Header Ads



அடிப்படைவாதத்தில் இருந்து, பௌத்தத்தை பாதுகாக்க வேண்டும் - ரணிலின் துணிகரப் பேச்சு

மதத்திற்குள் அடிப்படைவாதம் பரவியதால் ஏற்பட்ட சேதங்களை கண்டிருப்பதாகவும் மேற்குலகில் பௌத்த தர்மம் குறித்து அக்கறை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அடிப்படைவாதத்தில் இருந்து பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை போதி மரம் அமைந்துள்ள பகுதியில் நேற்று அமரபுர பௌத்த பீடத்தின் உபசம்பதா மகோற்சவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

சீனா, கொரியா போன்ற மகாயான பௌத்த தர்மம் உள்ள நாடுகள் மூலமே அமெரிக்க மக்கள் முதலில் பௌத்த தர்மத்தை அறிந்து கொண்டனர்.

நாங்கள் இலங்கையில் ஓல்கோட் அவர்கள் பற்றிய விடயங்களை ஆராய்ந்தாலும் இவர்களில் பலர் சீனா, ஜப்பான்,கொரியா, தாய்வான் போன்ற நாடுகளுடன் உறவுகளை வைத்திருந்தனர். இவர்களில் சிலர் வியட்நாம், கம்போடியா நாடுகளுக்கு வந்தனர்.

உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிய, தெற்காசிய, தென் கிழக்காசிய நாடுகளில் பௌத்த தர்மம் பற்றிய பாடநெறிகள் உள்ளன.

இதனால், பௌத்த தர்மம் குறித்து மேற்குலக நாடுகளில் உள்ள விசேட அக்கறை காட்டுகின்றனர். இது ஆச்சரியமான விடயம்.

மேற்குலக நாடுகளில் தற்போதுள்ள போன்ற முன்னேற்றம் எந்த யுகத்திலும் இருக்கவில்லை. தொழிற்நுட்பம் தகவல் தொழிற்நுட்பம் போன்ற அனைத்திலும் மேற்குலக நாடுகள் முன்னணியில் உள்ளன.

அவர்கள் மனநிலை என்ன என்பது குறித்து அறிய முன்னேற்றமான கருவிகளை கொண்டு ஆய்வுளை நடத்தி வருகின்றனர். தேராவாத பௌத்தம் தொடர்பாக அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த பௌத்த தர்மம் பற்றிய அறிவை பத்திரிகை, சஞ்சிகைகள் மூலம் பெற்று வருகின்றனர். பௌத்த மத போதனைகளில் கலந்து கொண்டு அறிவை பெறுகின்றனர்.

பௌத்த தர்மம் பரவுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும். தாய்லாந்தே பௌத்தம் பற்றிய அதிகளவான நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளது.

இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது. இந்த நிலைமையை நாம் மேலும் முன்னேற்ற வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. திரு ரணில் அவர்களே ஒல்கொட் என்பவர் யார் என்று உமக்குத்தேரியாத ? அவரை பற்றி இங்கு உள்ளவர்கள் எத்தனை பேருக்கு தெரியும் இலங்கையில் 1915 இல் முஸ்லிம் சிங்கள கலவரம் உருவாகுவதட்கு முக்கிய காரணகர்த்தா அவர்தான். அநாகரிக தர்மபால என்பவரை உருவாக்கியவர் இந்த ஒல்கொட்டும் அவர் மனைவியும்தான் என்பது இங்கு எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளனர்.இதனாலேயே அவர் கவுரவிக்கப்பட்டுஅவர் பெயரில் ஒரு வீதி அதுவும் colombin முக்கிய வீதி ஒல்கொட் மாவத்த என்று ஒரு வீதி ! அமைந்துள்ளது .............

    ReplyDelete

Powered by Blogger.