Header Ads



பிக்குகளுக்கு நவீன வாகனங்களை, தானம் வழங்கிய அமைச்சர்


பிரபல அமைச்சர் ஒருவரினால் தேரர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட வாகனங்களின் விபரங்களை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுக்கு, பிரபல அமைச்சரினால் அதி நவீன வாகனங்கள் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தன.

அதனை உறுதி செய்யும் வகையில் அந்த வாகனங்களின் இலக்கங்கள் மற்றும் பெறுமதி தொடர்பான தகவல்களை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய குறித்த அமைச்சரினால் 4 அதி சொகுசு வானங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன இலக்கம் wp CAU - 4709, மாதிரி VOLVO XC60 பெட்ரல், 17,500,000.00 ரூபாய் பெறுமதி

வாகன இலக்கம் wp CAU - 4377, மாதிரி VOLVO XC60 பெட்ரல், 17,500,000.00 ரூபாய் பெறுமதி

வாகன இலக்கம் wp CAU - 4374, மாதிரி VOLVO XC60 பெட்ரல், 17,500,000.00 ரூபாய் பெறுமதி

வாகன இலக்கம் wp CAU - 4475, மாதிரி MITSUBISHI MONTERO பெட்ரல், 26,128,700.00 ரூபாய் பெறுமதி

No comments

Powered by Blogger.