Header Ads



மகிந்தவின் சாரதி, கப்டன் திஸ்ஸ கைது

மகிந்த ராஜபக்சவின் முன்னாள் சாரதியான கப்டன் திஸ்ஸ விமலசேன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று -13- கைது செய்யப்பட்டார்.
அரசாங்க சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே கப்டன் திஸ்ஸ விமலசேன கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதிவான் சனிம  விஜேபண்டார முன்னிலையில் அவரை காவல்துறையினர் முன்னிறுத்திய போது. எதிர்வரும், ஜூன் 27ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
முன்னதாக, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் கப்டன் திஸ்ஸ விமலவீர தொடர்புபட்டிருந்தார் என்றும்,  அவரை குற்ப் புலனாய்வுப் பிரிவினர் தேடி வருவதாகவும், தகவல்கள் வெளியாகியிருந்தன.
இராணுவ அதிகாரியான அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கப்டன் திஸ்ஸ நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.