Header Ads



மத­வாத நட­வ­டிக்­கை­களால் நல்­லி­ணக்­கத்­துக்கு பாதிப்பு - சட்­டத்­த­ர­ணிகள் சங்கம்


-MFM.Fazeer-

நாட்டில் மத நம்­பிக்கை கொண்டவர்களுக்கு எதி­ரான வெறுக்­கத்­தக்க பிர­சா­ரங்கள் மற்றும் வன்­மு­றைகள் அதி­க­ரித்து வரு­வ­தாக, இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் தெரி­வித்­துள்­ளது. 

இதனால், தேசிய நல்­லி­ணக்­கத்­திற்கு பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக, அச் சங்­கத்தின் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி  யூ.ஆர்.டி சில்வா தெரி­வித்தார்.

இதனால்  இது­போன்ற இன­வாத மற்றும் வர்க்க பேதங்­களை தோற்­று­விக்க முற்­படும் நபர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் பொலிஸ் மா அதி­பரை கோரு­வ­தாக அவர் தெரி­வித்தார்.

 சட்­டத்தின் மீதான உறுதிப்படுத்­தலைக் கொண்ட எந்­த­வொரு ஜன­நா­யக தேசத்­திலும் இத்­த­கைய மத­வாத, இன­வாத நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது எனவும் அது பாரிய விளை­வு­களை எற்படுத்தவல்லது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. ஒரு பட்டவர்த்தமான இனவாதியைக் கைதுசெய்ய தேசிய சர்வதேசிய அழுத்தங்கள் வந்தும் - அவனைக் கைதுசெய்ய ஜனாதிபதி இன்னும் தயங்கிக் கொன்டிருக்கிறார் என்றால் - ஜனாதி தன்னை தான் ஒரு இனவாதிதான் என்பதை நிட்சயப்படுத்துகிறாரா ???????????????

    ReplyDelete
  2. Inform to the president and wijeyadasa Rajapaksha

    ReplyDelete

Powered by Blogger.