Header Ads



ஞானசாரருக்கு ஆதரவாக களமிறங்கிய, ஜனாதிபதிக்கு நெருக்கமான தேரர்

/அ அஹமட்/

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராகபக்‌ஷ நீதியமைச்சரை பயன்படுத்தி  ஞானசாரரை பாதுகாப்பதாக அரசாங்க தரப்பை சேர்ந்த சிலர் பொய்யான  குற்றச்சாட்டை சுமத்திவரும்  நிலையில் இதன் பின்னணியில் அரசாங்க தரப்பின்  அனுசரனைகளே இருப்பது தொடர்பில் மக்கள் மத்தியில் பல விடயங்கள் அம்பலமாகி வருவதை எம்மால்  அவதானிக்க முடிகிறது.

அறையில் ஆடியவர்கள் இன்று அம்பலத்தில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நல்லாட்சி முக்கியஸ்தர்களின் முகத்திரைகள் தற்போது கிழிந்தவண்ணம் உள்ளன. 

அந்த வகையில் ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க ஜனாதிபதிக்கு ஆலோசகர் போன்று செயற்படுபவரும் ஜனாதிபதிக்கு மிக மிக நெருக்கமாக இருப்பவரும் அவரின் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டவருமான ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் வலப்பனே சுமங்கள தேரர் களமிறங்கியிருந்தார்.

மத்திய வங்கி ஊழல், கல்குடா மதுபான உற்பத்தி சாலை ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுத்த விடயங்களிலும் முன்னாள் ஜானாதிபதி காலத்து ஊழல் தொடர்பிலும் அதிக அக்கறை எடுத்து கொண்டு செயற்பட்டுவந்த ஊழல் எதிர்ப்பு முன்னணியில் தலைவர் உலப்பனை சுமங்கள தேரர் கடந்த இரு வாரங்களாக ஞானசார தேரரை காப்பாற்ற கடும் பிரயத்தங்களை மேற்கொண்டிருந்ததோடு நீதிமன்றம் வரை வந்து அவருக்கு ஆதரவாக களமிறங்கி அவரை பிணையில் எடுக்க முடி மூச்சுடன் செயற்பட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக செயற்படும் சுமங்கள தேரர் போன்றவர்கள் ஞானசார தேரர் விடயத்தில் களமிறங்கியதும் ஞானசார தேரருக்கு வரலாற்றில் இல்லாத முறையில் இன்று மிக மிக வேகமாக  பிணை வழங்கப்பட்டிருந்த விடயமும் ஞானசார தேரரை பாதுகாப்பது ஜனாதிபதி தரப்பு என்ற சந்தேகத்தையும் மக்கள் மத்தியில் மேலும் வலுவடைய செய்துள்ளது.

3 comments:

  1. இறைவனையே நிராகரிக்கும் கூட்டத்திடமிருந்து நீதி நேர்மையான ஆட்சியை எதிர்பார்க்க முடியாது

    ReplyDelete
  2. ஊடகங்கள் சொல்வதெல்லாம் வேத வாக்குகள் அல்ல. இருப்பினும் ஞானசார தொடர்பில் அரசியல்வாதிகளால் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகள் சாரர் ஒளிந்திருக்கும் இடத்தையும் ஒளித்து வைத்திருப்பவரையும் பகிரங்கப்படுத்திவிடும் நிலையை அண்மித்திருந்தது.
    இதனால் அனைத்து ஏற்பாடுகளையும் அவசர அவசரமாகவும் கனகச்சிதமாகவும் திரைமறைவு அதிகாரங்களினூடாக செய்துமுடித்து தனது இனத்தின் அசிங்கமான அடையாளமொன்று பாதுகாக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. நாடகமெல்லாம் கண்டேன் ஆடும் my3யின் விழியிலே.

    ReplyDelete

Powered by Blogger.