Header Ads



ஞானசாரரை கைதுசெய்தால், இப்தாருக்கு வருகிறோம் என்று சொல்லுங்கள்.!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் முஸ்லீம்களுக்கெதிரான சம்பவங்கள் எல்லோரும் அறிந்ததே. முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களான உங்களுக்கே இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர முடியாத நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுளீர்கள். காரணம் நாட்டு ஜனாதிபதி, பிரதமர், போலீஸ் மாஅதிபர் யாரைப் பார்த்தாலும் சிங்களவர்கள். நம் ஊரிலுள்ள கிராம சேவகர் கூட சிங்களவரே.முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் எரிந்து கொண்டிருக்கும் போதே அதட்கான காரணத்தை போலீஸ் நிலையத்தில் இருந்து கொண்டே இது எலக்ட்ரிக் ஷாட் என்று போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தீர்ப்புக் கூறினாலும் நாங்கள் நம்பத் தான் வெண்டும். ஏனெனில் அவர்கூட ஒரு சிங்களவர்.

தொடர்ச்சியாக நடந்து வந்த சம்பவங்கள் திடீரென நிடுத்தப்பட்டு ஞான சாராரைத் தவிர சில  சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.இதனை முஸ்லிம்களாகிய நாங்களோ பாராளுமன்ற உறுப்பினர்களான நீங்களோ எப்படி  நம்ப முடிகிறது.

உங்களுக்காக ஜனாதிபதி மைத்த்ரீபால சிறிசேன அவர்கள் இருபதாம் திகதி ஏட்பாடு செய்துள்ள இஃப்தாருக்கு முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களான உங்களையும் முஸ்லீம்  வெளிநாட்டு தூதுவர்களையும்  வர வைப்பதட்காக இந்தக் கைதுகளும் விசாரணைகளும் திடீரென  நடப்பதாக சந்தேகம் வரத்தான் செய்கிறது. நீதியமைச்சரின் மெளனத்தைப் பார்க்கும் போது iஇருபத்தோராம் திகதி இவர்களை விடுதலை செய்து விட்டு மீண்டும் முஸ்லிம்களுக்கெதிரான நடவடிக்கைள் நடக்காமல் இருக்கும் என்பதட்கு என்ன உத்தரவாதம் உள்ளது.

நீங்கள் எல்லோரும் இப் பிரச்சனைகள் சம்பந்தமாக ஜனாதிபதி பிரதமர், மற்றும்  போலீஸ் மா அதிபருடன் எவ்வளவு பேசியும் இன்று வரை ஞான சாராவை கைது செய்யாமல் அரசாங்கத்தையும் நீதிமன்றத்தையும் அவர் கையில் வைத்திருப்பது போல் தான் தோன்றுகிறது.

உங்கள் எல்லோருக்கும் கிடைத்திருக்கும் கடைசிச் சந்தர்ப்பம் தான் ஜனாதிபதியின்  இந்த  இப்தார் நிகழ்வு. முஸ்லீம் பாராளுமன்ற   உறுப்பினர்களான நீங்கள் உங்கள பதவிகளை ஒரு பக்கம் வைத்து விட்டு ஞான சாரரை கைது செய்து முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்களின்  சொத்துக் களுக்கும் ஒரு உத்தரவாதம்  தந்தால் தான் நாங்கள் இந்த இஃப்தாறில்  கலந்து கொள்வோம் என்ற கோரிக்கையை வைக்குமாறு வெண்டிக் கொள்கிறேன். .

எம். ரிஸ்வான் காலித்.
சவூதி அரேபியாவிலிருந்து.

8 comments:

  1. சகோதரர் ரிஸ்வான் காலித் அவர்களின் குரல் இலங்கை முஸ்லிம்களின் குரல்.

    பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க முடியாவிட்டாலும் ஆகக் குறைந்தது இந்த ஒன்று கூடலையாவது பகிஷ்கரியுங்கள்.

    இலங்கை முஸ்லிம்களின் பொறுமைக்கும் உணர்வுகளுக்கும் உருவகம் கொடுங்கள். அவர்களது உண்மையான பிரதிநிதிகள் என்பதை உலகுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

    இது உங்களால் முடிந்ததே!

    ReplyDelete
  2. Who miss the Cutlet, Roles, Patush, Falooda......no no , never going to miss it.

    ReplyDelete
  3. I don't think it is a sensible idea. We have been pressing the government at the maximum. Now we should let the cat come out. How long can he go on hiding?

    ReplyDelete
  4. Hisbullah, Faizer Mustafa & Fouzi cannot avoid this Ifthar as the lifelines to these people are given by My3. We will wait and see others.

    ReplyDelete
  5. This will be the best move if our politicians boycott this ifthar, that will reflect in the world media.

    ReplyDelete
  6. நக்குண்டார் நாவிழந்தார்... அரசாங்கம் போடும் எலும்பு துண்டுக்காக நாக்கை வெளியே போட்டுக்கொண்டு திரியும் தலைமைகள் தான் நமது தலைமைகள்... இப்படிப்பட்டவர்கள் இவ்வாறான முடிவுகளை எடுத்து அவர்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள்...

    ReplyDelete
  7. Go go go and eat drink and come you don't loose any thing instead you will gain lot don't worry about any thing forget about community do whatever you want.

    ReplyDelete
  8. TIT FOR TAT is not Islam. Avoiding this will make things more worse.

    ReplyDelete

Powered by Blogger.