June 16, 2017

முஸ்லிம்க­ளிடம் மன்­னிப்பு கோரு­கிறேன் - சந்திரிக்கா உருக்கம்

-விடிவெள்ளி-

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மீளவும் தலை­தூக்­கி­யுள்ள இன­வாத செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­தவும் இது தொடர்­பான சட்ட நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வையும் சந்­தித்து அழுத்தம் கொடுப்பேன் என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியி­டு­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

நேற்று முன்­தினம் மாலை கொழும்­பி­லுள்ள தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற இச் சந்­திப்பில் சமகாலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மீண்டும் தலை­தூக்­கி­யுள்ள இன­வாத செயற்­பா­டுகள், இது தொடர்பில் சட்டம் நிலை­நாட்­டப்­ப­டாமை, குற்­ற­வா­ளி­களை கைது செய்­வ­தி­லுள்ள இழுத்­த­டிப்­புகள், பொலி­சாரின் அச­மந்தம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன. 

இச் சந்­திப்பில் கலந்து கொண்ட முஸ்லிம் சிவில் சமூக பிர­தி­நி­திகள் முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்­டுள்ள அச்­சு­றுத்­தல்கள் தொடர்­பிலும் மக்­களின் கவ­லைகள் தொடர்­பிலும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­விடம் எடுத்துக் கூறினர். இதன்­போத கடந்த ஏப்ரல் மாதம் முதல் இது­வரை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற இன­வாத செயல்கள் தொடர்­பான விரி­வான அறிக்­கையும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

இவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள சம்­ப­வங்கள் தொடர்பில் தான் ஒவ்­வொன்­றாக ஆராய்ந்து அவற்­றுடன் தொடர்­பு­டைய நபர்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுப்­பது குறித்து உரிய அதி­கா­ரி­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் பணிப்­புரை விடுக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக அவர் முஸ்லிம் சிவில் பிர­தி­நி­தி­க­ளிடம் உறு­தி­ய­ளித்தார்.

இச் சந்­திப்பில் சந்­தி­ரிகா குமா­ர­துங்க மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், சமீப கால­மாக மீண்டும் இன­வாத சக்­திகள் தலை­தூக்­கி­யுள்­ளமை கவ­லை­த­ரு­கி­றது. இந்த இன­வாத சக்­தி­களை தோற்­க­டித்து நாட்டை நல்­லி­ணக்­கப்­பா­தையில் முன்­கொண்டு செல்ல வேண்டும் என்­ப­தற்­கா­கவே நானும் முன்­னின்று இந்த ஆட்­சியைக் கொண்டு வந்தேன்.

எனினும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த சம்­ப­வங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வதில் இந்த அர­சாங்கம் தனது கட­மையை சரி­வரச் செய்­ய­வில்லை என்­பதை நான் ஏற்றுக் கொள்­கிறேன். அதற்­காக நான் கவ­லைப்­ப­டு­வ­துடன் முஸ்லிம் மக்­க­ளிடம் மன்­னிப்பும் கோரு­கிறேன். எனது ஆட்­சிக்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்ற போது அவற்றை ஒரே இரவில் முடி­வுக்குக் கொண்டு வந்தேன். அதற்கு ஒத்­து­ழைக்­காத பொலி­ஸாரை வீட்­டுக்கு அனுப்­பினேன். 

இன்று பொலிஸார் தமது கட­மையை சரி­வரச் செய்­ய­வில்லை என்­பது எனக்குப் புரி­கி­றது. இது வெட்­கத்­துக்­கு­ரி­ய­தாகும். பிக்­கு­க­ளாக இருந்­தாலும் சரி வேறு யாராக இருந்­தாலும் சரி அனை­வ­ருக்கும் சட்டம் சமமே. ஞான­சா­ரவை நான் தேரர் என்று அழைக்­க­மாட்டேன். ஞான­சார என்­றுதான் கூறுவேன். குற்­ற­வா­ளிகள் உடன் கைது செய்­யப்­பட வேண்டும். 

நான் விரைவில் ஜனா­தி­ப­தியை சந்­தித்து முஸ்லிம் சமூ­கத்தின் கவ­லைகள் தொடர்­பாக எடுத்துக் கூறுவேன். சட்­டத்தை நிலை­நாட்­டு­மாறும் குற்­ற­வா­ளிகள் யாராக இருந்­தாலும் கைது செய்து சிறை­யி­ல­டைக்­கு­மாறும் நான் வலி­யு­றுத்­துவேன். அதேே­பான்று நான் பிர­த­ம­ரி­டமும் இது பற்றிப் பேசுவேன். தமது அர­சியல் மற்றும் கட்சி நலன்­களை கருத்திற் கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முடி­யா­தி­ருப்­ப­தாக எவரும் கூற முடி­யாது. அர­சாங்கம் என்­பது நாட்டில் வாழு­கின்ற சகல மக்­க­ளையும் பாது­காக்க கட­மைப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் மக்கள் இந்த அர­சாங்­கத்தின் மீது அதி­ருப்தி கொண்­டுள்­ள­தாக நீங்கள் என்­னிடம் தெரி­வித்­தீர்கள். அது பற்­றியும் நான் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு தெரி­யப்­ப­டுத்­துவேன். நாம் எல்­லோரும் இணைந்­துதான் இந்த அர­சாங்­கத்தை ஆட்­சிக்கு கொண்டு வந்தோம். எனவே இவர்கள் தவ­றான பாதையில் செல்­வ­தற்கு நாம் இட­ம­ளிக்க முடி­யாது. நான் முஸ்லிம் சமூ­கத்­துடன் இணைந்து தொடர்ந்தும் இந்த விட­யங்­களில் கவனம் செலுத்த தயா­ரா­க­வி­ருக்­கிறேன். இதற்­காக நாம் விசேட குழு ஒன்றை அமைத்து இவ்­வா­றான செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்­து­வது தொடர்­பாக கலந்­து­ரை­யாடி அதற்­கான செயற்­றிட்­டங்­களை வரைந்து செயற்­பட வேண்டும். அதற்கு நீங்கள் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை, இச் சந்­திப்பில் பௌத்த சிவில் சமூக பிர­தி­நி­திகள் சிலரும் கலந்து கொண்டு தமது கவ­லை­களை வெளி­யிட்­ட­துடன் முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை கட்­டுப்­ப­டுத்த தாமும் முன்­னின்று செயற்­படத் தயார் எனத் தெரி­வித்­தனர்.

இச் சந்­திப்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் , அதன் உப தலைவர் ஹில்மி அகமட், சூறா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் உட்பட முஸ்லிம் பிரதிநிதிகள் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.

மேலும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பர அமில தேரர், பேராசிரியர் சரத் விஜேசூரிய, கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்டவர்களும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

11 கருத்துரைகள்:

இனவாதிகளை நாய்க்கூண்டில் அடைப்போம் என்று கூறினீர்கள், நல்லாட்சியை ஏற்படித்தும்படி
வேண்டினீர்கள். உங்கள் வார்த்தைகளை சிறுபான்மையினர் நம்பி வாக்களித்து நல்லாட்சி என்ற இந்த ஆட்சியை ஏற்படுத்தினோம்.

இப்போது நீங்கள் உங்கள் இயலாமைக்காக முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறீர்கள்.

இந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உங்கள் பங்களிப்பும்த்தான் மிகவும் கூடுதலானது.
ஜனாதிபதிக்கு இந்த நிலைமைகளை எடுத்துக் கூறுவதற்கு அவர் ஒன்றும் குழந்தை அல்ல.
நடப்பது அனைத்தையும் அறிகிறார் ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்.
பிரதமரும் அவ்வாறே..!

சிறுபான்மையோரின் ஆதரவு இல்லையென்றால்
இந்த ஆட்சி ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இந்த ஆட்சியும் சிறுபான்மையை வதைக்கிறது என்றால் எதிர் காலத்தில் நாங்கள் மக்கள் விடுதலை முன்னணிய்யுடன்தான்
கூட்டுச் சேர நிர்ப்பந்திக்கப்
படுவோம்.

அவர்களிடத்தில் -
இனவாதம் இல்லை,
மதவாதம் இல்லை,
சட்டம்
அனைவருக்குமே சமம்
என்ற நிலைப்பாடு உண்டு,
நீதியை நிலை நாட்டும்
எண்ணம் உண்டு,
அநீதிக்கு எதிராக
குரல் கொடுக்கும்
தைரியம் உண்டு..!

இவற்றை எல்லாம் அலசி ஆராயும்போது,
JVP என்ற ம.வி.
முன்னணியிடம் மட்டும்தான்
நீதியையும்,
நியாயத்தையும்
இந்நாட்டில்
சிறுபான்மையோர்
எதிர்பார்க்க முடியும்..!!

இப்படியொரு நிலைக்கு சிறுபாண்மை
மக்களைத் தள்ளிய பெருமை
இனவாதிகளையே சாரும்..!!!

=<>==<>==<>==<>==<>==<>==<>=

Neethikkagavum Niyayaththitkagavum muslimgal anaivarum JVP udan ondrinaivom

உங்களிடம் அதிகாரம் இருந்து இருந்தால் நிச்சயமாக நீங்கள் இணவாதிகளை வேட்டையாடி இருப்பீர்கள் மேடம்
உங்களை நாங்கள் குறை சொல்லவில்லை

இந்த அரசுக்குள் ஓழிந்து கொண்டு இருக்கும் இணவாதிகளை அடையாளம் கண்டு அவர்களின் பலத்தை வைத்து ஆட்டம் போட்ட இணவாதிகளை தற்போதாவது கண்டு தாமதமாக அதற்கு இப்போதாவது இந்த அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டு இருக்கிறது அது ஆறுதலாக இப்போது இருக்கிறது

இணவாதிகளை ஒடுக்க உங்களின் இந்த அரசு மீதான தூண்டும் பங்களிப்பு நடவடிக்கைகளுக்கு நன்றி மேடம்

This is a correct decision

This comment has been removed by the author.

Jubaideen ,Fajurdeen,Jawzan,Unknown ,

Well said ! But remember , decision to look at
JVP should have been taken long before. Turning
to JVP in frustration ,as a last resort is, not
really a great love towards the JVP because ,
again we are switching side NOT BASED ON THEIR
POLICY OR IDEOLOGY BUT BASED ON TWO THINGS:
1.FRUSTRATION AND ANGER WITH OUR TRADITIONAL
PARTNERS.
2.WE HAVE NO OTHER BETTER CHOICE.

It would have been a historic turning point to
all of us Muslims and JVP both , had we taken
that decision in the last two elections .
Nevertheless , switching with the understanding,
as of Jubaideen , is very healthy. When I spoke
to many , they have all now taken the same
decision.Let us hope JVP welcomes the move with
a warm heart .

👏👏👏👍👍👍👆🏽👆🏽

Madam you do some thing before ask excuse from Muslims , after that we will believe your words

Madam, SL law enforcement authorities are asleep pl try do something to wake them up.This would do for the Muslims and the country at least for now!

நாடகம்,நாடகம் இன்னும் தொடரும்

If you have the power, you will certainly be hunters madam We did not Your complain . .

this government has failed to identify the laggards in this government and to control their loyalists with their strength ...

thank you madam for your contribution to suppress opposing enemies

Post a Comment