June 01, 2017

முஸ்லிம்கள் பாடம் படிக்கவில்லையா..?

(ஜே.எம்.ஹாபீஸ்)

'காக்கை நிற்கப் பனம் பழம் விழுந்த மாதரி' என்பார்கள். முன் சிந்தனையின்றிய எம்மவர்களது செயல்கள் பலவற்றால் கீழே விழக்காத்திருக்கும் பழத்தில் வழியப் போய் அமர்ந்து பழத்தை விழுத்தாட்டிய பெயரை வாங்கிக் கொண்டது போலாகி வீடும். அண்மைய சில சம்பசங்களைப் பார்க்கும் போது 'காக்கை நின்றதால்தான் பழம் விழுந்தது' என்ற பெயரை வாங்கி அதன்பின் நாம் வாங்கிக் கட்டிக்கொள்ளும்; நிகழ்வுகள் சமூகத்தில் அங்காங்கே இடம் பெற்ற வண்ணம் உள்ளன. 

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். அல்லது சூடுகண்ட பூணை அடுப்பங்கரையை நாடாது என்பார்கள். ஆனால் கடந்த இரண்டு தினங்களில் நாம் கண்ட அல்லது அறிந்த சில விடயங்கள் சூடுகண்டும் திரும்பத்திரும்ப அடுப்படியை நாடிய கதையாக உள்ளது.

இதற்கு உண்மைச் சம்பவங்கள் சிலவற்றை உதாரணமாகத் தரலாம் எனக் கருதுகிறேன். 

முதலாவதாக கண்டி நகரில் ஒரு பஸ்வண்டியில் பர்தா அணிந்த பெண் ஒருவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு பாடசாலை மாணவன் மயங்கி விழுந்ததாகவும் பின்னர் அவனது உடலில் இரத்க்கசிவு இருந்ததாகவும் பக்கத்தில் இருந்த பர்தா அணிந்த பெண் ஊசியால் குத்தியதாகவும் பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டு அந்த விடயம்  (29.5.2017) கண்டி நீதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருபத்தையாயிரம் ரூபா சரீரப்பிணையில் அப்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசானை ஜூலை 25ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுபோதாக்குறைக்கு சில சமூக வலைத்தளங்களில் விச ஊசி என்றும் ஆற்கொல்லி ஊசி என்றும் மலட்டு தன்மை ஏற்படுத்தும் ஊசி என்றெல்லாம் கதை கட்டப்படுகிறது. இதனை வாசிப் போர் அல்லது இனவாதிகள் அதில் மறைந்துள்ள நாடகத்தை அறிய மாட்டார்கள். எனவே எதிலும் சற்று அவதானம் தேவை. கதை கட்ட ஆற்கள் களத்தில உள்ளனர். 

அடுத்தாக கண்டியை அண்மித்துள்ள பிலிமத்தலாவை - தந்துறை கிராமத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிடலாம். 

முகப் புத்தகங்களில் எழுதப்படும் விடயங்களுக்கு அடிக்குறிப்புகள் எழுத வேண்டாம் என்று பள்ளிவாயல்களிலும் சில சமூக ஊடகங்களிலும் அடிக்கடி நினைவு படுத்தப்பட்டும் கூட ஏன் மற்றவர் ஆத்திரமடையும் விதத்தில் அடிக்குறிப்பு எழுதவேண்டும் என்பது ஒரு கேள்வி. 

எம்மிடமுள்ள நல்ல விடயத்தை சொல்வதில் தவறில்லை. ஆனால் அடுத்தவரின் பிழையைக் கூறும் போது கவனமாக இருக்கவேண்டும். எமக்கு அது பிழையாகத் தெரிந்தாலும் சிலருக்கு அல்லது சில மக்கள் கூட்டத்திற்கு அது ஏற்றுக் கொள்ளப்பட் உண்மையாக இருக்கலாம். உதாரணமாக சிலை வணக்கம் பிழை என எமக்குத் தெரியும், ஆனால் பல கோடி மக்கள் சிலை வணக்கத்தில் இருக்கிறார்கள். அது தவறு என்பது அல்லது இணை கற்பிப்பது என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனை ஏலனப் படுத்த அல்லது கேளி செய்யக் கூடாது. அதனை அணுகுவதற்கு வேறு வழிமுறைகள் உண்டு. 

பேஷ்புக்கில் கொமெண்ட்ஸ் எழுதியதில் எத்தனை பேருக்குப் பிரச்சினையானது. எங்கே இப்படி ஒன்று நடக்கும் எனக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் வழி சமைக்கிறோம்.

அடுத்தாக தற்போது றமழான் ஆரம்பமான நிலையில் சில முஸ்லிம்கிராமங்களை அவதானித்த வகையில் இரவு 7.00 மணியின் பின் ஆனேக இளவதினர் பாதையில் சுற்றித்திரிவதை காண முடிகிறது. குறிப்பாக மடவளையை எடுத்துக்கொண்டால் மடவளை சந்திக்கும் பள்ளிவாயலுக்கும் இடைப்பட்ட சுமார் அரைக்கிலோ மீட்டர் தூரத்தில் நூற்றுக் கணக்கான வாலிபர்களையும் பாடசாலை மாணவர்களையும் காண முடிகிறது. சில வேளை இவர்கள் பள்ளிக்கு தராவீஹ் தொழுகை;காகச் செல்வதாக வீடுகளில் சொல்லி விட்டு வருபவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களில் ஆனேகர் கடைவழியேயும் பள்ளிக்கு வெளியேயும் பாதை நெடிகிலும் அரட்டை அடிப்பதைக் கடந்த தினங்களில் காணக் கூடியதாக இருந்தது. 

இவ்வாறு வீதி வழியே சுற்றும் இவர்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது தாய் தந்தையர்கள் இல்லையா அவர்கள் வீதியில் சுற்றித் திரிவதால் எமக்கென்ன என்று கேட்கலாம். இப்படியானவர்களால் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அது எங்கு போய் முடியும் என்பது தெரியாது. ஏனெனில் பழம் விழுவரை காத்துநிற்கிறார்கள். பலியை எம்மீது போடுவதற்கு.

அதேபோல் திருகோணமலை மாவட்டத்தில் நடந்த முன்று சிறுமிகள் பாதிக்கப்பட்ட துயரச் சம்பவத்தில் விசாரணை முடியும் வரை எதையும் சொல்ல முடியாது. ஆனால் நெருப்பில்லாமல் புகைவராது என்பார்கள். ஏதும் தொடர்புகள் இருந்தால் அது தவறு. ஆனால் இப்படியான விடயங்களை நாம் ஏன் தோற்றிக் கொள்ள வேண்டும். வழிய வழியப் போய் பிரச்சினையை உண்டு பண்ணி பின்னர் வீராப்புப் பேசுவதில் பயன் இல்லை.  

இவ்வாறு ஆனேக சம்பவங்கள் தினமும் நடக்கின்றன. ஒன்று நடந்தும் பாடம் படிக்கவில்லை என்றால் அதன் பின் கைசேதப்படுவதில் பயன் இல்லை. அடுத்வருக்குப் பயந்து கோளையாக வாழ்வது வேறு. தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ந்து நடப்பது வேறு. சிலர் நினைக்கிறார்கள் எமக்கு பூரண சுதந்திரம் உண்டுதானே என்று. சுதந்திரம் உண்டு. ஆனால் பள்ளியில் போய் தராவீஹ் தொழ உள்ள சுதந்திரத்தையும் பாதையில் மனம் போன போக்கில் சுற்தித் திரயும் சுதந்திரத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டாம்.

அதேபோல் தெற்கில் பேரினவாத மோதல்களுக்கு முஸ்தீபு போடப்பட்டு வரும் பொது வடக்கில் அல்லது கிழக்கில் உள்ள சகோதர தமிழர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டுமா? அரசியல், சமூக பிரச்சினை அல்லது உரிமைப்பிரச்சினை என்றால் ஓரளவு நியாயம் கற்பிக்க முடியும்.  கேடுகெட்ட வெட்கப்படக் கூடிய விடயங்களில் நாம் மூக்கை நுழைத்து எரியும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றியது போலாகுமல்லவா?

7 கருத்துரைகள்:

மூதூர் நல்லூர் மற்றும் அருகிலுள்ள தமிழ்கிராமங்களை ஆக்கிரமித்து முஸ்லீம்கிரமத்துடன் இணைக்க முஸ்லீம்கடும் போக்கு வாதீகள் முயன்றனர் தமிழர் எதிர்ததால் சிறுமிகளிடம் வீரத்தை காட்டினர் கோளைகள்..அதேபோல நிந்தாவூரில் இந்து மயானத்தை ஆக்கிரமித்து விளையாட்டு மைதானம் அமைக்க முயல்கின்றனர்.முஸ்லீம் கடும்போக்காளர்கள் செயற்பாடுகள் தமிழ் முஸ்லீம் கலவரத்தையே உண்டுபண்ணும்.

I think that 99% of all these incidents are created one to blames Muslims...do you you remember that prior to Aluthgsma incident...they accused that a Muslim shop keeper was trying to rape a small girl ..
Even MR talked about it in al Jazeera interview...I think that Singhalese ruling elites have got some master plan to harm Muslim communtiy..
To damage the life of Muslim communtiy in this country ...
It has been claimed some external forces are working on it ..
It is claimed that some internal forces are working on it ..
What is pathetic is our community leadership no where near to understand it ...
It is said that they have a secret plan to threat us in many ways ..
All these incidents are starting points ...to shatter peace of our community..
I blame our community too for this ..?
How and why?
because unlike in the past ..we do not have good political leaders to speak about it ..look at 21 MPs we have they do not any skills to speak out..who supported them or who voted them. It is Muslim public so now you see ..they do not have any knowledge or skills to debate about this ...you pay the price..this time vote for JVP to see the difference or ..

மிகவும் பயனுள்ள பதிவு

படிப்பில் கொஞ்சம் வீக்கு தான்.

அந்தோனி நீயே உனது படிப்பின் தராதரத்தை ஏற்றுக்கொண்டது மட்டுமே இன்றைய அதிசயம்

நிந்தவூரில் முஸ்லிம்களும் சிறுபகுதியினராக வாழும் தமிழர்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள்.நீர் எங்கோ இருந்து கொண்டு எல்லாம் ஆதாரத்துடன் தெரிந்தவர் போன்று பிதற்றி இனவாத தீயை வளர்க்கிறீர். நான் எப்போதே ஆக்கம் ஒன்றின் மூலம் சொன்ன இவ்வாறான இனவாதச் சிந்தனையாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்க வேண்டாமென்று.

உமது உபதேசத்தை இங்கு பாதிவிடும் உமது சகாக்களுக்கு வாழங்கி திருத்தும்.

Post a Comment