June 27, 2017

இஸ்­லா­மிய இன­வா­தத்தை மேலீட்ட, சில அமைச்­சர்கள் முயற்­சி - உதய கம்­மன்­பில

அஸ்­கி­ரிய பீடத்தை பகைத்­துக்­கொண்டு தேசத்­து­ரோக ஆட்­சியை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது என அர­சாங்கம் உணர்ந்­து ­கொண்­டுள்­ளது. 

எனவே தற்­போது அஸ்­கி­ரிய பீடத்­திற்கு பதி­லடி கொடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.  தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார், அவர் மேலும் தெரி­விக்­கையில், 

பெளத்த மதத்­திற்­கான முக்­கி­யத்­து­வத்­தினை குறைக்­கின்ற வகையில் புதிய அர­சி­யல­மைப்பு சூட்­ச­ும­மான முறையில் தயா­ரிக்­கப்­ப­டு­வதை அறிந்த பெளத்த பீடங்­களில் அஸ்­கி­ரிய பீடம் முத­லா­வ­தாக எதிர்ப்பை வெளி­யிட்­டது. நாட்டில் இன­வாதம் தலை­யெ­டுப்­ப­தாக காட்­டிக்­கொண்டு இஸ்­லா­மிய இன­வா­தத்தை மேலீட்ட சில அமைச்­சர்கள் முயற்­சித்த போதே கண்டி அஸ்­கி­ரிய பீடம் இவ்­வாறு எதிர்­ப்பினை வெளி­யிட்­டது.

அதனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் தேசத்­து­ரோக செயற்­பா­டு­க­ளுக்கு அஸ்­கி­ரிய பீடம் இட­ம­ளிக்­காது என்­பதை அர­சாங்கம் அறிந்­து­கொண்­டுள்­ளது. அதேபோல் அஸ்­கி­ரிய பீடத்­தி­னரை மெள­னிக்க வைத்தால் மாத்­தி­ரமே தற்­போ­தைய பய­ணத்தை தொடர முடியும் என்றும் அர­சாங்கம் அறிந்­து ­கொண்­டுள்­ளது.

 அதனால்தான் தற்­போது தம்­புள்ளை ரங்­கிரி விஹா­ரையை அர­சு­ட­மை­யாக்­கிக்­கொண்டு அதனால் அஸ்­கி­ரிய பீடத்­திற்கு பதி­லடி கொடுக்க அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதற்­கா­கவே விஹா­ரை­களில் உள்ள உண்­டி­யல்­க­ளையும் கூட சூறை­யாட முயற்­சிக்­கின்­றார்கள்.

அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வ­சத்­திற்கு ஒரு எச்­ச­ரிக்கை விடுக்­கின்றேன். விஹா­ரை­களில் உள்ள சொத்­துக்­களை சூறையா­டினால் அவர்கள் அடுத்த பிற­வியில் நாய்­க­ளா­கவும், காகங்­க­ளா­க­வுமே பிறப்­பார்கள் என்று வர­லாறு கூறு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மாமா­வான ஜே.ஆர்.ஜய­வர்­தன அன்று கெடம்பே விஹா­ரைக்கு தூபி அமைத்­துக்­கொ­டுத்து சொந்­த­மா­க்கிக்­கொண்டார். ஆனாலும் அவர் அதற்­காக அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை சமர்­ப்பிக்­க­வில்லை. இன்று அமைச்­சரவை பத்­திரம் சமர்­ப்பித்து விஹா­ரைகள் அர­சு­ட­மை­யாக்­கப்­ப­டு­கின்­றன.

எனவே மாமாக்கள் செய்யாத செயற்பாட்டைத்தான் இன்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் செய்ய முற்படுகின்றார். எமது நாட்டை முழுமையாக சுரண்டிச் சென்ற கொள்ளையர்கள் கூட விஹாரைகளின் உண்டியல்களில் கை வைக்கவில்லை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

5 கருத்துரைகள்:

If anyone likes to be born as crow or dogs, then he should steal bhuddhist vihara properties.

Hi hi hi

That means born again crows.

Or born again dogs.

மற்றவர்களது மார்க்க விடயங்களை பழிக்கவோ குறைகூறவோ வேண்டாம். உங்களது மார்க்கம் உங்களுக்கு எமது மார்க்கம் எமக்கு( லெக்கும் தீனுக்கும் வொலியதீன்) என்று கூறிவிடுங்கள்

இவன்ட கதையை கணக்கெடுக்க தேவையில்லை. நித்திரையில் உளறுபவன் மாதிரி

ISIS Racisit, உலகின் ஒவ்வொரு மதம் யிலும் சில நம்பிக்கைகள் இருக்கலாம். இதில் நக்கல் செய்வதற்கு என்ன உள்ளது?

இவரின் கொள்கை/தவறுகளை யாரும் விமர்சனங்கள் செய்யலாம், மதம் யை அல்ல.

Born again Tamil terrorist - he belongs to Buddhism and buddhism does not say that if anyone steal Vihara properties, then he will re-born as crows or dogs.

His remarks were totally ridiculous.

Post a Comment