Header Ads



ஞான­சா­ர­ரின் விட­யத்தில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டு சமா­தானம் நில­வு­கி­றது, இல்­லையேல் அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்திருக்கும்

-ARA.Fareel-

ராஜகி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊடாக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்­றுப்­ப­ணிப்­பாளர் டிலன்த விதா­னகே, 

‘முன்பு ஹலால் சான்­றி­தழ்கள் வழங்­கு­வ­தற்கு உல­மா­சபை கட்­ட­ணங்­களை அற­விட்டு வந்­தது. தற்­போது ஹலால் சான்­றிதழ் வழங்கி வரும் நிறு­வ­னமும் உல­மா­சபை போன்ற கட்­ட­ணங்­களை அற­விட்டு வரு­கின்­றது.

சில கம்­ப­னிகள் ஹலால் சான்­றி­த­ழுக்­காக மில்­லியன் கணக்­கான ரூபாக்­களை கட்­ட­ண­மாக செலுத்தி வரு­கின்­றன. இந்­நாட்டில் வாழும் 10 சத­வீ­த­மான முஸ்­லிம்­க­ளுக்­காக 90 வீத­மாக வாழும் பெரும்­பான்மை உட்­பட ஏனைய சமூ­கங்­களும் ஹலால் வரிக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றார்கள். 

எனவே, இந்த ஹலால் என்ற பெயரில் அற­வி­டப்­படும் நிதி எவ்­வாறு செல­வி­டப்­ப­டு­கி­றது. வரு­டாந்தம் எவ்­வ­ளவு தொகை அற­வி­டப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்பில் குழு­வொன்­றினால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். ஹலால் நிதி அர­சாங்­கத்­தினால் கண்­கா­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.

இதை­வி­டுத்து பௌத்த விஹா­ரை­களின் உண்­டியல் நிதி­யினை அர­சாங்­கத்தின் கண்­கா­ணிப்­புக்குக் கீழ் கொண்டு வரு­வ­தற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வசம் முயற்­சிகள் மேற்­கொள்­வது கண்­டிக்­கத்­தக்­க­தாகும். அஸ்­கி­ரிய பீட நிர்­வா­கி­யான பௌத்த பிக்கு ஒரு­வரின் தலை­மைத்­து­வத்தின் கிழ் இயங்­கி­வரும் தம்­புள்ளை ரங்கிரி ரஜ­ம­கா­வி­கா­ரைக்கு கிடைக்கும் நிதி­யினை மாத்­திரம் முகா­மைத்­துவம் செய்ய முயல்­வது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும். 

புதிய பள்­ளி­வா­சல்கள் நிர்­மாணம்
நாட்டில் இன்று பல பகு­தி­களில் எது­வித கட்­டுப்­பா­டு­க­ளு­மின்றி புதி­தாக பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன. வணக்­கஸ்­தலம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­படும் போது அதற்­கெ­ன­வுள்ள சில சட்ட விதிகள் பின்­பற்­றப்­ப­ட­வேண்டும். ஆனால் இலங்­கையில் எவ்­வித விதி­களும் பேணப்­ப­டாமல் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன.

வாகனத் தரிப்­பி­டங்­க­ளுக்கு இடம் ஒதுக்­கப்­ப­டாமல் பெருந்­தெ­ருக்­க­ளுக்கு அண்­மையில் பள்­ளி­வா­சல்கள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வதால் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­ப­டு­கி­றது. இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்தால் பௌத்­தர்கள் தீவி­ர­வா­திகள் என பிர­சாரம் செய்­யப்­ப­டு­கி­றது.

நீதித்­து­றையில் நம்­பிக்கை
எமது நாட்டின் நீதித்­து­றையின் மீது நாம் நம்­பிக்கை வைத்­துள்ளோம். ஞான­சா­ர­தே­ரரின் விட­யத்தில் நீதி நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது. நீதி நிலை­நாட்­டப்­பட்­ட­தாலே இன்று சமா­தானம் நில­வு­கி­றது. இல்­லையேல் தேவை­யற்ற அசம்­பா­வி­தங்கள் நிகழ்ந்திருக்கும்.

என்றாலும் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும். இன ரீதியான சட்டங்கள் இல்லாமற் செய்யப்படவேண்டும்.

ஞானசாரதேரரின் போராட்டம் வெற்றியளித்துள்ளது. அவரின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு மகா நாயக்க தேரர்கள் முன்வந்துள்ளார்கள். இது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்றார். 

No comments

Powered by Blogger.