June 01, 2017

இலங்கை முஸ்லிம்கள், தற்காப்புக்கு தயாராகுவார்களா..?

-அபூ ஸுமையா-

*தூரத்தில் கேட்ட மரண ஓலங்கள் இன்று! இனவாதமாக எம் காலடியை எட்டியுள்ளன*.
ஆம்... இதுவரைக் காலமும் அயல் நாடுகளில் எம் உம்மத்தினரின் அழுகுரல்களே எம் காதுகளை துளைத்தன. தூரத்து அவலங்களே வீடியோக்களாக கண்களை கண்ணீரால் நனைத்தன. இன்று அந்நிலமை எம் காலடி வரை வந்து விட்டது. நாட்டுக்கு நாடு இவ்வும்மத்தின் இரத்தத்தை குடித்த மனிதமற்ற அரக்கர்கள்(?) வரிசையில் நம் நாட்டின் ஞானசார உருவெடுத்துள்ளார்.

*இந்த இனவாதி கத்தும் ஓசைகள் வெறும் ஓசையாகவே நித்தமும் இருக்கும் என நாம் நம்பினால்! உலக வரலாற்றைப் பற்றிய அறிவு நமக்கு போதாது என்பதே பொருளாகும்*.  நம்நாட்டு இனவாதமும், அசின் விராதுவின் சர்வதேச இனவாதமும் பினைக்கப் பட்டுள்ளமையும், அண்மைக்கால சர்வதேச நிகழ்வுகளிலும் இக்கூற்றுக்கான சான்றுகள் தெளிக்கப் பட்டுள்ளன என்பதை அறிவுடையோர் உணர்வர்.

இவ்வகையில் எமது நாட்டில் முளைத்துள்ள இனவாதமும் முளைத்த இடத்திலிருந்து மெதுமெதுவாக வழர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதே உண்மை. நாம் எண்ணிப் பார்க்காதவர்களால் கூட இவ்வினவாத விருட்சம் பசளையிட்டு வளர்க்கப் பட்டுக் கொண்டிருக்கின்றனவா என்ற ஐயமும் மேலோங்கி வருகின்றன. எது எவ்வாறாயினும் ஞானசாரவின் இனவாதத்தீ இடைக்கிடை அனைந்தது போல் தோற்றமளிப்பதானது! "எவ்வாறு தீயின் தனல் உள்ளே மறைந்து காற்றடிக்கும் போது தீயாக மாறும் பணியை செய்து வருகின்றதோ, அவ்வாறே! இனவாதமும் தம்பணியை அமைதியாக காரியமாற்றி, சந்தர்ப்பம் அமையும் போது தீயாக கக்குவதற்கான ஏற்பாடுகளை கச்சிதமாக  செய்து வருகின்றன என்பதே கடந்த கால அடையாளங்களாக உள்ளன.

பாவம் எம் சமூகம் நன்றாக ஏமாறப் பழகி விட்டது. வெளிப்படையானதை மட்டுமே நம்பிக்கை கொள்ள துனிந்து விட்டது. ஆதலால்தான் அவ்வப்போது அனல் கக்கும் இனவாத செயற்பாட்டின் பாதிப்புகளின்போது சுதாரித்துக் கொள்ளும் இச்சமூகம், அடுத்த நகர்வில் ஆழ்ந்து தூங்கி விடுகிறது.இடைக்கிடை ஏற்படுத்தப் படும் சிறுசிறு இனவாத முன்னெடுப்புகளானது! யுத்த தந்திர முறைமையில் பார்ப்பதாயின்! *"தமதும் எதிரியினதும் தகைமை பரிசீலித்தலாகவே கணிக்கப் படும்"*.

அவ்வகையில் எம் சமூகத்தின் பலம், பலவீனம் ஆகியவை பலமுறைகளில் பரிசீலிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். *உணர்வதென்றால் என்ன?*

உணர்வதென்பதானது இடத்துக்கிடம், செயலின் தாட்பரியத்திற்கேற்ப வேறுபடும். உபதேசத்தை உணர்வதும் எச்சரிக்கையை உணர்வதும் ஒன்றாகாது. அதே போன்றுதான் உபதேசத்தி்ன் பின்னர் எம்மை தயார் படுத்த வேண்டிய வழிமுறைகளும், எச்சரிக்கையின் பின்னர் எம்மை தயார் படுத்த வேண்டிய வழிமுறைகளும் ஒன்றாகாது. ஆனால் இத்தாட்பரியத்தை உணராத எம்மவர்கள் தன் பாதத்தைக் காக்கும் பாதனிக்காக செலவழித்து செய்யும் முயற்சியைக் கூட! தம் உயிர்,உடமை,உம்மத்தின் பாதுகாப்புக்காக செய்யத் தவறி நிற்பதானது பின்வரும் நபிமொழயையே நினைவூட்டி நிற்கின்றது.

*நபிகளார் கூறினார்கள்*.
“ஓர் உணவுத் தட்டில் இருக்கும் உணவைப் பங்கு போட்டு உண்பதற்காக ஏனையோரையும் அழைப்பது போல், முஸ்லிம்களாகிய உங்களைத் தாக்குவதற்காக ஏனைய சமூகத்தவர்கள் அனைவரும் ஒன்று திரளும் ஒரு காலம் மிக விரைவில் வரும்”. அப்போது அங்கிருந்த ஒருவர், “(அல்லாஹ்வின் தூதரே! அக்காலத்தில்) அந்த அளவுக்கு நாம் சிறுபான்மையாக இருப்போமா?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “இல்லை, நீங்கள் அதிக எண்ணிக்கையில்தான் இருப்பீர்கள். ஆனால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் *சருகுகளைப் போல் உறுதியற்றவர்களாகவே இருப்பீர்கள்*. உங்களைப் பற்றிய அச்சத்தை எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் அகற்றி விடுவான். உங்கள் உள்ளங்களில் *வஹ்ன்* குடிகொண்டு விடும்.” என்று கூறினார்கள். *வஹ்ன்* என்றால் என்ன?” (அல்லாஹ்வின் தூதரே )என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “இவ்வுலக வாழ்வின் மீது அதீத பற்றும், மரணத்தை வெறுக்கும் தன்மையுமே அது” என்று பதிலளித்தார்கள். நூல்:- அபூதாவூத்- 4297

நபிகளார் எச்சரித்த அந்தக் காலத்தில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. (அல்லாஹ் மிக அறிந்தவன்).

*வஹ்ன்* எனும் உலகப்பற்று எம் சமூகத்தை பிடித்தாட்டும் பயங்கர வியாதியாக மாறிவிட்டது என்பது மிகத் தெளிவாக உணர முடிகிறது. *தனக்கு நாடுவதை பிற சகோதரனுக்கும் நாடாத வரையில் ஒருவன் உண்மையான முஃமினாக முடியாது* எனும் மார்க்கத்தின் வழிவந்த நம்வர்களது சமகால நிலையானது, அடுத்த சகோதரனையோ, சமுதாய அமானிதங்களையோ  கவனத்தில் எடுக்காத சுயநல வாழ்வில் மூழ்கிப் போயுள்ள நிலையாகவே உள்ளது. எம் உள்ளங்களில் புற்றுநோயாக தாக்கம் செலுத்தியுள்ள இந்த வஹ்ன் எனும் தீய குணத்தை நம்மை விட்டும் துரத்தியே ஆக வேண்டும். நம்மையும் நம் சமூகத்தையும் அழிவில் இருந்து காக்க நாம் முன்னெடுக்க வேண்டிய தயாரிப்புகளில் மிக அடிப்படை அவசியமானதில் முதலாவது இதுதான்.

சுகபோக வாழ்க்கை போதையாக தலைக்கேறி வஹ்ன் எம்மை தோற்கடித்து விட்ட காரணத்தினால்தான் 51 முஸ்லிம் நாடுகளும் ஒன்றுபட்டு உலக முஸ்லிம்களின் அவலங்களுக்குக் குரல் கொடுத்து அவர்களது உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் தவிக்கிறோம்!

தன் ஆத்மாவோடு போரிட்டு வெல்ல முடியாத கோழைகளாக நாமிருக்கும்வரை எதிரியை வீரத்தோடு எவ்வாறு சந்திக்கப் போகிறோம். வஹ்ன் எனும் ஷைத்தானியத்தை நாம் வெல்லாதவரை! அன்னியர்கள் நம்மைக் குறிவைக்கும் இந்த ஆபத்தை எந்த வகையிலும் தடுத்து நிறுத்தவே முடியாது என்பதை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்தே ஆக வேண்டும். மாறாக! அரசியல் வாதிகளையும், முஸ்லிம் நாடுகளையும், தலைமைகளின் வாக்குறுதிகளையும் நம்பிக் கொண்டு பொறுப்பின்றி பயணிப்பதானது! தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திப் பார்ப்பதற்கு ஈடானதாகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும்மழையானது இனவாதத்தை கழுவிச் சென்று விட்டதாக எவரும் தவறாக எடை போட்டு விடாதீர்கள். மாறாக! வேகமாக எறிந்த இனவாதத் தீயின் கோரத்தையே இம்மழை சற்று அனைத்துள்ளது என்பதை உணர்வீராக. மீண்டும் மழை ஓய்ந்து காற்றும்
 வீசினால் இவ்வினவாதத்தீ கொழுந்து விட்டெரிய வாய்ப்புண்டு. *அல்லாஹ் பாதுகாப்பானாக*
رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ‌ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ‌‌ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ‌ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ  
“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” 2:28

2 கருத்துரைகள்:

Ask Dua , recite kunooth and go to sleep and wake up
next morning to watch a Mosque attacked and a shop
burnt ! THE TIME HAS COME AGAIN TO WARN MUSLIMS TO
GET READY FOR LOSSES.THE TIME HAS COME FOR MUSLIMS TO
STUDY THE GAME PLAN OF MAHINDA+MY3+RANIL POLITICS.
CAREFULLY WATCH IF MY3 MAHINDA SPLIT IS REAL !IIF IT
IS REAL,MY3RANIL CAN NOT AFFORD TO LOSE IN 2020.IF IT
IS JUST FOR THE GALLERY THEN THIS GOVT WOULDN'T CARE
TO LOSE AND SO WOULDN'T CARE FOR MUSLIM TAMIL VOTES.
AND THE OTHER THING IS MY3 NOT INTENDING FOR ANOTHER
TERM.HE MIGHT WANT TO RETIRE A GOOD RACIST BUDDHIST.
THESE DEVELOPMENTS ARE IMPORTANT FOR US TO CALCULATE
WHAT IS WAITING FOR US.DEEP INSIDE, MORE SINHALESE
WILL HAPPILY LOOK AT US AS FOREIGNERS FOLLOWING THE
FOOTSTEPS OF GNANASARA.THE POLICE,ARMY AND JUDICIARY
ARE ALREADY LEARNING TO GIVE US NEGLIGENT THIRD
GRADE RESPECT WHICH WILL INCREASE DAY BY DAY IF WE
DON'T DO SOMETHING TO REBUILD IT.OUR CURRENT LEADERS
WON'T DO IT BECAUSE THEY ARE ONLY TRAINED TO DESTROY
WHAT ALREADY EXISTED.WE NEED LEADERS LIKE SAMPANTHAN
AND ANURAKUMARA WHO ARE PRINCIPLED AND DISCIPLINED
AND DEDICATED TO REPRESENT A POLICY AND NOT READY TO
AUCTION THEIR VOTERS !

yes muzammil... you said right!

Post a Comment