June 26, 2017

அமெரிக்கத் தூதுவரின் இப்தாரும், பங்கேற்றவர்களின் விளக்கமும்..!!

-அப்துஸ் ஸமத்

அண்மையில் மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த அமெரிக்கத் தூதுவருடன் முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் மேற்கொண்ட சந்திப்புத் தொடர்பாக பலவாறான விமர்சனங்கள் எழுப்ப்பபடுகின்றன. நம்நாட்டில் முஸ்லிம்களுக்கென பிரத்தியேகமாக அமுல்படுத்தப்படும் திருமண சட்ட ஏற்பாடுகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்தை அமெரிக்க தூதுவரிடம் முஸ்லிம் பிரமுகர்கள் 'அழுத்தாமாக' முன்வைத்ததாகவும், 'அவ்வாறு செய்தது சரிதானா?' என்பதனையும் அடிப்படையாகக் கொண்டே இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த சந்திப்பு பற்றி தெரிய வருவதாவது...

மட்டக்களப்பிற்கு வருகை தந்திருந்த அமெரிக்கத் தூதுவர் இப்பிராந்திய முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றினையும் இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். பல ஊர்களையும் சேர்ந்த சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர், உலமாக்கள் புத்திஜீவிகள் பெண்கள் என பலரும் பங்கு பற்றியிருந்தனர்.

முஸ்லிம்களோடு தொடர்புபட்ட மூன்று விடயங்கள் பற்றி அமெரிக்கத் தூதுவர் இதன் போது கருத்துரைத்திருக்கின்றார்.

முதலாவதாக , அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேலோங்கி வரும் இனவாத நடவடிக்கைகளைக் கண்டித்து தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். அடுத்ததாக கிழக்கில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் காணிப்பிரச்சினை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்தோடு தமது பரகசினையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.  அத்தோடு மிக நீண்ட காலமாக இந்நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டிருக்கிறார்.

இந்த மூன்று விடயங்களுமே நமது சமூகத்தோடு மிக நெருங்கிய விடயங்களாகும். இவை பற்றி அமெரிக்காவின் உயர் இராஜாங்க தந்திரி ஒருவர் உரையாட முற்படும் போது எவரும் மௌனம் காக்க முடியாது. அந்த வகையில் இந்த விடயங்கள் தொடர்பான தமது நிலைப்பாடுகளை அங்கு கலந்து கொண்டவர்கள் அமெரிக்கத் தூதவருக்கு எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அந்த வகையிலேயே முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்த விடயம் தொடர்பாகவும் அதில் கலந்து கொண்ட முஸ்லிம் பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதுகையில் "திருமண- விவாகரத்து சட்டம் திருத்தப்பட வேண்டும் என முஸ்லிம் பிரமுகர்கள் வலியுறுத்தியதாக"  அமெரிக்கத் தூதுவர் கருத்து வெளியிட்டு இருக்கிறார். இதனை மையமாகக் கொண்டே பலவாறான விமர்சனங்கள் எழுதப்பட்டுள்ளன.

"  முஸ்லிம் தனியார் சட்டம் என்ற சரீஅத் சட்ட நடைமுறைகளை மாற்ற முனைவதை  அனுமதிக்க முடியுமா..?" " இதனை மாற்றித் தருமாறு அமெரிக்காவிடம் கோருவது முறையானதா..? " 

என்ற அடிப்படையிலேயே காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

வழமை போல் நமது 'முகநூல் வீரர்கள்' உணர்ச்சி கொப்பளிக்க கருத்துக்களை எழுதித் தள்ளியிருக்கிறார்கள். தனிப்பட்ட அரசியல் ரீதியான குரோதங்களும் இந்த விமர்சனங்களை ஊக்கப்படுத்தியிருக்கின்றன என்பதும் தெளிவாக தெரிகின்றது.

இவற்றை பார்க்கும் போது,  அறிவு பூர்வமாக எவ்வாறு இவ்வாறான விடயங்களை நோக்குவது என்பதில் நம்மத்தியில் காணப்படும் வழமையான தடுமாற்றம் இங்கும் தெரிகிறது.

இவ்விடயத்தைப் பொறுத்தவரையில் நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு அடிப்படை உண்மை இருக்கிறது. 

அதாவது, நம்நாட்டில் அமுலில் இருக்கும் முஸ்லிம்களுக்கான தனியார் (திருமண-விவாகரத்து) சட்டம் என்பது முழுமையான இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை கொண்டு உருவாக்கப்பட்டதல்ல. அதில் இஸ்லாத்திற்கு முரணான  பலஅம்சங்கள் சட்டமாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக, இஸ்லாம் ஹறாமாக்கியுள்ள சீதனக் கொடுக்கல் வாங்கல்கள் இந்த தனியார் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.  அது போலவே, அல்குர்ஆனினால் பல நிபந்தனைகளுடன்  அனுமதிக்கப்பட்ட பலதார மணம் என்கின்ற விடயம் இலங்கையின் தனியார் சட்டத்தில் எவ்வித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்படுத்துகின்ற குடும்ப மற்றும் சமூக சீரழிவுகள் ஏராளம். மேலும், திருமணம் என்பது ஆண்-பெண்ணிற்கிடையிலான ஒரு ஒப்பந்தம் என்ற வகையில் , பெண்ணின் சம்மதம் பெறப்படுவதனையும் , அது உத்தரவதாப்படுத்தப்படுவதனையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. ஆனால், அதற்கான எந்த ஏற்பாடுகளும் , தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் இல்லை. இது போலவேதான், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முரணான பல அம்சங்களை தற்போதைய இந்த தனியார் சட்டம் கொண்டிருக்கிறது. 

ஆக, இலங்கையில் காணப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முழுமையான இஸ்லாமிய சட்டமல்ல என்பதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

மேலும், நிர்வாக ரீதியாக பாரதூரமான குறைபாடுகளையும் தற்போதைய சட்டம் கொண்டிருக்கிறது. உதாராணமாக, நம் நாட்டு நீதித்துறை பதவிகளை வகிப்பதற்கு குறைந்த பட்ச தகைமைகள் வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில் , காதி நீதிபதியாக ஒருவர் நியமிக்கப்படுவதற்கு , அவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதை தவிர எந்தவொரு தகைமையும் அவசியம் என வலியுறுத்தப்படவில்லை. இதன் விளைவு , காதி நீதிமன்ற கட்டமைப்புக்களே சீரழியும் அபாயம் தோன்றியிருக்கின்றது. 

எனவே தான், தற்போதைய முஸ்லிம தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை கூட இருக்கிறது. இது எவ்வாறு திருத்தப்பட வேண்டும் என்ற முன்மொழிவுகளை காத்தான்குடி ஜம்இயத்துல் உலமாவும், சம்மேளனமும் கூட அனுப்பியிருக்கின்றன. இலங்கையிலுள்ள புத்திஜீவிகள் துறைசார் நிபுணர்கள் என எல்லோரும் இந்த மாற்றத்தை வரவேற்கிறார்கள்.

ஆக, இலங்கையில் காணப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது முழுமையான இஸ்லாமிய சட்டமல்ல என்பதனையும் அதனைத்திருத்தி மார்க்க அடிப்படைகளுக்கு முரண்படாத வகையிலும், முறையான நிர்வாக கட்டமைப்பை கொண்டதாகவும் முழுமையாக சீரமைத்துக் கொள்வதற்கான இந்த வாயப்பினை தவற விடக்கூடாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

அடுத்ததாக அமெரிக்கத் துதுவர் இதில் கருத்துத் தெரிவித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நியாயங்களையும், யதார்த்தங்களையும் புறக்கணித்துவிட முடியாது. அத்தோடு முஸ்லிம் பிரமுகர்கள் யாரும் அமெரிக்கத் தூதுவரைத் தேடிச் சென்று சந்திக்கவுமில்லை, இதில் உதவி செய்யுமாறு மன்றாடவும் இல்லை. அவரால் விடுக்கப்பட்ட அழைப்புக்கிணங்க நடந்த ஒரு கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டிய விடயங்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர்கள் தனியார் முஸ்லிம் சீர்திருத்த சட்டம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஜம்இயத்துல் உலமா, சம்மேளனம், புத்தி ஜீவிகள் என அத்தனை பேருமே இச்சட்டம் சீரமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது அதே கருத்தினை சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

 எனவே. சமூக நலன் சார்ந்த விடயங்களில் மேலோட்டமான பார்வைகளைத் தவிர்த்து ஆழமாக நோக்கி உண்மைகளையும், யதார்த்தங்களையும் பேசுகின்ற பக்குவத்தினை பெற முயற்சிக்க வேண்டும். அதற்கான தெளிந்த புத்தியையும், துணிச்சலையும் நம் எல்லோருக்கும் இறைவன் தரவேண்டும் எனப் பிரார்த்திப்போம்.

6 கருத்துரைகள்:

Yes. This article is a good one. We must think about our affairs deeply

These amendments are required. Also the age limit should be introduced. Qazhi judges should only be qualified persons. Anyone can express their opinion in this but a responsible body like ACJU should take the lead in upgrading the MMDA.

அமேரிக்க தூதரகம் அண்மை காலமாக வட-கிழக்கு விடயங்களில் அதிக அக்கரை எடுத்து வருகின்றது.

வட-கிழக்கு மக்கள்/அரசியல் தலைவர்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இதை மேலும் அதிகரிக்க கேட்கவேண்டும்.

American dogs do not have any right to talk about Muslim Law.

There is no need for any amendment or reforms to be included in Muslim marriage Law.

Muslim Parliamentarians should be vigilant and cautious against American thugs whose mentality is to help people in numerous ways and finally stab the people's backs.

Almost most of the American ambassadors work in all the countries are spy agents.

இப்படி அதிக அக்கறை எடுத்த இந்திய ராணுவம் இலங்கையில் கால்பதித்த அடுத்தநாள் தமிழர்களை நடுரோட்டில் குப்புறபடுக்கவைத்து ஈழம் கேட்டால் மூலம் கிழியும் என்று புரட்டி எடுத்ததைக் கண்டு நாங்கள் கண்ணீர் வடித்த கதைகளும் உண்டு. பாசிச புலிகளுக்கு இது எம்போது விளங்கும்.
அதேபோன்று அமெரிக்காவுக்கும் ஆதரவை வழங்கும்போது மூலத்தையும் ஆகாயத்திற்கு காட்டி வீதியில் .....

@ISIS Racist, இந்த வாய்க்கு ஒண்டும் குறைச்சல் இல்லை.

ஆனால், கடந்த மாதம் தான், ஞானசேர பிக்குவிற்கு பயந்து ஓடிப்போய் அமெரிக்க தூதுரின் காலில் தானே விழ வேண்டிய நிலை வந்தது தானே?

அமெரிக்கா கண்டமும் தெரிவித்தது தானே?

Post a Comment