Header Ads



தீவிரவாத தாக்குதல்களில், அதிகளவு மரணிப்பது இஸ்லாமியர்களே

சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் தீவிரவாத தாக்குதல்களில் அதிகளவில் இஸ்லாமிய மதத்தினர் பலியாகி வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 99 சதவிகிதத்தினர் இஸ்லாமியர்கள் மட்டுமே.

Global Terrorism Index ஆய்வின்படி, கடந்த 20 ஆண்டுகளாக நடைப்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் அதிகளவில் பாதிக்கப்பட்டது இஸ்லாமிய நாடுகள் என தெரியவந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான், சிரியா, ஏமன், சோமாலியா, இந்தியா, எகிப்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நாடுகளில் நைஜீரியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை தவிர்த்து பிற 8 நாடுகளிலும் இஸ்லாமிய மக்களே அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

குறிப்பாக 2001 முதல் 2015-ம் ஆண்டு வரை நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல்களில் 75 சதவிகித உயிரிழப்பு நிகழ்ந்தது இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடுகளில் தான்.

அதாவது, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை விட 7 மடங்கு அதிகமான இஸ்லாமியர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

1 comment:

  1. உண்மைதான் , ஆனால் தீவிரவாதம் அடிப்படைவாதம் என்பவற்றை கைவிட முஸ்லிம்கள் தயாரில்லையே ?

    ReplyDelete

Powered by Blogger.