June 20, 2017

திமிர் பிடித்த, முஸ்லிம் வர்த்தகர்கள், பாடம் கற்க மறுப்பது ஏன்..?

(கலாபூசணம் ஜே.எம்.ஹாபீஸ்)

கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை புத்தாண்டு பருவத்தின் போது கண்டி நகர ஜவுளிக்கடைகள் வெறிச்சோடி இருந்ததுடன் சில முஸ்லிம் வர்த்தகர்கள் தலையில் கையை வைத்துக் கொண்டிருந்த சம்பவங்கள் தொடர்பாக சமுக வளைத்தளங்கள்  கச்சிதமாக எழுதி இருந்தன. அதேநேரம் அதே காலப்பகுதியில் புதிதாக கண்டி நகரில் திறக்கப்பட்ட பெரும்பான்மை இனத்திற்குச் சொந்தமான பிரபல ஆடை விற்பனை நிறுவனம் ஒன்று ஒரு நாளைக்கு 4 கோடி முதல் ஐந்து கோடி ரூபாய் வரை விற்பனையை மேற்கொண்டதாகவும் இணையங்களில் காணமுடிந்தது. பெரஹரா ஊர்வலம் போல் மக்கள் கூட்டம் அங்கு சென்று கொள்வனவு செய்ததையும் சமூக ஊடகங்கள் அழகாக சித்தரித்தன. 

அன்று பாடம் கற்காத முஸ்லிம் வர்த்தகர்கள் இன்னமும் பாடம் கற்காத ஒரு நிலை காணப்படுகிறது. முஸ்லிம் வர்த்தகர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால் எதிர் வரும் றமலானில் இதே நிலையை அனுபவிக்க வேண்டி வரும்; என அன்றே சமூக வளைத் தளங்களில் குறிப்பிடப்பட்டு எச்சரிக்கப்பட்டும்; இருந்தன. 

 நோன்புப் பெருநாளைக் கொண்டாட றமழானில் இறுதிக்கட்டத்தில் முஸ்லிம் பெண்கள் கண்டி நகர வீதிகளில் திரிவதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக பேரினவாத வர்தகர் என்று முஸ்லிம்களால் சீல் குத்தப்பட்ட  முன்சொன்ன புதிய ஆடை நிறுவனத்தில் நிறைய முஸ்லிம்கள் ஆடைகளைக் கொள்வனவு செய்வதைக்காண முடிகிறது. வாகனங்களில் குடும்பம் சகிதம் வந்து கொள்வனவு செய்கிறார்கள். இது பற்றி யாரும் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். 

ஏனெனில் எங்கு இலாபத்திற்கு, தரமான பொருள், தமது ரசனைக்கு(பெஷன் அல்லது டிசைன்) கிடைக்கிறதோ அங்கு இயல்பாக மக்கள் செல்வது தவிர்க்க முடியாது. ஆனால் திமிர் பிடித்த ஒரு சில வர்த்தகர்கள் தமது நிலையை மாற்றிக் கொள்ளா விட்டால் இம்முறையும் கடந்த ஏப்ரல் சீசன் நிலைமை உருவாகலாம் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.

அதாவது காலகாலமாக ஆதிக்கம் செலுத்திய கடைகளை விட குறிப்பிட்ட ஆடை நிறுவனத்தின் விலை குறைவு என்தனால் அநேகர் அதனை நாடுவதாகத் தெரிகிறது. இது நுகர்வோன் தெரிவு மட்டுமல்ல இன நல்லுறவின் மற்றொரு வடிவமாகவும் இருக்கலாம். ஆனால் சற்று கீழ் இறங்கி வந்து முஸ்லிம் வர்த்தகர்கள் விலைகளை கட்டுப் படுத்தாவிட்டால் எதிர் காலத்தில் கண்டி முஸ்லிம் ஜவுளி வர்த்தகர்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.

இது பற்றி முன்னர் 'தங்க இழையால் தைக்கப்பட்ட ஆடைகள்' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் தரப்பட்டது வாசகர்கள் மறந்திருக்க முடியாது. இருப்பனும் அதனை சுருக்கமாக நினைவூட்டலாம். அதாவது தங்கத்தினால் ஆனா நூலைக்கொண்டு தைக்கப்ட்டது போல் தங்கத்தை விடவும் அதிக விலையில் ஆடைகளை விற்பது பற்றி விரிவாக எழுதி இருந்தோம். மிகுதமுள்ள சில நாட்களிலாவது நிலைமையை சீராக்கிக் கொள்னுங்கள். வரும் முன் காப்போனாக இருந்து வாடிக்கையாளர்களை கை நழுவ விட்டு விடவேண்டாம்.

10 கருத்துரைகள்:

அறவே தரமற்ற பொருட்களை ஒரிஜினல் என்று வாடிக்கையாளரின் நெஞ்சின் மீது அடித்து சத்தியம் செய்து விற்பது நம்மவர்கள்தான்.

புதியவர் (ஒருநாள் வாடிக்கையாளர்) என்பதற்காக ஒரு பொருளுக்கு அதிகவிலை கொடுத்துவிட்ட ஒருவருக்கு "முஸ்லிம் கடைக்கு போகாதே என்று சொல்லியிருக்கிறேன் தானே" என்று என் நண்பர் ஒருவர் சக நண்பர் ஒருவருக்கு திட்டியதை நான் கேட்டிருக்கிறேன்.

எமது வியாபாரிகள் பலர் உடனடி அதிக லாபம் பெறுவதையே குறியாகக் கொண்டுள்ளனர்.
நீண்டகாலம் நிலைத்து நிறக்கக் கூடிய வியாபார நுணுக்கங்களை கையாள்வதில் அறிவோ திறமையோ இல்லை.

Nangalthan periya inawathihal, Muslim kadaihaluku pohatheerhal endru rendu Notice kandathume engaluku kovam thalaiku erum, but muslimgal Matru mathathawarin kadaihaluku pohakoodathu ithu enna niyayam? Textile illati athuku Halal Sandrithal illay endalum solluwanuwol, i am walking with My head lower in shame my Race..

Mohamed Safan - இக்கட்டுரையில் மற்றவர்கள் கடைக்குப் போகக் கூடாது என்று எங்குமே சொல்லப்பட வி்ல்லை. அடிக்குறிப்பு எழுத முன் தமிழை வாசிக்கவும் தமிழில் அடிக்குறிப்பு எழுதவும் கற்றுக் கொள்வது நல்லது-.

No racism but still showing the signs of racism! Let Muslim businessmem learn a good lesson but don't tell Muslims to not to go to non-Muslims shops.

I have experienced this....
It is very very cheap in that shop than muslims shops. Also
Dont advice the people not to go. it is also a kind of racism what they have done earlier. But muslim shop owners can reduce the prices.

நாங்கள் முஸ்லிம்கள் !!??,,??,

Exactly Dr Abdul Wahab! What's more, the person that sifts through the comments and approves them here is the most miserable and doomed among all of us, Muslims, in JM community. He has elegantly wasted/wastes his Ramadan like the Muslims that waste their Ramadan in clothing stalls. I wonder if he really realizes that?!எங்கு மலிவாகவும் தரமாகவும் சாமான்கள் கிடைக்கிறதோ அங்கு மக்கள் செல்வார்கள்.
இது இயற்கை..!

முஸ்லிம்களின் கடைகளுக்கு மட்டும் செல்லுங்கள் என்று யாரும் சொல்லவில்லை, சொல்லவும் கூடாது.
அது வாடிக்கையாளர்களின் விருப்பம்..!

அத்துடன் ஒன்றைக்
குறிப்பிட வேண்டும், கசப்பாயினும்
உண்மையைக்
கூற வேண்டும்.

அதாவது
இப்போதெல்லாம் முஸ்லிம்
வர்த்தகர்களிடத்தில்
உண்மையும் நேர்மையும்
அருகிக் கொண்டு வருகிறது.
பொய்யும் ஏமாற்றும்
தாராளமாக அவர்களிடம்
காணப்படுகிறது,
இந்த நிலைமை நீடிக்கும்
பட்சத்தில் வியாபாரம்
நம் கையைவிட்டு விலகிவிடும்
என்பதே உண்மை..!

நம்மவர்கள் சித்தித்து
செயல்படாவிட்டால்
தொடர்ந்து நட்டத்தில்
இயங்கி ஈற்றில் எல்லாவற்றையும்
இழக்க வேண்டியதுதான்..!!

எந்த தொழிலாக இருந்தாலும்
அதில் உண்மையும் நேர்மையும்
இல்லையென்றால்
அது வெற்றி பெறாது..!!

The sad truth is the businesses going away from Muslim hands.
The main reason Muslims started to cheat the customers and try to gain hell of a lot profit.
Now people are having difficulties, they try to squeeze their spendings. Hence they go to a place where they could get a bargain.
But writing here is not make them understand. Because those business people rarely read a news people let alone a news site.

Post a Comment