June 01, 2017

ஞானசாரா விவகாரம், வாய்திறக்காமல் நழுவிய ஜனாதிபதி

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகளை தவிர்ப்பதற்காக  உரியவாறு சட்டத்தை அமுல்படுத்துவதுடன், அந்த முரண்பாடுகளை ஏற்படுத்தும் தரப்பினருக்கு விடயங்களைத் தெளிவுபடுத்தக்கூடிய பொது செயற்திட்டத்திற்காக அனைத்து மத தலைவர்களும் ஒரே அரங்குக்கு வர வேண்டும் எனத்  தெரிவித்த ஜனாதிபதி;, நாட்டில் ஒற்றுமையின்மையை விதைக்கும் இன, மத முரண்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாதெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற மதங்களுக்கிடையிலான ஆலோசனைப் பேரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்படும் மத முரண்பாடுகள் தொடர்பில் அந்தந்த மாவட்ட மட்டத்தில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதற்காக தனது ஆலோசனைக்கமைய அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அக் குழுவை மிகவும் வினைத்திறனாக செயற்படுத்த வேண்டியதன் முக்கியத்தவத்தையும் ஜனாதிபதி; சுட்டிக் காட்டினார்.

அத்துடன், மதங்களுக்கிடையிலான ஆலோசனைப் பேரவை ஆகக்குறைந்தது மாதத்துக்கு ஒரு தடவையாவது கூட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி இன்று இந்த கலந்துரையாடலில் முன்வைக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கை தொடர்பான விசேட விதந்துரைகளை தான் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்படும் இன, மத முரண்பாடுகளின் போது நடுநிலையாகவும், பக்கச்சார்பற்றும் செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அனைத்து மத, இன மக்களும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய சமாதானமான நாட்டையே அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அலுவலர்கள் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

நேற்றைய சந்திப்பில் உலமாக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் என பலர் பங்கேற்றனர். அவர்களின் கோரிக்கையாக இருந்தது ஞானசாரர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதே. எனினும் இச்சந்திப்பில் ஞானசாரா பற்றி ஜனாதிபதி ஒரு வார்த்தையானும் கூறவில்லை என்பதே ஆகும்.

11 கருத்துரைகள்:

யார் நழுவினாலும் இறைவன் தன் வாக்குறுதியிலிருந்து நழுவ மாட்டான்.

உங்களது பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதோர் ஆட்சி அதிகாரம் வேண்டுமா? இதோ உங்களுக்கு அருளப்பட்டிருக்கும் இந்த புனித ரமலானில் நீங்கள் தவறாது தொழுகிறீர்களே கூட்டான அதிகாலை சுபஹுத் தொழுகை, இதனை ராமலானுக்கு அப்பாலும் என்றென்றும் தொடர்ந்து தொழுது வாருங்கள். இதில் உறுதியாக இருங்கள்.

அப்போது உங்களுக்கு மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்போரின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய ஓர் வழியை சகலவற்றின் மீதும் ஆற்றல் பெற்ற ஏக இறையோனாகிய அல்லாஹ் நிச்சயமாக அமைத்துத் தருவான்.It is clear he is merely passing statements, so that it will be recorded and send to world.

All of acting on same agenda of oppressing minority in this land, but trying to so the world they are peace lovers.

No different from Mara, Gota, My3, Ranil and so on...

We keep TRUST in the GOD who created us and them.. We pray from the creator to punish all involved in inhuman racism regardless of their race or religion.

We are looking for an Unbiased Just full President to all citizen but not to one group.

சிறுபான்மையினரை அணைக்கும் அரசுகளை இனி இங்கு எதிர் பார்ப்பது ஏமாற்றத்தையன்றி வேறு எதையும் தராது!

Hope our president is just and compensate and rebuild the commercial places and mosques damaged due to racist attack. Leadership should safeguard the weak by his examplery characters. Anyhow most of the religions say injustice will be met with God's direct action so let us fear of God, who's one for all humanity.

MR.FASSY THATS THRU MASHA ALLAH

ஏன் நமது முஸ்லீம் தலைமைகள் இன்னும் இரத்தம் தோய்ந்த காவிகளை இயக்கும், பாதுகாக்கும் தலைமைகளிடம் சென்று நீதி கேட்க வேண்டும்?? முதலில் அல்லாஹ்விடம் உதவியை நாடுங்கள்... பின்னர் உங்கள் அரசியல் சலுகைகளை தூக்கி வீசிவிட்டு (தமிழ் தலைமைகளைப் போல்) களத்தில் நின்று போராடுங்கள்!

My3 is more Racist than Gnanasara- check his history. So no point in expecting anything from him or anyone.
Gnanasara will never be punished by our justice system.
In sha Allah , Allah will do justice the same way he did to Soma Hamuduruwo.
We Muslims mustn't forgot that we should be united.
The problem is when racism reduces our people start divide more by Jamaths and groups. So who knows may be Allah is making these sort of things in order for our Muslims to unite.

"The Muslim Voice" wishes to repeat our earlier comments on Political Unity and the need for the Emergence of a “NEW POLITICAL FORCE”, Insha Allah.
It is only through political unity that we can regain our dignity and rights, Insha Allah.
The Sri Lanka Muslim Community and its POLITICIANS should stand before a “MIRROR” and ask the question WHY? The “Yahapala Government” has no consideration to the Muslim Community issues or the “MUSLIM FACTOR” at all. It is clear that he “Yahapalana Government” is NOT going listen to the Muslims since bringing President Maithripala Sirisena and the Yahapalana government to power with nearly 800,000 votes plus the Tamil votes. As a result of our hypocrisy, Muslims in Sri Lanka do NOT have a POLITICAL VOICE. The Yahapalana government has forgotten that it was the minority Muslim votes and the Tamil votes and a very small fraction of the Sinhala votes the tipped the balance for the “Hansaya” to win the Presidential Elections in 2015. The en-block Muslim votes and Tamil votes to the Muslim candidates and the Tamil candidates made the Yahapalana government to get their majority in parliament in the 2015 general elections.
IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE, HONEST AND SINCERE THAT WILL PRODUCE “CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH HAS TO EMERGE WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE NEW ELECTIONS IN THE COMING FUTURE. It is by only expressing and showing our political strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or ideology, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are losing. We can even do this as an “Independent Group” or a “Political Alliance” INSHA ALLAH.

Noor Nizam, Convener – “The Muslim Voice”.

Absolutely true. We all hope griply with Allah Almighty without hesitation and He show us a victory path to overcome all our problems. If we hope with Him He never drops down.

இவன் அழைத்து இன்னும் நோம்பு கஞ்சி குடிக்க கொடுக்கவில்லையா?அதை கட்டாயமாக கொடுத்து இவங்களை மகிழ வையுங்கோ !!

Post a Comment