Header Ads



முஸ்லிம்­களுக்கு எதி­ராக கிளர்ந்­தெழுவதோ, பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கு­வதோ புத்த போத­னை அல்ல

-விடிவெள்ளி-

அஸ்­கி­ரிய பீடம் உட்­பட எமது பிக்­குகள் முன்­ன­ணி­யி­னரால் ஞான­சார தேரர் விட­ய­மாக பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள கூற்­றுக்கள் எமது பௌத்த தர்­மத்­துக்கும் நாட்டு நலன்­க­ளுக்கும் பாரிய சவா­லா­கவே அமைந்­துள்­ளன. ஞான­சா­ரரின் உரைகள், நட­வ­டிக்­கைகள் அனைத்தும் எமது நாடு 30 வரு­டங்­க­ளாக எதிர்­கொண்ட, அனு­ப­வித்த கசப்­பான இருண்ட யுகத்­துக்கு இட்­டுச்­செல்­வ­தா­கவே உள்­ளன.

எனவே ஞான­சா­ரரின் சொல், செயல் எத­னையும் அங்­கீ­ரிக்க முடி­யாது என்­பதை எமது மகா­நா­யக்க தேரர்­களும் ஞான­சா­ரவின் ஆத­ர­வா­ளர்­களும் உணர வேண்டும். என ஜய­வர் த­ன­புர பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் தம்­பர அமில தேரர் தெரி­வித்தார். இலங்கைத் தகவல் திணைக்­களம்  நடாத்­திய இப்தார் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.  அவர் மேலும் கூறுகையில்,

30 வருட யுத்­தத்­தி­னால் துவண்­டு­போன எமது நாடு இப்­போது குற்­று­யி­ராகக் கிடக்­கி­றது. இந்­நி­லை­யில் இன­வாதம் பேசி நாட்டை பாதா­ளத்தில் தள்­ளு­வ­தல்ல எமது பணி. நாட்டில் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு மேலோங்கச் செய்­வதே எங்கள் அனை­வ­ரதும் முன்­னுள்ள பாரிய பொறுப்­பாகும். இதற்குப் பதி­லாக ஞான­சார தேரர் கூறு­வது போன்று முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக கிளர்ந்­தெழச் செய்­வதோ முஸ்லிம் பள்­ளி­வா­சல்­களைத் தாக்­கு­வதோ புத்த போத­னைக்கு முற்­றிலும் எதிர்­ம­றை­யா­ன­தாகும்.

இந்த அடா­வ­டித்­த­னங்கள் புத்த பெரு­மானை அவ­ம­திப்­புக்­குள்­ளாக்கும் செயல்­க­ளா­கவே உள்­ளன. புத்­த­பெ­ரு­மா­னையும் புத்த மதத்­தையும் பின்­பற்­றுவோர் அவ­ரது போத­னை­க­ளுக்கு அடி­ப­ணிந்து நடக்க வேண்டும்.இனங்­க­ளுக்கு இடையே பேதங்கள் காட்டி குரோ­தங்­களை வளர்க்கக் கூடாது.

இந்­தி­யா­வி­லுள்ள மிகப் பெரிய நதி­க­ளான கங்கா, யமுனா ஆகிய இரு நதி­களும் வளைந்­தோடி சமுத்­தி­ரத்தில் இரண்­டறக் கலக்­கின்­றன. அவ்­வாறு கலந்த பின் கங்கா, யமு­னா­வாக அவை இல்லை. மகா சமுத்­திரம் என்­றாகி விடு­கின்­றன. அதே­போன்றே இந் நாட்டில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவம் என்ற நான்கு மதங்­களும் கலந்தே வாழ்­கின்­றன.

இவை அனைத்தும் இலங்­கையர் என்ற நாட்­டுக்குள் ஒன்­று­ப­டு­கின்­றனர். எனவே ஒன்­று­பட்ட மகா சமுத்­திரம் போல இந்­நாட்­டி­லுள்ள அனைத்து இன, மத மக்­களும் ஒன்­றி­ணந்து நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். அப்­போ­துதான் நாடு அபி­வி­ருத்தி காணும் முன்­னேற்­ற­ம­டையும்.

எனவே, நான் நாட்டு மக்­க­ளி­டமும் எமது சங்க பீடங்­க­ளி­டமும் இன, மத பேதங்­களைத் தூக்கி எறிந்து விட்டு, நலி­வுற்­றி­ருக்கும் நாட்டை ஒன்­று­பட்டு கட்­டி­யெ­ழுப்ப எமது சக்­தி­களைப் பிர­யோ­கிப்போம் என்றே கேட்டுக் கொள்­கிறேன்.இன்று நாட்டில் கல்வி, சுகா­தாரம் உட்­பட எத்­த­னையே பிரச்­சி­னை­க­ளுக்கு நாடு முகம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

இத­னை­வி­டுத்து இனக் குரோ­தங்­களில் எமது கால நேரங்­களைப் பிர­யோ­கித்துக் கொண்­டி­ருந்தால் எப்­படி நாடு அபி­வி­ருத்தி காணு­வது? எனவே எனது பிக்­கு­மார்­களே இந்த நல்­ல­வி­ட­யங்­களில் உங்கள் அவ­தா­னத்தைச் செலுத்­துங்கள். இன­வாத செயற்­பா­டு­களை மறந்­து­வி­டுங்கள். 

ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கைகள் பௌத்­த­மதம் சார்ந்­த­தா­கவோ அல்­லது நாட்டின் நலன் கரு­தி­ய­தா­கவோ அமை­ய­வில்லை. எனவே அவ­ரது செயற்­பா­டு­க­ளுடன் கைகோர்ப்­பதோ அவ­ருக்கு உறு­துணை புரி­வதோ அல்­லது அங்­கீ­காரம் வழங்கி மேலும் வளர உத­வு­வதோ நாம் பௌத்த மதத்­துக்கும் நாட்­டுக்கும் செய்யும் துரோ­க­மா­கவே அமையும்.

ஞான­சார தேரரின் நட­வ­டிக்­கை­களை பார்ப்­போ­மே­யானால் அடி­யுங்கள், உடை­யுங்கள், தீ மூட்­டுங்கள் என்­றல்­ல­வாயுள்­ளன. அந்த அவரது விசமனத்தனமான போதனைகள் நாட்டைப் பாரிய அழிவுப் பாதையிலேயே தான் கொண்டு சென்றுவிடும். அதனால் எமது மகாநாயக்க தேரர்கள் அவருக்காக பரிந்து பேசுவதை விடுத்து அவர் விடயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். எனவே நாம் ஒவ்வொரு வரும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு நாட்டு நலனில் அக்கறை செலுத்துவோம். 

(ஏ.எல்.எம்.சத்தார்)

1 comment:

Powered by Blogger.