும் எனவும் அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. அதன் கார­ண­மாக தீவிர செயற்­பா­டுகள் ஓர­ளவு குறை­வ­டைந்­துள்­ளன. எனினும் சில பகு­தி­களில் பயங்­கர மற்றும் வன்­மு­றை­யான தனித்­தனி சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ள­தாக எமக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.   

அதேபோல் அதன் பின்­ன­ணியில் மெஸாட் இருக்­கி­றதா என்­பது பற்­றியும் விசா­ரிக்க வேண்டும். எமக்கு இந்த விட­யத்தில் சந்­தேகம் இருக்­கி­றது. திடீ­ரென ஆரம்­பித்த தீவி­ர­வாதம் திடீ­ரென தணிந்­தது. அது மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளது. இது சந்­தே­கத்­திற்­கி­ட­மான செயற்­பா­டாகும். எனவே, இக் குழு வேறொரு நிகழ்ச்சி நிர­லுக்கு அமை­வாகச் செயற்­ப­டு­கின்­றது என்­பது அந்த நிகழ்வின் மூலம் தெளி­வாகத் தெரி­ய­வ­ரு­கின்­றது. 

கே: சிரேஷ்ட அமைச்சர் ஒரு­வரால் வழங்­கப்­பட்­டுள்ள பாது­காப்­பான இடத்தில் ஞான­சார தேரர் மறைந்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றதே அது உண்­மையா? 

 இது தொடர்பில் நானும் கேள்­விப்­பட்டேன். எனினும், ஞான­சார தேரர் மறைந்­தி­ருப்­ப­தற்கு வச­தி­யினை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கு இந்த அர­சாங்­கத்­தி­லுள்ள எந்த அமைச்­ச­ருக்கும் காரணம் இருப்­ப­தாக நான் நினைக்­க­வில்லை. அவ்­வாறு யாரேனும் உத­வி­ய­தாகக் கண்­ட­றி­யப்­பட்டால் அவர் தனது அந்­தஸ்தை இழப்பார். தேவை­யில்­லாமல் எந்த ஒரு அமைச்­சரும் தனது அந்­தஸ்தை இழக்க விரும்­பு­வாரா?  ஞான­சார தேர­ருடன் தொடர்­பினை பேணியவர்களது வாக்கு வங்கி அதி­க­ரிக்­க­வில்லை.  உண்மை என்­ன­வென்றால் ஞான­சார தேர­ருடன் எவ்­வ­ளவு நெருக்­க­மாக இருக்­கி­றார்­களோ அந்த அள­விற்கு அவர்கள் தமது வாக்­கு­களை இழப்­பார்கள். 

கே: எவ்­வா­றெ­னினும், இந்த விடயம் தொடர்பில் அர­சாங்­கத்­தினுள் சில முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்றன அப்­ப­டியா ? 
ஆம், ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் வெவ்வேறு கருத்­துக்கள் இருக்கும். எவ்­வா­றா­யினும், எவரும் பாஸிச மற்றும் தீவி­ர­வாத கருத்­துக்­களைக் கொண்­டி­ருக்­க­வில்லை. ஞான­சார தேரர் முஸ்­லிம்­களை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், வெளி­யேற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருக்­கின்றார். தற்­போ­தைய அர­சாங்­கத்தின் எந்த ஒரு அங்­கத்­த­வரும் அவ்­வா­றான கருத்­தினைக் கொண்­டி­ருக்­க­வில்லை. வெவ்வேறு நிலைப்­பா­டு­களைக் கொண்­ட­வர்கள் இருக்­கி­றார்கள். ஆனால் அவர்­களுள் எவரும் தீவி­ர­வாதம் மற்றும் பாஸி­சத்தை வெளிப்­ப­டுத்தும் அள­விற்குச் செல்­ல­வில்லை.

நான் ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்று, சட்­டத்­தி­லி­ருந்து ஞான­சார தேரரை காப்­பாற்­று­வதன் மூலம் எவரும் நன்­மை­ய­டைந்­து­விட முடி­யாது. அவர்கள் தற்­போது அனு­ப­வித்­து­வரும் நலன்­களை இழப்­பார்கள்.  ஞான­சார தேரரை அருகில் வைத்­துக்­கொண்­டி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ மற்றும் கோட்­டா­பய ஆகி­யோ­ருக்கும் இதுதான் நடந்­தது. அவர்­க­ளிடம் இருந்­ததை இழந்­தார்கள்.

No comments

Powered by Blogger.