Header Ads



ரணிலின் ஆசிர்வாதத்துடன், மங்களவின் இரகசிய படை களமிறங்கியது

இலங்கை அரச பிரிவுகளின் நிதி மையங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோசடி முறைகேடுகளை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவற்றை கண்டுபிடித்து அறிக்கை சமர்ப்பிக்க புதிய புலனாய்வு பிரிவுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விசேட பிரிவினால் பெறப்படும் தகவல்கள் நிதியமைச்சர் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் வகையில் சமகால நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான விசேட புலனாய்வு பிரிவுகள் பல வெளிநாடுகளில் இயங்கி வருகின்றன. குறிப்பாக சிங்கப்பூர் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் இடம்பெறும் நிதி மோசடிகளை குறைத்து கொள்வதற்காக இவ்வாறான புலனாய்வு பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது இலங்கையிலும் நிதி மோசடி விசாரணை பிரிவு இயங்கி வருகின்றது. அங்கு ஏதாவது ஒரு மோசடி தொடர்பில் முறைப்பாடு கிடைத்தால் மாத்திரமே விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் அரசாங்க நிதி நடவடிக்கை தொடர்பில் எந்த நேரமும் அவதானத்துடன் இருப்பதற்கு புலனாய்வு பிரிவு ஒன்று அவசியமாகியுள்ளது.

பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் லொரன்ஸ் மாபியா என்ற பெயரில் விசேட பொலிஸ் பிரிவு இயங்கியது. அத்துடன் அமைச்சில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் பலவீனங்கள் ஜனாதிபதிக்கு அறிக்கையிடப்பட்டது. எனினும் அது அரசியல் கோபங்களை தீர்த்து கொள்வதற்காக ஜனாதிபதி பயன்படுத்தி கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

எப்படியிருப்பினும் புதிய பிரிவில் நிதி குற்றம் தொடர்பில் விசேட அறிவுடைய பொலிஸ் அதிகாரிகள், வங்கி நடவடிக்கை மற்றும் நிதி சந்தை நடவடிக்கை தொடர்பில் விசேட அறிவுடைய பலரின் உதவி கிடைத்துள்ளது.
அத்துடன் இதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் விசேட ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.